யுத்தத்தில் பொதுமக்கள் இழப்புகளை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மருத்துவர்களில் ஒருவர் தேர்தல் களத்தில் அழிவுகளைப்பற்றி கதைக்கவிரும்பவில்லை என்கிறார்.
விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் கடந்த வருடம் தோற்கடித்த வேளையில் இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்த மருத்துவர் ஒருவர் அந்தத்தாக்குதலின் பின்னணியில் இருந்த மனிதருக்கு ஆதரவளிக்கும் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதாக ஏ.எவ்.பி.செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.
இராணுவத்தின் இறுதி வெற்றியை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 மருத்துவர்களில் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜாவும் (40 வயது) ஒருவராகும்.சர்வதேச உதவி அமைப்புகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தவறான விதத்தில் புலிகளின் பிரசாரத்தைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் தேர்தலில் தமிழ்க் கட்சியொன்றின் சார்பில் இந்த மருத்துவர் போட்டியிடுகிறார்.அந்த தமிழ்க்கட்சியானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவித்துள்ள கட்சியாகும்.
யுத்தத்தின் பின்னர் எமது நாட்டிற்கு தலைமைதாங்கி மீளக்கட்டியெழுப்புவதற்கு பொருத்தமானவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என்று நான் நம்புகிறேன். அவருக்கு ஆதரவாக நான் பணியாற்றுவேன் என்று சண்முகராஜா கூறியுள்ளார்.
இராணுவத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது நான்கு மாத காலத்தில் குறைந்தது 7 ஆயிரம் பொதுமக்கள் மரணமடைந்திருப்பதாக ஐ.நா. கூறுகிறது.மே 18 இல் இராணுவத்தினர் வெற்றியடையும் வரை யுத்த வலயத்திற்குள் தங்கியிருந்த மருத்துவர்களால் வழங்கப்பட்ட தகவலும் ஐ.நா.வின் கணிப்பீட்டில் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டிருந்தது.மோதலின் இறுதிக்கட்டத்தில் 350400வரையிலான பொது மக்கள் கொல்லப்பட்டதாக டாக்டர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சண்முகராஜாவும் ஏனைய மருத்துவர்களும் முதலில் தாங்கள் கூறியதை மறுத்திருந்தனர். புலிகளின் அழுத்தத்தாலேயே முதலில் அவ்வாறு கூறியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வேலையும் திரும்ப வழங்கப்பட்டது.இழப்புகளின் தொகை குறித்து நான் கதைக்க விரும்பவில்லை.அது முடிந்துவிட்டது என்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் சண்முகராஜா ஏ.எவ்.பி.க்கு கூறியுள்ளார்.மிகவும் நெருக்கடியான நிலைமையில் நாம் பணியாற்றினோம்.மின்சாரம் இல்லை. உரிய மருந்துகளோ உபகரணங்களோ இறுதி நாட்களின்போது இருக்கவில்லை என்று அவர் கூறினார்.குண்டு, ஷெல் தாக்குதல்களைத் தவிர்க்க மருத்துவமனையை நகர்த்த வேண்டியிருந்தது.எமது மக்கள் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்டனர். யுத்தம் முடிந்த நிலையில் இப்போது விடயங்கள் அதிகளவுக்குச் சிறப்பாக இருக்கின்றன என்று சண்முகராஜா கூறியுள்ளார்.
ஈரோஸ் வேட்பாளராக சண்முகராஜா தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த அமைப்பு புலிகளுடன் முன்னர் தொடர்புபட்டிருந்து அமைப்பாகும்.இப்போது ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கிறது.சண்முகராஜா போட்டியிடும் முல்லைத்தீவு தொகுதி உட்பட வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2 இலட்சத்து 67 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகும். ஆனால், இத்தொகையில் அரைவாசிக்கும் குறைவானோரே இப்போது அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.பலர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர்.”எனது மக்கள்” நான் சிகிச்சையளித்த நோயாளிகள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று சண்முகராஜா கூறியுள்ளார்.
வாழ்விற்கான தேர்தல்!!!
நாம் ஏன் இத்தேர்தலில் எம் வாக்குகளை சிதறடிக்காமல் வாக்களிக்க வேண்டும்?
ஒரு பக்கத்தில் வன்னியில் …
முதலில் வவுனியா, முல்லைத்திவு, மன்னர் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 6 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 16 கட்சிகளின் 12 சுயேட்சை குழுக்களின் 253 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள் பிரிக்கப்படும் நிலையில் இக் கடைசி நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் நாம் ஏன் நங்கூரம் சின்னத்திற்கு புள்ளடி போட வேண்டும்! என்று சிந்திக்க வேண்டும்
நங்கூரம் சின்னத்தை குறியீடாகக் கொண்டவர்களான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரின் (DPLF) தாய் மக்கள் அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினர் (PLOTE ) இன்று மட்டும் தேர்தல் காலத்தில் மக்கள் முன் வரவில்லை. எழுபதுகளின் பிற்பகுதிகளில் வன்னியின் எல்லைக்கிராமங்களிலும் வட கிழக்கப் பகுதிகளில் அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வீயலை உருவாக்குவது. சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், பாட்டாளிவர்க்கப் போராட்டத்தையும் நடத்துவதற்கும் மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது, பாலர் பாடசாலைகளை நடத்துவது போன்ற பல திட்டங்களை வைத்து, யாழ் மக்கள் மீது மலைய மக்கள் மத்தியில் உருவான தப்பு அபிப்பிராயத்தை போக்குவதற்கு அம் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், அதுபோல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும் இலங்கையில் சமத்துவமான அரசியல் நிலையை உருவாக்கி, இனவாதத்தை (சிங்கள-தமிழ்) உதிரவைக்க வேண்டும் என்பதற்கான சமூக அரசியலை உருவாக்குவதற்காக காந்தியம் அமைப்பு உருவாக்கி செயல்பட்டுக்கொண்டுள்ள நேரத்தில் பொதுவுடைமை சிந்தனையிலும் செயல்ப்பாட்டிலும் தோழர் சுந்தரம், சந்ததியார் போன்ற பல இளைஞர்கள் காந்தியத்தில் இணைந்து செயல்பட்டு உமாமகேஸ்வரன் தலமையிலானா தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை தோற்றுவித்தனர்.
அன்று காந்திய வழியில் மீள்குடியேற்றம், சமூக விழிப்புணர்வு, சிறார்களுக்கான பாடசாலைகள், மருத்துவ உதவிகள், பண்ணை முறை என்று மக்களுடன் மக்களாக தோளுக்கு தோள் நின்று சேவை செய்தவர்கள்தான் இந்த கழகத்தார்!
90களில் போர்ச் சூழலில் கால்நடைகள் எல்லாம் நகர வீதியில் திரிந்த நிலையில், வவுனியா நகரம் வெறிச்சோடி இருந்த நிலையில் ஈழத்தின் பல பாகங்களிலும் இருந்து இடம் பெயர்ந்து வந்தோரை வரவேற்று, அவர்கள் குடியமர தேவையான ஒழுங்குகளை செய்து தொடர்ந்தும் வவுனியா நகர சபையை பிரதிநிதிப்படுத்தி இலங்கையிலேயே ஓர் முன் மாதிரியான நகர சபை என்ற பெயருடன் மிளிர செய்தவர்கள்தான் இந்த கழகத்தார்!
இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்தவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி முன்னெடுத்து வருபவர்கள்தான் இந்த கழகத்தார்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரின் (DPLF) கடந்தகால வேலைத்திட்டங்கள், அபிவிருத்திப் பணிகள் மக்கள் மத்தியில் எப்படி சிறப்புற நடைபெற்றதோ இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டும். இதற்கு வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு வன்னி வாழ் மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இதே நேரத்தில் வவுனியா மாவட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (DPLF) “நங்கூரம்” சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும் (இல – 4), முல்லைத்தீவு மாவட்டம் தண்ணியூற்றை பிறப்பிடமாகக் கொண்ட மக்களுடன் மக்களாக இருந்து பல எதிர்ப்புகள், போராட்டங்களின் மத்தியில் வவுனியா வாழ் மக்களின் தேவைகள், பாதுகாப்பு அறிந்து சேவை செய்து வரும் தோழர் க.சிவநேசன் (பவன்) அவர்களையும் (இல – 2), முன்னால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அரசாங்கத்திடம் மக்களுக்கு வேண்டியவற்றைப் பெற்று மக்களுக்கு சேவை செய்து, இன்றும் மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்து வரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வை. பாலச்சந்திரன் (இலஅவர்களையும் – 8) வன்னி மாவட்ட வாக்காளர்கள் பாராளுமன்றம் அனுப்பி தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்க அனுப்புங்கள்
கிளிநொச்சி தொகுதி உட்பட்ட யாழ் தேர்தல் மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 9 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 15 கட்சிகளின் 12 சுயேட்சை குழுக்களின் 324 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள் பிரிக்கப்படும் நிலையில் இக் கடைசி நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் இவ் இக்கட்டான நேரத்தில் பல கட்சிகள் பல விதமாக பிரச்சாரம் செய்யும் நிலையில் யாரை தெரிவு செய்வதின் நிலையில் எமக்காக பாராளுமனறத்தில் எம்மை பிரதிநிதிப்படுத்தி எமக்காக குரல் கொடுத்து எமது உரிமைகளை மீட்டெடுக்க ஓர் பொது இணைக்கப் பாட்டில் மக்களுடன் மக்களாக இருந்து மற்றைய கட்சிகளுடன் இணைத்து பங்காற்றுவார்கள் என்று தெரிவு செய்யவேண்டும்.
இங்கு யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துக்கொண்டு இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளிற்கும் வலம் வந்த கூத்தமைப்பினர் திரும்பவும் மக்களை ஏமாற்றி அவர்களின் முதுகில் சவாரி செய்ய உள்ள நிலையில் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
அதே நேரத்தில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுபவர்களின் “ஜனநாயகம்” “மாற்று அரசியல்” என்று கூறி மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவது மட்டுமல்லாமல் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் தங்களிற்குள்ளேயே கார்களை கொளுத்தி அடிபடும் நிலையில் மக்களை இவர்களையும் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
இவர்களுக்கு மாற்றாக ஈபிஆர்எல்எவ் பத்மநாபாஅணியின் செயலாளர்நாயகம், தோழர் தி. சிறிதரன் (சுகு) அவர்களுக்கு மெழுகுவர்த்தி sinnaththil இல – 6 இற்கு வாக்களிபத்தின் மூலம் அவர் தாம் இணைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து தோழர் சுபத்திரன் எப்படி யாழ் மாநகர சபையில் சேவையாற்றியாரோ அதைப் போன்றி தான் சார்ந்துள்ள மக்கள் தேவைகள் கருதி மக்களுடன் மக்களாக இருந்து சேவையாற்றுவார்.
இவரைப் பற்றி மேலும் கூறுவதென்றால், இவர் மாணவர் காலத்திலிருந்தே ஈழமாணவர் பொதுமன்றத்தில் இருந்து தோழர் நாபா வழியில் பொதுவுடைமை தத்துவத்தின் கீழ் பாதிக்கப்பட்ட…. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து…. சேவை செய்து மக்களுடன் மக்களாக இருப்பவர். அத்துடன் இவரை தெரிவு செய்வதில் இவர் நமது அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் தீர்வதற்கு, எமது அபிவிருத்திகளுக்கு இந்தியாவிடம் பேசக் கூடியவர். ஆதலால் மக்களுடன் மக்களாக இருக்கும் மக்களின் தேவைகள் அறிந்த தோழர் தி. சிறிதரன் (சுகு) அவர்களை வரப்போகும் பாராளுமன்றதிர்க்கு மெழுகுவர்த்தி இல – 6 சின்னத்தில் தெரிவு செய்வதின் மூலம் நிங்கள் பல பயன் அடைவீர்கள்.
அதே நேரத்தில் வடக்கில் – யாழ் மாவடத்தில் போட்டியிடும் புதிய-ஜனநாயக கட்சியின் (NDP) சுயேட்சைக் குழு 06 ன், சி.கா.செந்திவேல் அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வன்னி-யாழ் இணைந்த ஒடுக்கப்பட்ட மக்களிற்கான ஓர் பொதுவுடைமை – இடதுசாரி ஒன்றுபட்டு இணைந்த தலைமையை தேர்ந்து எடுப்பதின் மூலம் இவர்கள் ஒன்று சேர்ந்து எமக்காக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் எமது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வார்கள். அத்துடன் இன்று சுயேச்சைக் குழுக்கள் எல்லாம் அரசாங்கக் பணத்தில் நிற்கும் பின்னணியில், “புதிய ஜனநாயகக் கட்சி” (NDP) சுயேச்சைக் குழு மட்டுமே தனித்து தன சொந்தக் காலில் நிற்கும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டகளப்பு, பட்டிருப்பு, கல்குடா தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 5 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 17 கட்சிகளின் 28 சுயேட்சை குழுக்களின் 360 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள் பிரிக்கப்படும் நிலையில் இக் கடைசி நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் இவ் இக்கட்டான நேரத்தில் பல கட்சிகள் பல விதமாக பிரச்சாரம் செய்யும் நிலையில் யாரை தெரிவு செய்வதின் நிலையில் எமக்காக பாராளுமனறத்தில் எம்மை பிரதிநிதிப்படுத்தி எமக்காக குரல் கொடுத்து எமது உரிமைகளை மீட்டெடுக்க ஓர் பொது இணைக்கப் பாட்டில் மக்களுடன் மக்களாக இருந்து மற்றைய கட்சிகளுடன் இணைத்து பங்காற்றுவார்கள் என்று தெரிவு செய்யவேண்டும்.
இதே நேரத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில்
ஈபிஆர்எல்எவ் பத்மநாபாஅணியின் சிரே~ட தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரத்தினம் அவர்கள் . கிழக்கு மாகாணமக்களின் குறைகளைத் தீர்க்க ஆளும் தரப்பினர் உடனடியாக 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அதில் 19 விடயங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துமாறும் கேட்கும் நிலையிலும், கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள சில ஆயுள்வேத வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் , அம்பாறை ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத மருந்தகம் ஆகியன கிழக்கு மாகாண சபையிடமிருந்து மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித் துள்ள நிலையிலும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாக மாகான சபையினருக்கு சுட்டிக்காட்டி அவற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் தேவைகள் உரிமைகள் அறிந்து சேவையாற்றி வரும் நிலையில் அவரை பாராளுமன்றம் அனுப்புவது சிறந்ததாகும்.
மேலும் இங்கு தேர்தலில் களம் இறங்கி இருப்பவர்களை மக்களே நிங்கள் சரி, பிழைகளை சிந்தித்து வாக்களியுங்கள்!
எமது உரிமைகளை யார் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் நியாயமாக எடுத்துக் கூறி எமக்காக கதைப்பார்களோ அவர்கட்கே எமது வாக்குகளை போட வேண்டும்!
எமக்கு நேர்மையாக யார் எம்மை பிரதிநிதிப் படுதுவார்களோ அவர்கட்கே எமது வாக்குகளை போட வேண்டும்!
அரசு+இயல் என்பது அரசியல் ஆகிறது.
அதாவது அரசில் இயலாமை உள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதீர்கள்.
இதற்கு இடம்பெயர்ந்து முகாம்களிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்களும் அக்கறையின்றி இராது உரிய இடங்களுக்குச் சென்று தமது வாக்குகளை வீணாக்காமல் வாக்களிக்க வேண்டும்.
மேலும் இவர்களைப் பற்றி அறிய:
வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..
https://inioru.com/?p=5828
கலைஇலக்கியமும் அரசியலும் : சி. கா. செந்திவேல்
https://inioru.com/?p=1183
தமிழ் மக்களை அவல நிலைக்கும் அரசியல் வறுமைக்கும் கொண்டுவந்து விட்டவர்கள் தமிழ்த் தலைமைகளே கொள்கை விளக்கக் கூட்டத்தில் சி.கா.செந்திவேல்
http://www.uthayan.com/Welcome/full.php?id=2921
தோழர் ஸ்ரீதரனுக்காக
http://www.sooddram.com/pressRelease/Mar2010/Mar292010_PEPRLF.htm
தொடர்ச்சி……
இந்திய எதிர்ப்பு குரல் எழுப்புவதால் தமிழரின் பிரச்சனைகத்க்கு தீர்வு கிட்டாது – தோழர் ஸ்ரீதரன்
http://www.sooddram.com/pressRelease/Mar2010/Mar262010_Sritharan.htm
தோழர் ஸ்ரீதரன் பேட்டி:
http://www.sooddram.com/pressRelease/Mar2010/Mar252010_Sritharan.htm
வட-கிழக்கு மாகான சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் – வரதராஜ பெருமாள்.
http://www.sooddram.com/pressRelease/Apr2010/Apr052010_VP_GTN.htm
வடகிழக்கை சேர்ந்த 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இருந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் சார்பாக ஜேவிபி குரல் கொடுக்க நேரிட்டது. ஆனால் அவ்விடத்தில் சித்தார்தன் அல்லது அவர் தலைமையில் ஒரிருவர் இருந்திருந்தால் நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும்:
http://www.ilankainet.com/2010/04/blog-post_3947.html
புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள்.. -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
http://www.athirady.info/2010/04/02/65296
வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்
http://www.athirady.info/2010/04/02/65274
தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும்-புளொட் தலைவர் த. சித்தார்த்தன்
http://www.plote.org/reports.php?sscate_id=1078
யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? -புளொட் தலைவர் ஆற்றிய உரை
http://www.plote.org/reports.php?sscate_id=876
தொடர்ச்சி…..2
மட்டு. மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் : இரா.துரைரத்தினம் குற்றச்சாட்டு
http://lankamuslim.org/2009/09/11/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/
தாயக உறவுகளே உங்களைத் தாழ்மையுடன் கேட்கிறேன், உங்கள் வாக்குகளை வீணாக்காமல் ஒவ்வொவொரு வாக்கையும் சிந்தித்து போடுங்கள்!
வாக்காளர்களே ஒவ்வோர் வாக்கும் எம் தலை விதியை நிர்மாணிக்கப் போகிறது; இது எம் வாழ்விற்கான தேர்தல்!
ஓர் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து எமது மக்களின் விடியலிற்காக குரல் கொடுத்து சேவை செய்யக்கூடியவர்கள் யார் என அடையாளம் காணுங்கள்!
யாருக்கு வாக்களிக்கப் போவது என்பது எமது தாயக வாக்காளர்களிலையே தங்கி உள்ளது. ஆனால் அவர்களை சரியான வழியில் வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமும் உள்ளது.
வாசகர்களே! இணைய செய்தி வாசியும் வாசகர்களே!! வாக்களிக்கப்போகும் உங்கள் தாயக உறவுகளை அறிவுறுத்துங்கள்!!!
இந்நேரத்தில் வாக்காளாராகிய நீங்கள் சிந்திக்கும் நேரம்!
இது எம் வாழ்விற்கான தேர்தல்!!!
வன்னியில் – நங்கூரம்:
திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் – இல – 4
தோழர் க.சிவநேசன் (பவன்) – இல – 2
திரு. வை. பாலச்சந்திரன் – இல – 8
யாழில் – மெழுகுதிரி:
தோழர் ஸ்ரீதரன் – இல – 6
யாழில் – கேத்தல்:
தோழர் சி.கா.செந்திவேல்
மட்டக்களப்பு
தோழர் இரா.துரைரத்தினம்.
வன்னியிலிருந்த இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தமிழீழ விடுதலைக் கழகத்தினர் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அத்துடன் அம்மக்களுக்கு உதவி புரியுமாறு பல தரப்பட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வவுனியாவில் நிலை கொண்டுள்ள புளொட் அமைப்பினர் அம்மக்கள் சார்பாக பொது மக்களின் உதவியை நாடி நிற்கின்றனர். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புளொட் அமைப்பினூடாக உதவி புரிய விரும்புவோர் அவ்வமைப்பின் கொழும்புக் கிளையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுவதுடன் நிதிஉதவி செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு உங்கள் பேருதவிகளை அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்…
இலங்கை வங்கி,
கிளை: பம்பலபிட்டி
கணக்கின் பெயர்: D.P.L.F
கணக்கு இலக்கம்: 718534 Swift code: BCEYLKLX
காரியாலய முகவரி: 16, Haig Road, Colombo-04.
தொலைபேசி இல: 0094112586289 0094112586289
மேலும் ஓர் அரசாங்க உதவியோ, முதலீடுகளோ இல்லாமல் மக்களின் சேவைகருதி இன்று உங்கள் முன் நிற்கும் புதிய ஜனநாயகக் கட்சியினருக்கு உதவி செய்ய விரும்புவோர் அவர்களை தொடர்புகொண்டு கீல் வரும் அவர்களின் வங்கியில் பணம் செலுத்தலாம்.
K. Senthivel ; V. Mahendran
A/C No- 1570018335
Commercial Bank, Grandpass Branch, Colombo – 14
K. Senthivel
A/C No – 096020043126.
Hatton National Bank, Kotahena Branch, Colombo – 13
இது எம் வாழ்விற்கான தேர்தல்!!!
நன்றி!
என்றும் தோழமையுடன்
அலெக்ஸ் இரவி
புலம் பெயர் மக்களே!
தாயக வாழ் வாக்காளர்களே!
இன்று தேர்தல் நாள், 30 வருடங்களிற்கு பின் ஓர் ஜனநாஜக சூழ்நிலையில் நடைபெறும் தேர்தல். (எம் டக்கிளசு கோஷ்டியினர் கார்களை கொள்ளுத்துவது, தீவகத்தில் சக அரசியல்வாதிகளை தேர்தல் பிரச்சாரம் செய்ய தடுப்பது தவிர) .
இத் தேர்தல் எம் வாழ்விற்கான தேர்தல்!
இத் தேர்தல் முடிவுகள் தான் எமது அடிப்படை உரிமைகள் இழந்து இருக்கும் எம் தாயக மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது.
தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் என்று சொல்லி பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டு தம் குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டு தாமும் இந்தியா, ஐரோப்பா என்று சுற்றித் தெரிந்துகொண்டு இருப்பவர்களுக்கா? அல்லது இணக்க அரசியல் என்று சொல்லி எமது உரிமைகளைக் கேட்க முடியாமல், எமது மண்ணில் சிங்கள குடியேற்றங்கள். கலாச்சார சீரளிவுகளுக்கு உடந்தையாக இருந்து, தமது சின்னத்திலேயே மக்கள் முன் செல்ல முடியாதவர்கட்கா வாக்களிக்கப்போகிரீர்கள்?
அல்லது மக்களுடன் மக்களாக இருந்து மக்களின் தேவைகளை அறிந்து மக்களிற்காக இருப்பவர்களிர்க்கா வாக்களிக்கப்போகிரீர்கள்?
முடிவு செய்யுங்கள்!
பொது நலனிற்காக ஒன்று பட்டு செயல்படுபவர்களை பாராளுமன்றம் அனுப்ப புலம் பெயர்ந்த எமக்கும் கடமை உண்டு.
எமது தாயக உறவுகளை இன்று தமது வாக்குகளை சரியானவர்கட்கு போட அறிவுத்துவோம்!
இத் தேர்தல் எம் வாழ்விற்கான தேர்தல்!!!
புலம் பெயர் மக்களே!
தாயக வாழ் வாக்காளர்களே!
அலெக்ஸ் சொல்வது போல இது வாழ்வுக்கும் சாவுக்குமன ஒரு தேர்தல் என்று நீங்கள் நினைப்பீர்களாயின்,
தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்த ஒவ்வொரு கட்சியையும் நிராகரிப்பீர்கள்.
வாக்குக்களைச் சிதறடிக்கக் கூடாது என்று, ஒரு துரோகத்தனமான, அந்நியராட்சிக்கு அடிமைப் பட்ட த.தே.கூவுக்கு வாக்களிப்பதே தவறு.
யாழ் மாவட்டதில் தெரிவு உள்ளது. அங்கு தமிழரை ஏமாற்றாத புதிய ஜனநாயகக் கட்சி உள்ளது.
மேலும் த.தே.கூவை விட யோக்கியமான கட்சிகள் உள்ளன.
தமிழ் மக்களின் வாக்குக்களை அம்பாறையில் சிதறடிக்க முன்னின்ற கட்சி தான் த.தே.கூ.
இத் தேர்தல் வெறுமனே பேரம் பேசும் பிரதினிதிகளைத் தெரிவது பற்றியதல்ல.
பேரம் பேசுவோர் ஏற்கெனவெ விலை போய் விட்டனர்.
மாற்று அரசியல் பதையைத் தெரிவதற்கான வேளை இது.
பழைய குப்பைகளை விலக்கினாலே தான் ஒற்றுமை கைகூடும்.
ஆம் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்த ஒவ்வொரு கட்சியையும் நிராகரிக்கவேண்டும்.
ஆம் அதே நேரத்தில் வாக்குக்களைச் சிதறடிக்கக் கூடாது, ஆனால் அதற்குத்தானே சுயேட்சைகளை பண பலத்துடன் இறக்கி விட்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.
த.தே.கூவுக்கு மட்டுமல்ல இன்றைய நிலையில் EPDP இக்கும் வாக்களிப்பதே தவறு.
எல்லாவற்றிக்கும் மனித நேயமும்; மனிதாபிமானமும் வேண்டும்!
“WE NEED A CHANGE”
“வாழ்விற்கான தேர்தல்!!!” என்று ஏன் அலெக்ஸ் தொடங்கினாரோ தெரியாது.
மருத்துவர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா ராஜபக்சவுக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழ்க் கட்சியொன்றின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதை வைத்துச் சொன்னாரா என்று யோசித்தேன். வாசித்தால், அவர் சொல்லுவது வேறு கதை.
விடுதலைப் புலித் தலைவர் கே.பி. செய்கிற வேலைகளையும் சில முன்னாள் புலிகளின் தலையாட்டி வேலைகளையும் பார்க்கிற போது மருத்துவர் சண்முகராஜா செய்வது பாவமாகத் தெரியவில்லை.
சிலர் காசுக்காகச் செய்வதை அவர் தன் உயிரைக் காப்பாற்றச் செய்கிறார்.
மருத்துவர் தன் உயிரையும் காப்பாற்றத்தானே வேன்டும்!
யாழ்ப்பாணத்தில் அரசாங்கமும் த.தே.கூவும் சில உதிரிகளும் காசை மழை மாதிரிச் செலவழிக்கிறார்களே! யாருடைய காசு?
நோட்டுக்களில் ராஜபக்சவின் படமும் காந்தியுடைய படமும் ஜோஜ் வோஷிங்டன் படமும் இருக்குமா?
இவர் மட்டுமல்ல, TNA யில் இருந்த புலிப் பட்டியல் கிஷோர், கனகரத்தினம் தற்போது அரசாங்க அணியில்….. இவர்கள் தாம் வாழ்வதற்காக.
இந்தியாவில் வீரப் பேச்சுகள் முழங்கிய டெலோ காரர் எப்படி திரும்ப நாட்டினுள் பிரவேசித்தார்கள்?
40 ,000 சவப்பெட்டிகள் செய்த குதிரை எப்படித் திரும்ப நாட்டினுள் பிரவேசித்தது?
இன்று வட-கிழக்கில் நிற்கும் சுயேட்சைக் குழுக்கள் எல்லாம் யார்?
எல்லாம் எம்மை நாம் விற்கும்….. எமது கைக்கு இரு பக்கம் உள்ளது போல்….. இவர்களும் தாம் வாழ்வதற்காக.
ஆனால் இத் தேர்தல் எம் வாழும் உரிமையை மீட்கும் தேர்தலாக அமைய வேண்டும்.
எல்லாவற்றிக்கும் மனித நேயமும்; மனிதாபிமானமும் வேண்டும்!
“எல்லாவற்றிக்கும் மனித நேயமும், மனிதாபிமானமும் வேண்டும்” இது யாருக்கு இருக்கிறது? PLOTE இடமா?
என்னைப் பொறுத்த வரையில் “எல்லாவற்றிக்கும் மனித நேயமும், மனிதாபிமானமும் வேண்டும்”, இதைத்தான் எல்லோரிடமும் கேட்கிறேன். ஆனால் இது யாருக்கு இருக்கிறது, இல்லை என்பதை தாங்கள் அறிந்த வரையில்…. தெரிந்து கொண்டவற்றை இவ் மாற்று அரசியளிர்க்கான உரையாடல் வெளியில் பகிருங்கள்.
ஏல்லாரையும் வென்ற விற்பனையாளர்கள் த தே.கூவில் உள்ளனரே!
அவர்களை எப்படி மறப்பது?
இந்தியாவில் போய் எல்லாரையும் விலை பேசி வந்துள்ளார்கள்.
கொடுக்கப் போவோர் நாங்கள்.
யாழ்ப்பாணத்தில் வெற்றி பெறுவது உறுதி புதிய ஜனநாயக கட்சிக்கு வாக்களியுங்கள்
இன்றைய தேர்தலில் நாம் ஏன் இவர்கட்கு வாக்களிக்க வேண்டும்?
நாம் ஏன் இனவாத, மிதவாத கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்?
நாம் ஏன் முற்போக்கு சிந்தனையுள்ள பொதுநலவாதிகளை தெரிவு செய்யவேண்டும்?
சிந்தியுங்கள்…. வாசியுங்கள்…… ஒவ்வொரு வாக்கையும் வீணாக்காமல் முற்போக்கு சிந்தனைகளுடன் போட்டியிடும் வேட்பாளாகளை தெரிவு செய்து அவைரும் ஓர் பொது வேலைத்திட்டத்தில் இணைந்து எம்மக்களின் வாழ்வுக்கு புதிய பாதையில் புது யுகம் படைப்போம்!
இது எம் வாழ்விற்கான தேர்தல்!
ஆம்! இன்று நாம் பல தரப்பினராலும் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளோம். சிங்கள இனவாத அரசுகள் ஒருபக்கம். எம் தமிழ்த் தலைமைகள் ஒருபக்கம் என்று எம் மக்கள் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்பு வலயம், அபிவிருத்தி என்ற பெயரில் விரட்டப்பட்டு. எம் சொந்த இடங்களில் குடியிருப்பதர்க்கே கையேந்தி, உணவுக்காக கையேந்தி இருக்கும் நிலையில் எம்மவர்கள் மூடப்பட்டு கிடக்கும் வீதியை திருப்பி திறப்பதற்கு விழா வைத்து….நாம் உழுத மண்ணில் திரும்ப உழ விழா வைத்து, ஓடிய பஸ்சை திரும்ப ஓட விட விழா வைத்து….. என்னத்திற்கும் தம் காலிலேயே விழ வேண்டும்….. கெஞ்ச வேண்டும்…. தங்களையே நமி இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொது, இத் தேர்தல் ஓர் அரசியல் மாற்றத்தின் மூலம் “எம் வாழ்விற்கான தேர்தல்” ஆகிறது.
புதிய-ஜனநாயக கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கம்:
இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சினையே என்பதைப் புதிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது. போரின் முடிவு தேசிய இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. பேரினவாதம் அரச இயந்திரத்துடன் மேலும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதனால், தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தேசிய இனங்கள் மீதுமான தேசிய இன ஒடுக்கல் தீவிரமடைந்துள்ளது. மூன்று தேசிய இனங்களும் தங்களது இருப்பின் தன்மைக்கமைய வெவ்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
பொதுப்பட எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனத்தவரும் பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுடைய தாய்மொழிக் கல்வியுரிமை, தங்கள் மொழியில் கருமங்களைச் செய்விக்கும் உரிமை என்பன சட்டவிரோதமான முறையில் அவர்கட்கு மறுக்கப்படுகின்றது. அதை விட, உயர் கல்வி, தொழிற் பயிற்சி, மற்றும் உத்தியோகத்துறை இட ஒதுக்கீடுகள் அவர்கட்குப் பாதகமாகவே உள்ளன. அதற்கும் மேலாகப் பாரம்பரிய பிரதேசங்களில் தமிழ்த் தேசிய இன த்தின் மீதான பேரினவாத இன ஒடுக்கல் போராக முன்னெடுக்கப்பட்டதன் பய னாகத் தமிழ் மக்கள் பெருமளவிலான உயிரிழப்பிற்கும் உடற் தேசத் திற்கும் பாரிய பொருள் நட்டத்திற்கும் ஆளாகியுள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாடு கட்கும் இடம்பெயருமாறு பல லட்சக்கணக்கானோர் கட்டாயப்படுத் தப்பட்டுள்ளனர். இதன் நடுவே, உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் தமிழரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள நிலத்திற்கும் மேலாகத் திட்டமிட்ட சிங்களக் குடியே ற்றங்களும் தமிழரைத் தமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்கும் நோக்குடன் தீவிரப்படுத்தப்படுகின்றன.
அகதி முகாங்கள் எனப்படும் திறந்தவெளிச் சிறைக்கூடங்கள் ஒரு புறமிருக்க, பல ஆயிரக் கணக்கானோர் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கோ விசாரணையோ இல்லாது சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாடுகின்றனர். தமிழ் மக்களும் மலையகத் தமிழரும் மட்டுமன்றி முஸ்லிம்களும் சிங்களவரும் இவ்வாறு அரசியற் காரணங்கட்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலைக்கான மூல காரணம் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன
மேலும்:
http://kuralweb.com/20100310/ndp.aspx
அன்று 7 மாதங்கள் முன் தோழர் சி.கா.செந்திவேல் பேட்டியின் பொது கூறியது….. இன்றைய தேர்தல் நேரத்தில்:
நீங்கள் கூறும் முற்போக்கான கூறுகளுடனும் எல்லைகளைத் தாண்டும் பாதையிலும் தமிழ்த் தேசிய வாதம் பயணிக்கவில்லை என்று கூறினால் அது பழைய பாராளுமன்றத் தலைமைகளுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ்ப் போராளி இளைஞர் இயக்கங்கள் நீங்கள் கூறும் முற்போக்கான தமிழ்த் தேசிய வாதத்தை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதையிட்டு என்ன கூறுகிறீர்கள்?
தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசியவாதத்தை முன்னெடுத்ததாக நீங்கள் கூறும் தமிழ்ப் போராளி இயக்கங்கள் சில ஆரம்பத்தில் முற்போக்கான கூறுகளை அடையாளம் காட்டுவனவாகத் தோற்றம் தந்தனவே தவிர அவர்களது கொள்கை கோட்பாடுகளில் தெளிவின்மையும் ஊசலாட்டங்களும் இருக்கவே செய்தன. தமிழ் மக்களிடையே காணப்பட்ட உள் முரண்பாடுகளிலும் சிங்கள மக்களைப் பார்த்த பார்வைகளிலும் இந்தியாவை அனுகிய முறையிலும் அவர்களின் நிலைப்பாடு தெளிவற்றதாகி விரைவாகவே பிற்போக்கான நிலைகளுக்கு சென்றடைந்தது. இந்தியாவையோ அன்றி மேற்குலகத்தையோ தாங்கள் பயன்படுத்துவதாகக் கூறி இறுதியில் இவர்களே அந்நிய சக்திகளால் பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்களாகினர். ஆதலினால் அவர்கள் பெயரளவில் ஆரம்ப நிலையில் முன்வைத்த முற்போக்கானவை என்று கூறப்படும் சகலவற்றையும் தமிழ்த்தேசிய வாதத்தில் இருந்து வந்த பிற்போக்கான கூறுகளுடன் சமரசமாகி அதற்குள் மூழ்கிப் போகினர். இறுதியில் ஒருவரோடு ஒருவர் மோதியதுடன் வழமையான தமிழ் தேசிய பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்துடன் புதிய முகவர்களாகவும் மாற்றமடைந்தனர். இவர்கள் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுடன் சமரசமாகிக் கொள்ளவும் செய்தனர்.
மேலும்:
https://inioru.com/?p=4755
தோழர் ஸ்ரீதரன் என்னும் மக்கள் போராளி, தொண்டன், தலைவன்….
வடக்கு கிழக்கு என எல்லா பகுதி மக்களாலும் நன்கு அறியப்பட்வர். கிழக்கு மாகாண மக்களின் சிறப்பு பிரச்சனைகளை புரிந்து கொண்டு கிழக்கு மாகாண தலைவர்களின் செயற்பாட்டை வழி நடத்துபவர். புலிகளின் அராஜகம் தமிழ் பிரதேசங்கள் எல்லாம் நிலவிய காலங்களின் உயிர்வாழ்வதற்கான பிரச்சனை, பாதுகாப்பு, உணவு என்ற விடயங்களுக்குள் குறுகி இருந்த போதும் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து சுய பொருளாதாரத்தை தங்கியிருத்தல்; என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்சியை வழி நடத்துபவர். இன்று ஏற்பட்டிருக்கும் ஜனநாக சூழலில் அமைப்பிற்கான சுய பொருளாதாரத்தை விவசாயம்,
கடல் தொழில், வியாபாரம், சேவைகள் என்று விரிவுபடுத்தில் உழைப்பில் ஈடுபட்டு பொருள் ஈட்டல் என்ற சரியான திசைவழியில் கட்சியை கொண்டு செல்பவர்.
நல்ல எழுத்தாளர், ஆய்வாளர், சிந்தனைவாதி. கட்சியின் பத்திரிகைக்கு அப்பால் பல்வேறுபட்ட பத்திரிகை, இணையத்தளங்களில் கட்டுரைகள் எழுதி வருபவர். தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மிகச் சில அரசியல் ஆய்வாளர்களில் இவரும் முதன்மையானவர். இதற்கு இவர் எழுதி வரும் ஆய்வுக் கட்டுரைகளே சான்றாகும். மக்களின் சதாரண வாழ்வில் பாவனையில் உள்ள கலை, இலக்கியங்கள், பேச்சுவழக்கு பழ மொழிகளை தனது கட்டுரைகளில் கையாளுவதன் மூலம் தனது சிந்தனையில் உருவான கருத்துக்கள் மக்களை இலகுவில் சென்றடையக் கூடிய வலிமை மிக்க எழுத்து நடையை தன்னகத்தே கொண்டிருப்பவர்.
இவ்வாறான பன்முகப்படுத்தப்பட்ட திறமை, வல்லமை, ஆளுமை கொண்ட நேர்மையான மக்கள் போராளியை மக்கள் இம்முறை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதே ஜனநாயக முற்போக்கு சக்திகளின் விருப்பமாகும். இவ்வரலாற்றுக் கடமையை மக்கள் செய்து முடிப்பார்கள் என்று நம்புகின்றேன். இவருடன் இணைந்து செயற்பட இவரின் சகாக்களையும் மக்கள் தெரிவு செய்து அனுப்புவதே தமிழ் மக்களின் விடிவை உறுதி செய்ய சுழி போட்டதாக அமையும்..!!
மேலும்:
http://www.sooddram.com/Articles/samaran/sooddram_Apr072010.htm
தொடரும்…..
தொடர்ச்சி….. புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை:
பேரினவாதம் எம் நிலங்களை அபகரிக்கவும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தொடர்சியாக இடம்பெயரவும் எமது சமூகக்கட்டமைப்புகளும் இனப்பரம்பலும் சின்னாபின்னப்படவும் “கூடிய நடவடிக்கைகள் எதுவும் எமது தேசியத்தைக் காக்கும் நடவடிக்கைகளல்ல. யுத்தத்தினால் இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத்தான் 1990ல் வவுனியாவிலும்“ குறிப்பாக வவுனியா நகரிலும் காணமுடிந்தது. வவுனியாவில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். எல்லைப்புறக் கிராமங்களில் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலை. இந்த நேரத்தில் புளொட் அமைப்பினராகிய நாங்கள் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும்“ அழிந்த இடங்களை சீரமைத்து மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளகுடியேற உதவிகள் செய்தோம்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். அதற்காக மக்களின் அவலங்களில் அரசியல் செய்வதை நிராகரிப்போம். அழிந்துபோயுள்ள எமது பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவோம்.. அதற்காக எமது மக்களை அடகு வைத்து சோரம் போகமாட்டோம். தமிழ் தேசியம் என்பது ஒவ்வொரு தமிழனதும் பிறப்புரிமை. அதற்காக அதை வைத்து சுயலாப அரசியல் செய்யமாட்டோம். எமது தாயகத்தினை சூழ்ந்துள்ள ஆரோக்கியமற்ற அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்லவும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு புதிய அத்திவாரமாக அமையும் என நம்புகிறோம்.
மேலும்:
http://www.plote.org/news.php?lang_code=ta&cate_id=1&scate_id=4&sscate_id=3206
“we need a change”
காலம் போகவில்லை, கட்சி நேர வாக்காளர்களின் முடிவுகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன.
புலம் பெயர் தமிழர்களே இத் தேர்தலில் எமக்கு வாக்கு இல்லை என்றோ, நாம் சகல சுபாக்கியத்துடன் புலம் பெயர் நாட்டில் வாழ்கிறோம்…. இது இலங்கையில் நடக்கும் தேர்தல் தானே என்று இருக்காதீர்கள். இன்று சிங்கள இன வாதிகளாலும், தமிழர்க்காகப் போராட புறப்பட்ட இயக்கங்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் எமது வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே நாம் புலம் பெயர் தேசங்களிற்கு வந்தோம். ஆனால் அங்கோ இன்று எம் உறவுகள் எம் தமிழ்த் தலைமைகளாலும், எம் தலையில் மிளகாய் அரைத்து தம் கறியின் சுவைக்கு காரம் சேர்க்க போட்டி போடும் சிங்கள இனவாதிகளாலும் பிழையான வழியில் இட்டு செல்லாமல் இருக்க நாம் நடுநிலமையாக இருந்து எம் உறவுகள் சரியான பாதையில் செல்ல துணை நிற்போமாக!
இனவாத, ஏகத் தலைமை என்று சொல்லும் கூத்தமைப்பினரை (TNA), EPDP கட்சியினரை புறக்கனிப்போமாக!!
எமது தாயக உறவுகளை, நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்களை அறிவுறுத்துவோமாக!!!
இது எம் வாழ்விற்கான தேர்தல்!!!!
WE NEED A CHANGE !!!!!
நன்றி!
என்றும் தோழமையுடன்
அலெக்ஸ் இரவி
யாழ் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு வீதம் மந்தகதியில் இடம்பெற்றுவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் 11 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நண்பகல் கடந்துவிட்ட நிலையிலும் கூட வாக்களிப்பில் சுறுசுறுப்பு காணப்படவில்லை எனவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.