கரவெட்டியில் 25.12.1964 ல் பிறந்த ‘தோழர் கண்ணன’ என்றழைக்கப்பட்ட சுகுணன் பொன்னம்பலம் அவர்கள் லண்டனில் கடந்த 28.12.2010 யன்று காலமானார்.
கடும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் கண்ணன் அவர்கள் மருத்துவ சிக்சை எதுவும் பயனற்ற நிலையில் மரணத்தை தழுவினார் என்ற செய்தி அவருடைய குடும்பத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பெரும் இழப்பையும் கவலையையும் கொடுத்துள்ளது.
தோழர் கண்ணன் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்வி கற்கும் காலத்திலேயே தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தில் சேர்ந்து அதன் முன்னனிச் செயற்பாட்டாளராக இருந்தவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக உழைத்தவர்.
தோழர் கண்ணன் பேரவைத் தோழர்களுடன் மட்டுமல்ல மாற்று இயக்க உறுப்பினர்களுடன் நெருங்கிய நட்பைப் பேணியவர். தோழர்கள்; சண்முகதாசன் டானியல் இக்பால் சின்னத்தம்பி போன்றவர்களிடமிருந்து தனது மாக்சிய அறிவை வளர்த்துக் கொண்டவர். தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா போன்றவர்களுடன் புரட்சிகரப் பணிகள் புரிந்தவர். இந்தியாவில் நக்சலைட் தோழர்களான புலவர் கலியபெருமாள் தமிழரசன் சுந்தரம் போன்றவர்களுடன் மாக்சிய உரையாடல்களை மேற்கொண்டதுடன் அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்கு தன்னால் இயன்ற பங்களிப்புகளை வழங்கியவர்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித மாற்றத்திற்கும் இடங்கொடாது இறுதிவரை உறுதியாக இருந்தவர். அவர் எப்போதும் மக்களை நேசித்தார். தன்னுடைய இறுதி நாட்களில்கூட கரவை இளைஞர் ஒன்றியத்திற்காக பாடுபட்டிருக்கிறார் என்ற செய்தி அறியும்போது இத்தகைய சமூக அக்கறையாளன் தன்னுடைய உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் இவ்வளவு விரைவாக மரணத்தை தழுவியைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத்தூண்டுகிறது.
தோழர் கண்ணன் அவர்களின் புரட்சிகர பங்களிப்புகளை என்றும் நினைவு கூர்வோம். அவர் நினைவாக தொடர்ந்தும் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம். இதுவே புரட்சிக்காக உழைத்த கண்ணன் போன்ற தோழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
அவருடைய இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறக் கூடும் என அறிய வருகிறது. எனவே இது பற்றிய மேலதிக விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியலாம். ரகுபதி (லண்டன்)- 07552841228 .02086813256)
தோழர் கண்ணனின் மறைவுச் செய்தி துயரத்தினை ஏற்படுத்தியது. அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்.
தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை வட கிழக்கில் அரசியல் செயற்பாடுகளில் காத்திரமான வழியில் செயற்பட்டமைக்கு கண்ணன் போன்ற தோழ்ர்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது என்றே கருதுகின்றேன். அதற்கப்பால் இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும் அமைப்பை மக்கள் சார் அமைப்பாக வழிநடத்தியதிலும் முன்னுதாரமாகச் செயற்பட்டவர்.
கண்ணனின் மறைவுச் செய்தி பழைய நினைவுகளையும் கிளறுகிறது. பல முறை பல தடவை கண்ணனைச் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அமைப்புச் சாராத ஒருவன் என்ற போதும் என் மீது பாசமும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் கண்ணன்.
சந்திக்கின்ற போதெல்லாம கொள்கைப்பற்றும் அயராத உழைப்பும் கொண்டு இயங்கியனைக் கணாமுடிந்தது. அதே வேளை நேரம் ஒதுக்கி நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் தவறுவதில்லை.
புலிகளால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அயாராது அவற்றை எதிர்கொண்டு வாழ்ந்தவர் கண்ணன்.
இனியெப்போது இப்படியொரு தோழனைச் சந்திப்போம்.
விஜய்
சென்னையில் இருத்த நாட்களில் எனது அயலில் இருந்து சுகுணன் என அறிமுகமான தோழர்… நண்பர்… கண்ணன் 23 வருடங்களின் பின் இங்கிலாந்தில் வாழ்ந்து இறந்த செய்தி அறிய மனம் சங்கடப்படுகிறது. எம் வாழ்நாளில் இப்படி ஒரு சிலரையே சந்திக்கிறோம், கண்ணன் ஓர் மார்க்கசிய ஜனநாயகவாதி மட்டுமல்ல எல்லோருடனும் எளிமையாகப் பழகும் நற்பண்புள்ள ஓர் நண்பர்… தோழர்.
நாம் கண்ட… காணும்… எத்தனையோ பேர் தடம் மாறி… செல்லும் போது, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித மாற்றத்திற்கும் இடங்கொடாது இறுதிவரை உறுதியாக தோழர்… நண்பர்… கண்ணன் இருந்தவர் என அறியும் போது மனதில் ஒரு பக்கத்தில் ஓர் பூரிப்பும், மறு பக்கத்தில் இத்தனை வருடங்களின் பின் இறப்பு செய்தி மூலம் அறியும்போது 23 – 25 வருடங்களின் முன் பழகிய நினைவுகளுடன் மனம் வெதும்புகிறது.
நாம் செல்லும் பாதையில் இப்படி ஓர் சிலரையே காண்கிறோம்…
உழைக்கும் மக்களின் ஜக்கியம் மூலம் ஜனநாயகப் புரட்சிக்காக உழைத்த தோழர்… நண்பர்… கண்ணன் நினைவாக தொடர்ந்தும் அவர் சென்ற ஜனநாயகப் புரட்சி பாதையில் செல்வோம்… இதுவே ஜனநாயகப் புரட்சிக்காக உழைத்த கண்ணன் போன்ற தோழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்…!!!
அவருடன் சேர்த்த தோழர்கள்… நண்பர்கள்…குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்…!!!
நண்பர் அலெக்ஸ் என் அயல் வீடாக இருக்கலாம் நாம் சந்தித்து பேசிச் சிரித்திருக்கலாம் ஆனால் அடையாளம் தெரியாததால் அல்லாடுகிறோம்.நான் உங்கள் சிந்தனையின் ரசிகன்.அதிக நாளாய் உங்கள இங் கு காணவில்லை?? புயல் அடிக்கும் காற்றீலும் தீவுப்பகுதி மீனவன் கடலுக்கு செல்ல மறப்பதில்லை நான் கமக்காரன் இருந்தாலும் மீனவனைப் பிடிக்கும் ஏனென்றால் அவனது போராடும் குணம்.
I was deeply saddened to hear of his loss. My thoughts are with all of our friends.
Words seem inadequate to express the sadness I feel.
May his memories give us strength
– Arul –