மைத்திரிபால சிரிசேன வெற்றிபெறுவதை அடுத்து தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையகதுள் விசேட அதிரடிப்படையினர் நுளைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை மகிந்த ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலைச் செல்லுபடியாக்கி மேலும் இரண்டு வருடத்திற்கு ஆட்சியை நீடிப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அது தொடர்பான ஆலோசனைக்காகவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மகிந்த நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே தேர்தல் முடிவுகள் தாமதமாக்கப்படுகிறது என கொழும்பில் வத்ந்திகள் உலாவுகின்றன.
ஜனாதிபதி மாளிகை மற்றும் கொழும்பின் பிரதான பகுதிகளில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் கறுவாத் தோட்டம் பகுதியிலும் அதிக இராணுவ நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் நடக்கும் குத்துவெட்டுக்கள் அன்னிய இராணுவத் தலையீட்டிற்காகத் திட்டமிடப்பட்டவையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. ஏகாதிபத்தியங்களால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையும் அதன் செல்வாக்கில் நடத்தப்பட்ட தேர்தலும் இன்னும் மனித் உயிர்களைப் பலிகொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஒரு மணி நேர இடைவெளியின் பின்னர் தேர்தல் முடிவுகள் மீண்டும் வெளியாக ஆரம்பித்துள்ளன. பின்வரும் இணைப்பில் முடிவுகளைப் பார்வையிடலாம்.
http://www.ustream.tv/channel/news-1st—sri-lanka









http://sirasatv.lk/live/
http://www.adaderana.lk/
Without minorities votes MS can’t get this slim margin victory…
For Muslim votes, all Credits for BBS…
For Tamils votes, MR missed to solve Tamils Basic-Main issues…
மகிந்த இலகுவான வகையில் தோல்வியை பெற முயலமாட்டார் என்ற கருத்து நிலவியது. மேலும் அடக்குமுறை ஆட்சியை எவ்வழியிலாவது தொடர்வார் என்றும் நம்பப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் சனநாயக ரீதியில் இடம் பெறும் என தெரியவருகிறது. அரச நிர்வாகம் மகிந்தவிற்கு எதிர்ப்பாக இருப்பதாக – ஆதரவற்றிருப்பதாக கருதப்படுகிறது. மகிந்தவை கைவிட்டிட்டோம் (அத்தஅரணவ) என்று பல சிங்களச் சகோதரர்கள் கூறியதை செய்திருக்கிறார்கள்.
இரண்டாண்டுகளுக்கு முன் கிடைத்த சந்தர்பத்தை சிங்கள தலைவர்கள்-மக்கள் சரியாகப் பயன்படுத்த சர்வாதிகார ஆட்சியை மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பது ….. ! இது சர்வாதிகரத்தை ஒழிக்கும் போராட்டமாகத் தொடரவேண்டும். அதற்கு மக்கள் தயாரகவேண்டும். கடந்த கால அனுபவங்கள் இந்த ஜனாநாயக ஆட்சி மாற்றத்தின் பெறுமதியை அதிகம் உணரச் செய்கிறது. இதனை மக்கள் தக்க வைத்துக் கொள்ள போராடவேணடியிருக்கும். – விஜய்
நவ தாராளமய யுகம் MY3 புரட்சியால் இன்னும் வெடிக்கக்கூட இல்லை. அதற்குள் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் மண்ணாங்கட்டி போராட்டம் என்று அலம்புவது சிரிப்பூட்டுவது.