பிரிட்டனுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸின் நடவடிக்கையில் தவறு இருப்பதாகவும், அவர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரிட்டனுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் இடையில் முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸ் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பு பர்மிங்காமில் நடைபெற்றிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறும் நோக்கில் கிறிஸ் நோனிஸ், ரணிலைச் சந்தித்திருந்தார். எனினும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, கிறிஸ் நோனிஸ் மீதுதான் தவறு என்று குற்றம் சாட்டிய ரணில், அவர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஷேணுகா செனவிரத்தின இலங்கையின் மூத்த ராஜதந்திரிகளில் ஒருவர். வெளிநாட்டமைச்சின் செயலாளர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதற்கோ, மரியாதைக்குறைவாக நடத்துவதற்கோ எந்தவொரு ராஜதந்திரிக்கும் உரிமை கிடையாது. இவற்றுக்கு மேலாக அவர் ஒரு பெண். எனவே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பில் கிறிஸ் நோனிஸ் உடனடியாக ஷேணுகாவிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ரணில் வலியுறுத்தியிருந்தார்.
கிரிஸ் நோனிஸ் என்ற அதி உயர் ராஜதந்திரி சஜின் வாஸ் என்ற ரவுடி அமைச்சரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ரனின் மூச்சு விடவில்லை. கிரிஸ் நோனின் – சஜின் வாஸ் விவகாரம் இப்போது மகிந்த குடும்பத்தின் குடும்ப விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில் மகிந்த அரசால் எதிர்க்கட்சித் தலைவராகப் பேணப்படுவதாகக் கருதப்ப்படும் ரனில் விக்ரமசிங்கவின் கருத்து பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
” ஷேணுகா செனவிரத்தின இலங்கையின் மூத்த ராஜதந்திரிகளில் ஒருவர். வெளிநாட்டமைச்சின் செயலாளர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதற்கோ, மரியாதைக்குறைவாக நடத்துவதற்கோ எந்தவொரு ராஜதந்திரிக்கும் உரிமை கிடையாது. இவற்றுக்கு மேலாக அவர் ஒரு பெண். எனவே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பில் கிறிஸ் நோனிஸ் உடனடியாக ஷேணுகாவிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் ” – ரணில் விக்கிரமசிங்க
ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்சவை பாதுகாப்பதாக எவராலும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கிறிஸ் நோனிஸ், ஷேணுகாவை வேசை என கூறியதையடுத்தே தாக்குதலுக்கு உள்ளானார். இப்படியான தாக்குதல் நடந்தவுடன் நோனிஸ் அந்த நாட்டு போலீசாரை அழைத்திருந்தால் சஜின் வாஸ் கைதாகியிருப்பார். ஆனால் உண்மை தெரிய வந்ததும் , நோனிஸ்தான் அதிக தண்டனைக்கு உள்ளாவார். ஒரு பெண்ணை அநாகரீகமாக ஆபாசமாக பேசினார் என்று. எனவே நோனிஸ் மௌனமாக இருந்தார்.
ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி அமைதியாக இருந்ததற்கு வேறு காரணம் இருக்க முடியாது. எனவே ரணிலது பேச்சு நியாயமானது. எதிரி என்பதற்காக நியாயத்தை – அநியாயமாக சொல்ல வேண்டியதில்லை. ரணில் அந்த வகையில் பாராட்டப்பட வேண்டியவர்.
மாயா,
நீங்கள் சொல்வதுபோல நோனிஸ் தண்டனைக்குள்ளாக மாட்டார். அமெரிக்காவில் முதலில் யார் மற்ரவரில் கைவைக்கிறாரோ ( அடிகிறாரோ) அவரே கைது செய்யப்படுவார். நீங்கள் யாரை வேண்டும் என்றாலும் திட்டலாம். எவ்வளவு கீழ்த்தரமாகவும் திட்டலாம் ஆனால் அடிக்கமுடியாது. ஒபாமாவை எப்படியெல்லாம் திட்டுவார்கள் ஆனால் அவர்களைக் கைது செய்ய முடியாது. ஆனால் முதலில் அடித்தவர் கைது செய்யப்படுவார். ஆகவே சஜின் வாசே கைது செய்யப்பட்டிருப்பார். விருந்து நடந்த இடம் ஒரு தனிநபர் இல்லம் என்பதால் பொலிசாருக்கு சில விடயங்கள் இலகுவாக இருந்திருக்கும்.
இதிலிருந்து நோனிசுக்கு சட்டம் தெரியவில்லை என எடுத்துக் கொள்ளலாமா? டிப்ளோமசி தெரியாது என எடுத்துக் கொள்ளலாமா?
ரனில் ஒருநேர்மையான கனவான் என்பது இதன் மூலம் நிருபணமாகிறது, புலி தலிவருக்கு மட்டும் அது புரியாமல் போனது
ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி அமைதியாக இருந்ததற்கு தான் இலங்கை திரும்பும்போது தானோ அல்லது தனது குடும்பமோ அங்கத்தவர்களோ தாக்குதலிற்கு உள்ளாகலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம். தாமரா குணநாயக என்ற பெண் ராசதந்தரியே சேனகாவினதும் இந்த மகிந்தரின் குண்டர்கள் பற்றியும் விளக்கியுள்ளார். மகிந்தரின் குண்டர்கள் பெண்களின் உரிமைக்காகத்தான் பொங்கினர் என்பது பெரும் நகைச்சுவை.
பதவியை விட்டு விலகினாலும் அதுதானே நடக்கும்?