ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் வியப்பை ஏற்படுத்தவில்லை. அவ்வெற்றியை உறுதிப்படுத்த மகிந்த ராஜபக்ச முகாம் கையாண்ட உபாயங்கள் பல சட்டவிரோதமானவையும்முறைகேடானவையும் என்பதில் எவருக்கும் மறுப்பிருக்காது.மக்கள் அவ்வாறான ஒழுங்கீனங்கட்குப் பழக்கப்பட்டுவிட்டனர் என்றுங்கூறலாம். எனினும்,தேர்தல்’பயங்கரவாதத்திற்கெதிரானபோரில்’வெற்றிக்கு
உரிமைகோருவதையேமுதன்மைப்படுத்தியதையும்,ஊழல்,குடும்பஆதிக்கம்,
குற்றச்செயல்களின்அதிகரிப்பு,சமூகவன்முறை,சனநாயகமறுப்பு,அதிகாரத்துஸ்த்
பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுக்களைவிட்டால், கொள்கை அடிப்படையில் எந்தவேறுபாடுகளையும் கொண்டிராததையும் நோக்கினால் மக்கள் முன்னிருந்த தெரிவு உண்மையில் அற்பமானதே. ராஜபக்ச ஆட்சியில் நகரங்களில் மக்கள் துன்பப்பட்ட அளவுக்கும் கிராமங்களில் இன்னமும் துன்பப்படவில்லை. ஜே.வி.பி, யூ.என்,பி. கூட்டணி ஒரு எலியும் தவளையும் கூட்டணி போன்றது.அதனிடமிருந்துதேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுஎதையும் எதிர்பார்க்க நியாயமுமில்லை.
சரத் பொன்சேகா தேசிய சிறுபான்மையினருக்கு விருப்பான எந்தவாக்குறுதியையும் முன்வைக்கவில்லை.தமிழ் தேசியக் கூட்டணிமிகப்பலவீனமான காரணங்கட்காக பொன்சேகாவுக்குத் தெரிவித்த ஆதரவைப் பேரினவாதக் கண்ணோட்டத்தில் திசைதிருப்பி சிங்களவாக்காளர்களை ராஜபக்சாவுக்கு ஆதரவாகத் திருப்புவதில் கெல உறுமயவும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த விமல் வீரவன்சவும் வெற்றிபெற்ற அளவுக்குத் தமிழர்களைப் பொன்சேகாவுக்கு ஆதரவாகத் திருப்புவதில் த.தே.கூ. வெற்றி பெற்றதா என்பது ஜயத்திற்குரியதே.
இவ்வாக்களிப்பை நோக்கும்போது ரணில் விக்கிரமசிங்கா 2005இல் பெற்ற சிறுபான்மைத் தேசிய இனத்தவரின்வாக்குகளை விட அதிக வாக்குக்களை சரத் பொன்சேகா எந்தத் தொகுதிலும் பெற்றாரா என்று கூறுவதுகடினம். சிங்கள ஊடகங்களும் கணிசமான அளவுக்கு ஆங்கில ஊடகங்களும் முழு அரச இயந்திரமும் ராஜபக்சாவுக்கான கடும் பிரசாரத்தை முன்னெடுத்த அளவுக்குத் தமிழ் அச்சு ஊடகங்கள்(தினகரனும்,முஸ்லீம்வாரஏடான விடி வெள்ளியும் தவிர்த்து) பொன்சேகாவுக்காகப் பிரசாரம் செய்தன.
ராஜபக்சவுக்குச் சாதகமான கருத்துக்களைச் சிறிய அளவிலேனும் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் ஊடகங்கட்கு இருந்தது. எனினும் செய்திகள் கையாளப்பட்ட விதம் தெளிவாகவே பொன்சேகாவுக்குச் சாதகமான முறையில் அமைந்திருந்தது.
இவைஅனைத்திலும் முக்கியமாகத் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு தமிழ்க்காங்கிரஸ்விடுத்த கோரிக்கை அடக்கிவாசிக்கப்பட்டுத் தமிழ்க் காங்கிரஸில் கருத்து வேறுபாடுஎன்றவிதமாகவே செய்திகள் வெளியாயின. த.தே.கூட்டணியின் ஒற்றுமை கருதி தமிழ்க்காங்கிரஸ் சம்பந்தன் பொன்சேகாவை ஆதரித்ததை மறுத்துப் பேசாவிடினும் தனது முன்னைய முடிவைமாற்றியதாக அறிவிக்கவில்லை.
மக்கள்தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூடும் என்ற அச்சம் த.வி.கூ தலைமைக்கு மட்டுமன்றித் தமிழ்ப்பத்திரிகைகட்கும் வலுவாக இருந்தது.னாயிறு தினக்குரலில் வரும் “மறுபக்கம்” என்ற பத்தி வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்குவதைப் பரிந்துரைத்து வந்ததால் அதை மறுக்கும் விதமாக பலரும் களமிறக்கப்பட்டனர்.
கலாநிதி கீதபொன்கலன் , ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவத்தம்பி,ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரன் ஆகியோர் ஒன்றுக்குப்பலமுறை தமிழ் மக்கள் “அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டும்” என்றும் தேர்தலில் பங்கு பற்ற வேண்டும் என்றும் விரிவாக எழுதினர்.
தினக்குரலில் காலகண்டனின் பத்தியும் கலாநிதி சிவசேகரத்தின் கட்டுரைகள் இரண்டும் தேர்தல் புறக்கணிப்பு அல்லது யாருக்குச்சீட்டுப்ப்ழுதாக்கலை வலியுறுத்தினாலும் பிற கட்டுரைகள் பலவும் மாற்றுக்கருத்துக்களையும் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய நியாயத்தையும் வலியுறித்தின.
சரத் பொன்சேகாவை ஆதரித்த சம்பந்தனுக்குப் பெரும் முக்கியத்துவம் கிட்டியது. தமிழ் ஊடகங்களின் செல்லப்பிள்ளையாகயிருந்த விக்கிரமபாகு கருணரத்ன பெருமளவும் ஓரங்கட்டப்பட்டார்.சிவாஜிலிங்கத்தை ஒரங்கட்டுவதில் உதயன் கடும்முயற்சிமேற்கொண்டது. அவரை நிந்தித்துப்பேசுமாறு பல பிரமுகர்கள் தூண்டிவிடப்பட்டனர்.
சிவாஜிலிங்கத்தைப் பற்றிப் புதியஜனநாயகக்கட்சியின் செயலாளர் செந்தில்வேலிடம் கேட்ட கேல்விக்கு அவர் வழங்கிய பதில் பொன்சேகாவை ஆதரிப்பவர்கட்க்கும் ஒரு பலமான சூடாக அமைந்ததால் உதயன் அவரிடம் வேண்டிப் பெற்ற செவ்வி வெளிவிடப்படவில்லை.
இவ்வாறு பொன்சேகாவுக்குத் தமிழ்மக்களின்வாக்குகளைப்பெற்றுக் கொடுக்கவும் சென்ற ஆண்டு நடந்த யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் முன்பாதியைத்மிழ்மக்கள் பின்பற்றாமல் தடுக்கவும் எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்தன. யாழ்ப்பாணமாவட்டத்தில் 20சதவீதமானோரே வாக்களித்தனர்.
வாக்களித்தோரில் மூன்றரை சத வீதத்திற்கு மேலானோர் வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கினர். தெற்கில் பழுதாக்கினோரின் சராசரித் தொகை0.8 சதவீதமளவிலேயே இருந்தமை கவனிக்கத்தக்கது. வன்னியில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவான வாக்குப்பதிவுடைய முல்லைத்தீவை நீக்கினாலும்,40சதவீதத்திலுங்குறைவாயிருந்தது.திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் திகாமதுல்லையில் அம்பாறை தவிர்ந்த பகுதிகளிலும் 62 சதவீதமளவிலேயே வாக்களிப்பு இருந்த்து.
நாட்டின் பிற பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் 80 சத்வீதத்திற்குமிடையில் வாக்க்ளிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. திருகோணமலைத் தொகுதியிலும் மட்டக்களப்புமாவட்டத்திலும் வன்னியிலும் இரண்டு சதவீதமான வாக்குகள் பழுதாக்கப்பட்டன.
மட்டக்களப்புமாவட்டத்தியில் தேர்தலன்று நண்பகல் 12 சதவீதமானோரே வாக்களித்திருந்தனர். அதையடுத்துப் பாதிரிமாரும் மெளலவிகளும் பல்வேறு சமூகப் பிரமுகர்களும் களமிறக்கப்பட்டு வாக்களிப்புவீதம் உயர்த்தப்பட்டது.
தமிழ்மக்களவுக்கு இல்லாவிடினும் முஸ்லீம் மக்கள் நடுவிலும் மலையக மக்கள் நடுவிலும் தேர்தல்பற்றிய உற்சாகம் குறைவாகவே இருந்ததுடன் தமிழரும் மலையகத்தமிழரும் பெருந்தொகையாக வாழ்ந்த கொழும்பு நுவரெலிய மாவட்டங்களின் தொகுதிகளில் 2 சதவீதமான வாக்குச்சீட்டுக்கள் பழுதாக்கப்பட்டன.
சிறுபான்மைத் தேசிய இனத்தோரின் வாக்குக்களில் ராஜபக்சவுக்கு விழுந்ததைப்போல இருமடங்கு பொன்சேசாவுக்கு விழுந்ததைச் சுட்டிக்காட்டுபவர்கள் தமிழ்மக்களின் புறக்கனிப்பையும் பழுதாக்கல் வீதத்தையும் பற்றிப்பேச விரும்புவதில்லை.
யாழ்ப்பாண,வன்னிமக்கள் உரத்தகுரலிலும் கிழக்கின் தமிழர் சற்றுத்தணிகையாகவும் சொல்லியுள்ள செய்தி என்ன?
தமிழ்மக்கள் எந்தச் சனாதிபதி வேட்பாளரையும் தாம் ஏற்கவில்லை என்பதை மட்டுமா?
தங்கள் தலைவர்கள் எனப்பட்டோரின் பரிந்துரைகளை நிராகரிக்கிறார்கள் என்பதையுமா?
சமூகத்தில் உள்ளமதத்தலைவர்கள்,முன்னாட் பெரும்பதவிக்காரர், அறிஞர்கள் எனப்பட்டோர் எல்லாரும் ஒரு வேட்பாளரை மனதில்வைத்துக்கொண்டு தமிழ்மக்கள் தமது அரசியல் உரிமையை வீணாக்கக்கூடாது என்று முதலைக் கண்ணீர் விட்டதை நன்றாக விளங்கிக்கொண்டார்கள் என்பதையா?
தமிழ் நாளேடுகளின் செய்தித் திரிப்புக்களும் இரட்டிப்புக்களும் அகச்சார்பான விளக்கங்களும் அலுத்துவிட்டது என்பதையுமா?
எல்லாவற்றீலும் உண்மை உள்ளது. ஆனால் மக்கள் வெறும் நிராகரிப்புடன் நின்றுவிடக்கூடாது.இறுதிவரை புறக்கணிப்பு, குறிப்பாக வாக்குச் சீட்டைப்பழுதாக்கல், என்பதில் உறுதியாக நின்றதற்குப் புதிய ஜனநாயகக் கட்சி மெச்சப்பட வேண்டும்.
எது எவ்வாறாயினும் இப் புறக்கணிப்பு வெறும் புறக்கணிப்பு அரசியலாக முடங்கிவிடக் கூடாது.
1. புறக்கணிப்பு அரசியல் புறக்கணிக்கப்பட்டோரின் அரசியலாக, ஒடுக்கப்பட்டோரின் அரசியலாக விரிவுபெற வேண்டும்.
2. குறுகிய தமிழ்த் தேசியவாதம் தமிழர்களை எத்தகைய அழிவுகளிற்குக் கொண்டுவந்து விட்டுள்ளது என்பதைப் பற்றித் தமிழர்களை உரக்கச் சிந்திக்குமாறு சகல முற்போக்கு சக்திகளும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.சலுகை அரசியலும், தரகு அரசியலும் தான் பாரளுமன்ற அரசியலாகத் தொடரும். அதற்குச் சமாந்தரமாக அதை மேவும் விதமாக, மக்களைத் தங்கள் உரிமைக்காக தாங்களே குரல் எழுப்பிப் போராடும் ஒரு சக்தியாக வளர்த்தெடுக்க அவர்கள் முன்வரவேண்டும்.
3. தமிழ் மக்கள் தொடர்ந்தும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடமிருந்தும், சிங்கள மக்களிடமிருந்தும், குறிப்பாக அவர்களிடையே உள்ள நல்ல சக்திகளிடமிருந்தும், தம்மை அன்னியப்படுத்திக் கொள்ளக் கூடாது. இவ்விடயத்தில் தென்னிலங்கையில் இன்று பலவீனமாக உள்ள நேர்மையான இடதுசாரி சக்திகளை வலுப்படுத்த தமிழ் மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
4. வடக்கின் மக்கள் அதற்கான பச்சை விளக்கைக் காட்டியுள்ளனர். பாதையறிந்து பயணத்தை முன்னெடுப்பது எளிதல்ல ஆனால் அது தட்டிக்கழிக்கத் தகாத வரலாற்றுப் பணியாகும்.
எளீமையாய் பேசினாலே விளங்காதபோது அறீவுஜிவிகள் பேசியா விளங்கப் போகிறது.மக்களீன் உணர்வுகள் மாறீக் கொண்டிருக்கும் அவர்கலை கனிப்பிடுவது கடினமானது.இதில்நமது கணீப்பீடுகள் கூடத் தவறானவையே.
“இதில்நமது கணீப்பீடுகள் கூடத் தவறானவையே” – தமிழ்மாறன்
தமிழ்மாறன்: வேண்டுமானால் உங்கள் சார்பில் பேசுங்கள். மற்றவர்கட்காகத் தவறை ஒப்புக்கொள்ள முயலாதீர்கள்.
கட்டுரையில் உள்ள மதிப்பீடு பெருமளவும் தகவல்களின் அடிப்படையிலானது போலுள்ளது.
தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
ஆசிரியர் பதில் கூறட்டும்.
நலல தொரு ஆய்வுக் கட்டுரை. யாழ்ப்பாணத்தில் மூலை முடுக்கெல்லாம் டக்ளஸ்-மகிந்தாவின் கட்டவுட்டுகள். டக்ளஸ்ஜ மக்கள நிராகரித்த போதும் டக்ளஸ் இன்னமும் 19வது வருடமாக மந்திரியாக தொடா;கின்றார். செயல் வீரா.
இன்று இலங்கையில் ஒரு ஜயநாயக சூழல் உருவாக்கப்படவேணடும். தமிழ் அமைப்புக்ள. தமிழ் – முஸ்லீம்-மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை ஏற்றுக் கொண்ட அனைத்து சகதிகளுடன் இணைந்து போராடசவண்டும்.
முன்பு தமிழர் இலங்கையின் சுதந்திர தினத்தை பஹிஷ்கரித்தனர், இந்த முறை U.N.P யினர் அரச ஆணைக்கு இணங்க புலித்தலைமை, உறுப்பினர்களுடன் சேர்த்து 20,000 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும் ஈவிரக்கமின்றி கொல்ல உடந்தையாகவிருந்த சரத் மாமாவுக்காக பஹிஷ்கரிப்பதாக முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.
காட்டில் இருந்த புலியை மனித வேட்டையாட சுதந்திரமாக பிரேமதாசா காலத்திலும், தன்னுடைய காலத்திலும் நாட்டினுள் உலவ விட்டவர்களாச்சே!
தொடர்பான செய்திக்கு:
http://www.dailymirror.lk/index.php/news/1383-no-independence-for-unp.html
புலி எதிர்ப்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் இப்படியே கக்கிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்?
தெற்கு நிலைமை மஹிந்தவே வெல்லுவார் என்பதை உணர்த்தியபோதும்> தமிழ் ஊடகங்களின் உத்வேகத்திலேயே வடக்குத் தமிழர் எதிர்த்தரப்புக்கு வாக்களித்தனர் என்பது ஒரு பிரதான காரணம். ஆனால் சாதாரண தமிழர்களின் ஒரேயொரு துருப்பான டக்ளஸ் கட்சியின் நிலைமை மோசமாகிவிட்டது.
தமிழ்ப் பிரமுகர்களும், ஊடகங்களும், த.தே.கூ. போன்றவையும் சொன்னவற்றை வடக்கின் மக்களும் வன்னியின் மக்களும் முற்றாக நிராகரித்து விட்டதை மறந்து விட்டு, விழுந்த 20% வாக்குகளில் அவருக்கு 60 இவருக்கு 30 என்று கணக்குப் போடுவது பயனற்றதல்லவா!
An Article by the Asian Human Rights Commission (AHRC)
Disappearance of a political analyst critical of the president:
The disappearance of Pregeeth Ekanaliyagoda, a political analyst, journalist and visual designer, attached to LankaENews; the arrest of Chandana Sirimalwatta, the editor of the Lanka newspaper and the assassination of Chandaradasa Naiwadu, the JVP Urban Council member at Ambalangoda are among the acts of violence reported during the election for the executive presidency in Sri Lanka. They were all persons who supported the joint opposition campaign on behalf of the retired army commander, Sarath Fonseka. The issue of violence in the election was raised at a press conference organised by the Commissioner for Elections this week. His explanation was that since the adoption of the 1978 Constitution the type of politics seen during the election is quite normal and that even in future elections a similar pattern of violence will continue. There has not been any attempt by the government to investigate any of the incidents mentioned above or any other acts of violence.
All three persons mentioned above are, or were, intellectuals who represent different points of view and are persons who dared to express their opinions even in the midst of a very intense culture of political violence. What is most saddening in the suppression of such voices which are trying to rise up against a general climate of violence and demoralisation and trying to develop a discourse on politics by expressing their own points of view for the consideration of the electorate. The case of the journalist and political analyst, Pregeeth Ekanaliyagoda clearly demonstrates the kind of violence that is used against the voices of reason.
“Sarath? Mahinda? Or us?”
Pregeeth Ekanaliyagoda wrote several articles in LankaEnews in the months prior to the election on the 26th January. He tried to engage his readers in a discussion on issues which were part of the public debate on the forthcoming election. In November 2009 he wrote an article entitled, ¡§Sarath? Mahinda? Or us?¡¨ In this article he tried to enter into the debate that was taking place at the time about the entrance of the retired general, Sarath Fonseka as a candidate for the election. By using the debate that was taking place at the time he tried to demonstrate that the issue was not really about the two prominent candidates which were the incumbent president, Mahinda Rajapakse and Sarath Fonseka. He tried to highlight that the election was about ¡¥us¡¦, meaning the people. He tried to reason out that what is at stake for us, the people in the election and the best ways of serving the interests of the people through the election. He tried to raise the discussion on the presidential election beyond personalities and into the issues that should concern the people.
A political discussion within a country cannot take place unless there is space for thinkers, writers and analysts to put forward their views and for the readers to have various views to consider. Having such serious minded analysts enhances the capacity of others to have different views and thereby to deepen the political discourse within the country.
The silencing of analysts and thinkers would only strengthen the argument made by such people that a climate for proper development does not exist presently. That development requires the serious participation of the thinking elements within society, in order to give their points of view on all aspects of life, so that an enlightened approach could prevail to support the betterment of the conditions of the people.
Ekanaliyagoda¡¦s family constantly told the investigating authorities and the public through the media that they do not suspect any other reason for his disappearance except for political revenge. Under these circumstances there is even greater obligation for the government to investigate this disappearance and other acts of violence that is taking place in the country. The election commissioner has warned that other elections in the country are likely to repeat the same pattern of violence.
It is now the government¡¦s turn to demonstrate its capacity to change the course of the violence and it is the duty of the international community to raise the issues of the disappearance and violence and request serious investigations and redress for victims of such violence.
For more:
http://www.ahrchk.net/statements/mainfile.php/2009statements/2402/
ASIAN HUMAN RIGHTS COMMISSION – URGENT APPEALS PROGRAMME
Urgent Appeal Case: AHRC-UAC-009-2010
ISSUES: Politics; disappearance; freedom of expression; police inaction.
A political analyst has been missing since the election run-up
Dear friends,
The Asian Human Rights Commission (AHRC) has received information regarding the disappearance of journalist Prageeth Eknaligoda shortly after he wrote articles supporting the presidential opposition candidate. His office was ransacked shortly after, the website he writes for was blocked during the election, and there have been delays and flaws in the police investigation. The journalist was also a victim of an unresolved organised abduction last year. It should be noted that his disappearance fits the strong pattern of harassment of journalists in the country by government agencies.
CASE DETAILS: (Based on information received from the victim’s wife)
According to the information received, Mr. Prageeth Ranjan Bandara Eknaligoda (also printed as Ekanaligoda), disappeared shortly after he left his office at the LankaeNews Website headquarters on 24 January 2010 – two days before the presidential election. His last contact was in a call to a Mr Gamini Perera, who usually drives him home, during which the journalist told Mr Perera that he had arranged alternative transport. He mentioned being ‘at Koswatte’ (and though there are two potential Koswatte’s in Colombo, the victim’s wife believes he was referring to a place near Talangama).
There has been no communication from the victim since and there are no known facts about the perpetrators at this time. However due to the nature of his work, the day of his disappearance, the frequency of state sanctioned acts of repression against journalists under the current administration, and his own past experience of abduction, detailed below, Eknaligoda’s family suspect the involvement of state authorities, rather than – as suggested by police – individuals with a grudge.
Shortly after the victim’s disappearance the website LankaeNews was blocked by the government authorities. The block was lifted after the election. The AHRC is also informed that the LankaeNews premises were searched for two hours on the night of 28 January 2010 by a large number of unidentified persons (vehicle registration number: 32-8432), after which the website was again blocked for a short time.
When Mrs. Kamalgoda Mudalige Sandya Priyangani Eknaligoda, attempted to register the incident at Homagama police station, accompanied by Mr Perera, she was told by the OIC (Officer-in-Charge) that the station was unable to record the incident without prior instruction from higher officers, and he advised her to register the complaint with the Koswatte police; this is despite his legal obligation to register the case without delay. After persistence from Mrs. Eknaligoda the officer allegedly agreed to accept the complaint, and statements were recorded from her and Mr. Perera between 10:30 and 11:00am on 25 January 2010.
On 28 January 2010 an officer from Homagama police station and two officers purporting to be from the CID (Criminal Investigation Division) visited Mrs Eknaligoda and her neighbours to record further statements regarding the possibility of private dispute related to the victim. No further action has been seen to be taken.
Ekanaligoda’s family do not believe that his disappearance is the result of a private grudge. On 27 August 2009 he was victim of an organised abduction – he was blindfolded, transported a considerable distance and chained in a kind of cell overnight – by men who responded to organised instruction from someone referred to as a higher officer. He was released after the officer told them that he was not the correct intended target.
The case has been well publicised in the media however Mrs. Ekanaligoda also registered complaints at the office of the opposition leader, to Mr Gamini Jayawickrama Perera who is chairman of the United National Party, to the office of the National Board of Intellectuals (Jathika Vidwath Mandalaya), to Mr Wasudewa Nanayakkara who is an adviser to the president, and to several civil society organisations. A government spokesman has since publicly denied government involvement.
Sri Lanka remains one of the most dangerous environments in the region for journalists, and other public opinion makers, largely due to the lack of accountablilty faced by those who harass or attack them. Please refer to last years’ urgent appeals and statement archive for other recent and unresolved cases, including the protection and investigation that was denied journalist and police torture victim Senake Ekanayake (UAU-029-2009) and abudction and torture victim, Poddala Jayantha, who is currently president of the Working Journalists Association (in STM-125-2009:SRI LANKA: Journalist attacked – a civil society organisation threatened and a provocative campaign against freedom of expression continues).
SUGGESTED ACTION:
Please write letters to the relevant authorities to urge for stronger and clearer efforts to thoroughly investigate this disappearance, ensure his safe return, and provide security for the victim’s family.
Please be informed that the AHRC has written a separate letter to the UN Working Group for Enforced or Involuntary Disappearances, and the UN Special Rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression, calling for intervention in this case.
For more detail & sample letter click here:
http://www.ahrchk.net/ua/mainfile.php/2009/3360/
Inioru readers, please give ur voice for disappearance; freedom of expression; police inaction in our motherland – Alex Eravi
All we need HUMANITY!
அலெக்ஸ் தமிழில் மட்டும் செயற்படுவோரும் பயன்பட வேண்டி, தயவு செய்து விஷயத்தைச் சுருக்கமாகத் தமிழிலும் தந்தால் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.
இவர் யாரோ எழுதியதை பிரதி எடுத்து இலகுவாக தனது கருத்தைச் சொல்கிறாராம். சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிட்டால் நல்லது.
நண்பரே!
யாரோ எழுதியதுதான், ஆனால் நான் உரிமை கொண்டாடாமல் ஆதாரத்துடன் எனக்கு கிடைக்கும் செய்திகளை நடுநிலைமையுடன் சக வாசகர்களுடன் பகிர்கிறேன். அத்துடன் மேற்குறிப்பிட்ட செய்தி என் மின்னஞ்சலிற்கு கிரமமாக Asian Human Rights Commission (AHRC) யினால் அனுப்பப்படும் செய்தி/ அறிக்கையிலிருந்து தரப்பட்டதாகும். அத்துடன் எனது நேரத்தைப் பொறுத்து சுருக்கமாக தமிழில் தருகிறேன். நன்றி!
சூர்யா, ஒருவர் நேர்மையாகப் பயனுள்ள தகவல்களை எடுத்து வழங்கும் போது நாம் அதற்கு நன்றி கூற வேண்டுமே ஒழிய நிந்திப்பது அழகல்ல.
அலெக்ஸ், தயவு செய்து தமிழாக்கல் பற்றிச் சிறிது சிந்திக்கவும்.
நான் நிந்திக்கவில்லை, எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்.
எல்லா நிந்தனைகளும் அபிப்பிராயங்கள் தான்.
பயனுள்ள பணி செய்கிற ஒருவரை “இவர் யாரோ எழுதியதை பிரதி எடுத்து இலகுவாக தனது கருத்தைச் சொல்கிறாராம்” என்று கூறுவது பண்பானதல்ல.
எனது அகராதியில் அப்படியில்லை, ஆனாலும் பண்பாக இருக்கட்டுமென அதையும் அகராதியில் சேர்த்துக்கொள்கிறேன். இது யார் சொன்னது என்று பண்பில்லாமல் யாரும் கேட்டால் சொன்னவர் பெயர் தெரியாது எனப் பண்பாக சொல்லிவிடுகிறேன். சரியா சரியா சரியா?
நன்றி.
விரலுக்குத் தக்க வீக்கம்.
ஆளுக்குத் தக்க அகராதி.
உங்கள் விரலின் வீக்கம் எவ்வளவு என அறிய விருப்பம், ஆனால் பெயரில்லாத மூன்று பிழைகளுடன் அல்லது புள்ளடிகளுடன் அர்த்தமில்லாத உரையாடல் அவசியமில்லை எனத் தோன்றுகிறது. அபிப்பிராயம் சொல்லமுடியாத அடக்குமுறைதான் உங்கள் கொள்கை என்றால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். அழுங்குப்பிடி வக்காலத்து எதற்காக? நீங்கள் அலெக்ஸ்.இரவியின் பிரதியா? கருத்து எழுதுபவருக்கு இல்லாத அக்கறை என்ன இப்படி உங்களுக்கு வருகிறது?
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் பாவிக்கும் அகராதி காசு கொடுத்து வாங்கிய பலரும் அறிந்த லிப்கோ. இது எனது என்று சொல்ல நான் அவ்வளவு மு இல்லை.
யாரோ எழுதியதையும் எடுத்து தருவதற்கு கெட்டிக்காரத்தனம் வேண்டும் சூர்யா.சிறப்பாகச் செய்கிறார் அலெக்ஸ். தமிழில் இருந்தால் விளங்க வசதியாக் இருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு கிழக்கிலங்கையில் சிறார்களைப் பிடித்துக் கொடுத்த முன்னால் கருணா அம்மானும், பின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரம்ப கர்த்தாவாக இருந்து , பிள்ளையானுடனான போட்டியில் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்று, இன்று திரும்பி வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து மஹிந்த சகோதரர்களின் தயவுடன் தேசிய நல்லிணக்க அம்மச்சர் பதவி பெற்று கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் சேர்ந்த அரசிற்கு வாக்கு சேர்த்துக் கொடுக்க முடியாமல் இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் இன்றைய தறுவாயில் தன்னுடைய உதவியாளர் இனியபாரதி என்பவர் திரும்பவும் சிறுவர்களை படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கூறுகையில் தமக்கு தகவல் கிடைத்ததையடுத்து இந்நடவடிக்கையை நிறுத்துமாறு இனியபாரதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.
மேலும் முழு அறிக்கையை வாசிப்பதற்கு இங்கு அழுத்துங்கள்:
http://www.innercitypress.com/sri1caac.pdf
Incommunicado ‘Rehabilitation’ Raises Fears of Torture and Enforced Disappearances – HRW
The Sri Lankan government should end its indefinite arbitrary detention of more than 11,000 people held in so-called rehabilitation centers and release those not being prosecuted, Human Rights Watch said in a report released today.
The 30-page report, “Legal Limbo: The Uncertain Fate of Detained LTTE Suspects in Sri Lanka,” is based on interviews with the detainees’ relatives, humanitarian workers, and human rights advocates, among others. The Sri Lankan government has routinely violated the fundamental rights of the detainees, Human Rights Watch found. The government contends that the 11,000 detainees are former fighters or supporters of the defeated Liberation Tigers of Tamil Eelam (LTTE).
“The government has been keeping 11,000 people in a legal limbo for months,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “It’s time to identify who presents a genuine security threat and to release the rest.”
மனித உரிமை காப்பகத்தினரால் Human Rights Watch (HRW) கடைசியாக வெளியிடப்பட்ட இலங்கையில் காணாமல் போதல் துன்புறுத்தல் சம்பதமாகவும் புலிகளென சந்தேகப்படும் 11,000 இளஜர்கள், யுவதிகள், சிறார்கள் சம்பந்தமாகவும்:
http://www.hrw.org/en/news/2010/01/29/sri-lanka-end-indefinite-detention-tamil-tiger-suspects
Click here for the HRW 30 page report “Legal Limbo”:
http://www.hrw.org/en/reports/2010/02/02/legal-limbo
August 27, 2008 report of State Responsibility for “Disappearances” and Abductions in Sri Lanka: http://www.hrw.org/en/reports/2008/08/27/recurring-nightmare
Perpetrators and Victims:
Reports by local media and human rights groups describe the two groups’ involvement in “disappearances” and killings, and their close cooperation with the security forces. A November 2006 report by the University Teachers for Human Rights (Jaffna) (http://www.uthr.org/) detailed a number of murder cases perpetrated by “hybrid killer groups” that were “made up of elements from intelligence divisions of the various arms of the security forces (especially Army and Navy) together with Tamils who serve the security forces in their individual capacity or from groups such as the EPDP and Karuna faction.”[118] In a comprehensive “Overview of the Enforced Disappearances Phenomenon,” journalist D.B.S. Jeyaraj noted that the actual abductions are generally done by the Karuna or EPDP group, “while some top ’security’ guy is usually at hand to help out if something goes wrong.” ( http://www.hrw.org/en/node/40493/section/6 )
மேலும் கடந்த தேர்தல் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி:
A Statement by the Asian Human Rights Commission:
The political development of the country, instead of trying to address the serious problems affecting society in every aspect, is in fact, going in the opposite direction. Petty interests, corruption and small mindedness is so wide spread that every initiative taken by the citizens themselves to improve their lot is being discouraged. The very nature of the politics that emanates from the top demoralizes and disintegrates society. Petty divisions are encouraged and used for the purpose of maintaining political power. Destructive impulses and a counterproductive mentality are being constantly regenerated to serve the interests of the few.
Under these circumstances the political system and the legal system together deprives the country of the meaningful realisation of its independence. The younger generation of the country, have no experience of a parliamentary democracy or of the independence of the judiciary. They have seen both the parliament and the judiciary being subjugated to serve the interests of one institution known as the executive presidency. They also do not have the experience of seeing credible investigations into crime. Instead they have witnessed the criminal elements having the upper hand in society and being rewarded.
The younger generation of today sees the vulgar use of the national media. Day in and day out national television and radio engage in political propaganda and the broadcasting of personality cults. The language habits and the cultural attitudes imparted by the national media create a demoralization and degeneration of the mind and the spirit.
It is under such circumstances that Independence Day is celebrated this year.
For more:
http://www.ahrchk.net/statements/mainfile.php/2009statements/2399/
Human Rights Watch Film Festival Toronto
February 24 – March 6, 2010
at the Isabel Bader Theatre and the Art Gallery of Ontario’s Jackman Hall
A Co-Presentation between TIFF Cinematheque and the Human Rights Watch Canada Committee
Wednesday, February 24, 6:30PM
Isabel Bader Theatre, 93 Charles Street West
Opening Night:
LAST TRAIN HOME
Director: Lixin Fan, Canada 2009, 85m
This screening is co-presented with Hot Docs Canadian International Documentary Festival
Award-winning film of stunning visual impact that follows the real lives of a family split apart to feed China’s factories and its economic miracle.
Guest Speakers: Director Lixin Fan & Minky Worden, Media Director, HRW
Thursday, February 25, 7:00PM
TRIAGE
Director: Danis Tranovic, Ireland/Spain 2009, 99m
Academy Award winning director, Danis Tanovic, exposes the emotional and physical cost for war photographers who risk everything to get the picture that tells the story.
Guest Speaker: Linden MacIntyre, CBC Journalist and author
Friday, February 26, 9:00PM
BE LIKE OTHERS
Director: Tanaz Eshaghian, Iran 2008, 74m
Award-winning documentary that reveals the hypocrisy of Iran’s policies regarding homosexuality up to the point of state-financed and sanctioned sex change operations.
Guest Speaker: Scott Long, Director, Lesbian, Gay, Bisexual & Transgender Rights Division, HRW
Saturday, February 27, 7:00PM
WELCOME
Director: Phillipe Lioret, France 2009, 110m
A poignant and beautiful film about a young Kurdish refugee that provides a portrait of illegal migrations and the systems that keep them alive.
Guest Speaker: Samer Muscati, Researcher, Middle East and North Africa Division, HRW
Sunday, February 28, 8:00PM
MY NEIGHBOUR, MY KILLER
Director: Anne Aghion, USA 2009, 80m
An intimate portrait of a Rwandan village struggling to come to terms with the return of convicted prisoners, where forgiveness is the only way forward.
Guest Speaker: Prof. Cristina Badescu, Post-Doctoral Fellow, Munk Centre for International Studies, University of Toronto
Tuesday, March 2, 7:00PM
TAPOLOGO
Director: Gabriela Gutierrez Dewar and Sally Gutierrez Dewar, South Africa/Spain 2008, 88m
In the makeshift mining village of Freedom Park, South Africa, HIV positive women turn to each other for community, care and compassion.
Guest Speaker: Aissatou Diajhaté, Director of Programs, Stephen Lewis Foundation
Tuesday, March 2, 9:00PM
THE GREATEST SILENCE
Director: Lisa F. Jackson, USA 2007, 76m
An exposé on one of the ugliest sides of the ongoing conflict in the Congo, this film focuses on the 20-year phenomenon of mass raping women and girls.
Guest Speaker: Giselle Portenier, Documentary Filmmaker
Wednesday, March 3, 9:15PM
BACKYARD
Director: Carlos Carrera, Mexico 2009, 122m
20 years of unsolved murders of women in Juarez is the factual basis for this dramatic feature that exposes both the murderers and a justice system that does nothing to stop them.
Guest Speaker: Linda Diebel, Toronto Star journalist
Friday, March 5, 7:00PM
BACK HOME, TOMORROW
Director: Fabrizio Lazzaretti and Paolo Santolini, Italy 2008, 87m
A documentary following the lives of 2 young boys, both victims of war, and the heroic measures brought to bear to bring them back to health.
Guest Speaker: Shelley Saywell, Writer and Documentary Filmmaker
Saturday, March 6, 8:30PM
Closing Night:
PRESUMED GUILTY
Director: Roberto Hernández / Geoffrey Smith, Mexico 2009, 91m
A brilliant investigative documentary that follows an innocent man in the Mexican legal system who, after being wrongly convicted and jailed, battles for his freedom.
Guest Speaker: Mary Jo Leddy, Writer, speaker, social activist
All screenings except for Opening Night are held at the Art Gallery of Ontario’s Jackman Hall, 317 Dundas St. West, Toronto (McCaul Street entrance).
Tickets Available at the TIFFG Box Office (2 Carlton St.) For ticket inquiries, call 416-968-FILM or toll-free 1-877-968-FILM 1-877-968-FILM.
For complete film descriptions and film ratings, visit the official websites:
tiff.net/cinematheque and http://www.hrw.org/en/iff/toronto/2010
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ளபோதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்பி சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனிதஉரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் புதிய விதிகளுக்கேற்ப சீராக்கல்களை மேற்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் இலங்கையும் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கை வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கென எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் உதவ தயாராக இருப்பதாக மேற்படி இராஜதந்திரி தெரிவித்தார்.
இலங்கையின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பல வருடங்களாக யுத்தம் நடத்திய முறை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை படுகொலை செய்தமை, உதவிப்பணியாளர்களை கொலை செய்தமை, ஆகியன உட்பட அரசாங்க படைகள் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
ஐரேப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளிலிருந்து சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம், சித்திரவதைக்கு எதிரான சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம் ஆகிய ஐக்கியநாடுகள் சாசனங்கள் மூன்றினை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக தெதியவந்துள்ளது.
அதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை எவ்வளவோ திருந்தி விட்டதால் வரிச்சலுகையை நிறுத்துவதற்கான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “வரிச்சலுகை நிறுத்தம் அமுல் செய்யப்படுவதை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறுத்த முடியும். ஆனால் அதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிபார்சும், அங்கத்துவ நாடுகளினது இணக்கமும் தேவை” என்று கூறினார்.எவ்வாறாயினும், இலங்கை மனித உரிமை பேணல் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்பதே தற்போதைய அபிப்பிராயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் அரச, இராணுவ முன்னெடுப்புகளால் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில், தற்போது இருக்கும் அரசில் கிழக்கை பிரதிநிதிப் படுத்துபவர் என்றும் கிழக்கின் விடிவெள்ளி என்றும் தன்னை அழைப்பவருமான தேசிய நல்லிணக்க அம்மைச்க்கர் ஒருவரும், வடக்கில் 90 சத வீத மக்களை தான் பிரதிநிதிப்படுத்துபவர் என்று கூறும் சமூக சேவைகள் அம்மைச்க்கர் ஒருவர் இருக்கும் நிலையிலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலை புலித் தலைமை, உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த குடும்பங்கள், மற்றும் 20,000 இற்கு மேற்ப்பட்ட அப்பாவி மக்களை அரச ஆணைக்கு அமைவாக கொன்றோளிப்பத்ர்க்கு மூல காரணியாக இருந்த முன்னால் இராணுவத் தளபதி சரத் போன்செகரவிர்க்கு ஆதரவு கொடுத்த கூத்தமைப்பினர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நிலையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டின் தென்பகுதி அனுபவிக்கின்ற மாகாண சபை முறைமை வடக்கிலும் நிறுவப்படவேண்டும். எனவே வடக்கு மாகாண சபை அமைக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது, வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
வடக்கில் மாகாண சபை அமைக்கப்படுவதை ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றது. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள எமது கட்சி வடக்கில் உடனடியாக மாகாண சபை அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவான மாகாண சபை முறைமையினை நாங்கள் எதிர்க்கின்றோம். ஆனால் தென் பகுதியில் மாகாண சபை முறைமை இருக்கின்ற நிலையில் வடக்கில் மட்டும் இயங்காமல் இருக்கின்றமைமயை அனுமதிக்க முடியாது. அது வடக்கு மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகவே அமையும். எனவே வடக்கில் மாகாண சபை அமைய நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.
எனினும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் வடக்கு கிழக்கு பகுதிக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நிரூபித்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சம நிலைமையிலான அபிவிருத்திகள் மற்றும் வசதிகள் செய்யப்படவேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
யோசித ராஜபக்ஷவும் ராஜினாமா செய்யவேண்டும்:ஐ.தே.க
அரசியலில் ஈடுபட்ட 14 இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அரசு வழங்குமானால் ஜனாதிபதியின் புதல்வர் யோசித ராஜபக்ஷவும் ராஜினாமா செய்யவேண்டும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என. நான்கு வருடங்களுக்கு முதல் மஹிந்த சிந்தனை மூலம் வழங்கிய உறுதி மொழிகளை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை..
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தரப்புக்கு எதிராக 1000 வன்முறைகள் பதிவாகியுள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாத அளவுக்கு பொலிஸாருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன..
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளை பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி கட்டாய விடுமுறையில் செல்லுமாறோ இடமாற்றம் செய்தோ அரசு தண்டனைக்குட்படுத்துகின்றது..
அப்படியாயின் முதலில் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர் கடற்படையில் பணியாற்றும் ஜனாதிபதியின் புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆவார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரசாரங்களில் இவர் ஈடுபட்டுள்ளார்.” எனத் தெரிவித்தார்
நன்றி! வீரகேசரி.
அலெக்ஸ்
நன்றி.
பல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
தொகுத்து ஒரு கட்டுரையாக்கி தகவல்களின் ஊற்றுமூலங்களின் URLகளைக் குறிப்பிடலாமே.