கிழக்கு மாகாணம் அம்பாறை திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்த இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டதுடன் தொழில்புரியும் இடங்களையும் படையினர் அறிந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் தேடுதல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் எவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.