முப்பது ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குறுந்தேசிய வாத அரசியல் முள்ளிவாய்க்காலில் முடிபிற்கு வந்த பின்னர், இலங்கையின் புதிய அரசியல் சூன்யமான சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. புலிகளின் பின்னர் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் அரச அடக்குமுறைக்கு எதிரான பலமான எந்த அரசியல் சக்திகளும் அற்றுப்போன சூழல் உருவாகியுள்ளது.
இலங்கை சோவனிச அரச அதிகாரம், புலிகளைக் காரணமாக முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகவல்ல அனைத்து எதிர்ப்புக் சக்திகளையும் நிர்மூலமாக்கியுள்ளது.
இன்னொரு புறத்தில், தமது தமிழ் பேசும் மக்கள் சார்ந்த ஜனநாயக, முற்போக்கு எதிர்ப்பரசியலும் அதன் கீழ் நிலை அங்கங்களான வெகுஜன அமைப்புக்களும் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன.
இந்த அரசியல் பகைப்புலத்திலிருந்து தான் இலங்கை அரச சர்வாதிகாரம் இலங்கை முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. உலகின் புதிய பொருளாதார ஒழுங்கு ஏற்படுத்திய அரசியல் சூழல், துருவ வல்லரசுகளின் தோற்றம் என்ற அனைத்துப் புறக்காரணிகளும் ஒருங்கு சேர அரச பாசிசம் ஒரு குறித்த நீண்ட காலத்திற்கு தன்னை நிலை நிறுத்தும் வலுவைப் பெற்றுள்ளது.
இந்த அரசியற் சூழல் இரண்டு பிரதான புறநிலைகளை உருவாக்கியுள்ளது.
- தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் தோற்றுப் போய்விட்டோம் என்ற நம்பிகையின்மையும் விரக்தியும்.
- சிங்கள மக்கள் புலிகளற்ற சூழலில் அரச அடக்கு முறையை உணர ஆரம்பித்திருக்கும் நிலை.
இந்திய அரசினதும் ஆசியப் பொருளாதார உருவாக்கத்தினதும் அரசியல் பொருளாதர நலன்களுக்கு உட்பட்டுச் செயலாற்றும் இலங்கை அரசு இரண்டு முதன்மையான அரசியற் செயற்பாடுகளை கொண்டுள்ளது.
-
தமிழ் மக்களின் நம்பிக்கையீனமும் விரக்தியும் ஒருங்குசேர்ந்து உருவாகவல்ல புதிய எதிர்ப்பியக்கத்தின் சாத்தியக் கூறுகளை எதிர்கொள்ளல்.
- சிங்கள மக்களின் புதிய எதிர்ப்புணர்வை எதிர்கொள்ளல்.
எதிர்ப்பரசியலின் சாத்தியத்தை நிர்மூலமாக்கும் வழிமுறைகளை இலங்கை அரசும் அதன் துணை அமைப்புக்களும் தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியிலிருந்து உருவாக வாய்ப்புள்ள தேசிய எழுச்சியை அழிப்பதன் மூலமே சாதித்துக்கொள்ள முனைகின்றன:
-
தமிழ்ப் பேசும் மக்கள் முன்னால் உள்ள தேவை உரிமைக்கான அரசியல் அல்ல அபிவிருத்தியே என்ற கருத்தை முன்வைப்பதனூடாக உரிமைக்கான அரசியலை அழித்தொழித்தல் :
வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் பல்தேசியக் நிறுவனங்களின் குப்பை மேடாக இப்பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக ஒழுங்கு சீர்குலைந்துள்ள வடகிழ்க்கில் இவ்வொழுங்குகளை நட்சத்திர விடுதிகள், நட்சத்திர உணவகங்கள், மதுபான விடுதிகள், உல்லாசப் பயணத்துறை போன்ற நுகர்வு வர்க்கத்தின் உணர்வுகளிலிருந்து நிறுவுதலூடாக சீரழிவை ஏற்படுத்துகிறது.
இதேவகையில் திட்டமிட்ட நுகர்வுக் கலாச்சாரத்தால் ( consumeristic culture) உருவாக்கப்பட்ட Franchised state என்று அழைக்கப்படும் பங்காளாதேஷ் என்ற நாடு இன்று மீட்சியடைமுடியாத வறுமையில் சிக்கித் தவிக்கிறது.
உரிமைக்கு எதிராக “சீரழிவு” அபிவிருத்தியை முன்னிறுத்தும் ஒன்று கூடல் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக்த்தில் அரசின் துணைக் குழுக்களாலும் அதன் புலம்பெயர் தொங்கு தசைகளாலும் நிகழ்த்தப்பட்டது. இலங்கை அரசின் இந்தத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் இந்திய அரசும் அதன் பல்தேசியக் நிறுவனங்களும் உள்ளன என்பது அவற்றின் மிகையான முதலீடுகளே சாட்சி.
-
உரிமை முன்னிலைப்படுத்தாத நிலையில் தேசிய அரசியலை சீர்குலைத்தல் :
திட்டமிட்ட குடியேற்றங்கள், சிங்கள மொழியின் திட்டமிட்ட திணிப்பு, பௌத்ததின் விரிவாக்கம், போன்ற அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் அரச துணைக்குழுக்களின் துணையோடு இனச் சுத்திகரிப்பாக நடைமுறைப்படுத்தபடுகிறது. தேசியத்தைச் சீர்குலைத்தல் என்பதும் இனச் சுத்திகரிப்பு என்பதும் இன்றைய இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரதான அம்சமாகும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும், நில அபகரிப்பையும் அரச துணைக் குழுக்களும் அவற்றின் புலம் பெயர் தொங்கு தசைகளும் நியாயப்படுத்துகின்றன.
அழிவிற்குப் பின்னான சமூகச் சூழலில் மனித நடத்தை குறித்து ஆராயும் கிரிஷ் அஷ்மான் தனது நூலில்( Understanding Human Behavior and the Social Environment) குறிப்பிடுவது போல, அழிவிற்குப் பின்னான ஐந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சமூகச் சூழலில் மனித நடத்தை சுய நலம் மிக்க சொந்த இருப்பை நிலை நாட்டிக்கொள்ளவே பயன்பெறும் என்று மதிப்பிடுகிறார். இயற்கையான இந்த மனோ நிலையை பல புறக்காரணிகளும் தாக்கத்திற்கு உட்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறான மனோ நிலையைப் பயன்படுத்திக்கொள்ள அரசியல் வியாபாரிகள், அபிவிருத்தி என்ற சுலோகத்தின் கீழ் இணைந்து கொள்கிண்டு மக்கள் மீதான தமது அதிகாரத்தைப் பிரயோக்க முனைகின்றனர்.
ஆசிய நாடுகளுக்கு காலனியாதிக்க நாடுகள் ஏற்றுமதி செய்த ஜனநாயக முறைமையானது, நிலப்பிரபுத்துவ அமைப்புடன் ஒப்பீட்டளவில் முற்போக்கானது. ஏற்றுமதி செய்யப்பட்ட ஆசிய ஜனநாயக முறைமை உலக மயமாதலின் பின்னால் செத்துப் போய்விட்டது. மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்து சாரிசாரியாகக் கொன்றொழித்துவிட்டு அவர்களின் பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் புதிய ஆசிய ஜனநாயகம் அபாயகரமானது.
பழங்குடி மக்கள் மீது அவர்கள் வாழும் பகுதிகளைக் கொள்ளையடிப்பதற்காக படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடும் இந்திய ஜனநாயகம், ஐம்பதாயிரம் அப்பாவிகள் மீது குண்டுபோட்டு அழித்த இலங்கை ஜனநாயகம் என்று அது தனது குறைந்தபட்ச நெகிழ்வுத் தன்மைகளைக் கூட இழந்துவிட்டது.
முதலாளித்துவ ஜனநாயகத்தை மறு சீரமைப்பதற்கான வேலைகள் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஜனநாயகம் ஏற்படுத்தும் இடைவெளியில் மக்களமைப்புக்கள், மக்கள் நிர்வாக அங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தவிர, அரசும் அதன் துணைக் குழுக்களும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகளும் எதிர்கொள்ளப்பட வேண்டும். உலகமெங்கும் பரந்து கிடக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட முற்போக்கு சக்திகளின் இணைவோடு இதன் ஆரம்பம் அமைக்கப்படலாம்.
ஆக, முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்காக, அதன் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவதற்காக, பாராளுமன்ற ஜனநாயகத்தை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத அரசியற் சக்திகளை தேர்தலில் ஊக்கப்படுத்துவதும் ஆதரவளிப்பதும், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய கடமை.
“இந்த ஜனநாயகம் ஏற்படுத்தும் இடைவெளியில் மக்களமைப்புக்கள், மக்கள் நிர்வாக அங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தவிர, அரசும் அதன் துணைக் குழுக்களும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகளும் எதிர்கொள்ளப்பட வேண்டும். உலகமெங்கும் பரந்து கிடக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட முற்போக்கு சக்திகளின் இணைவோடு இதன் ஆரம்பம் அமைக்கப்படலாம்.”….தாங்கள் சொல்வது புலிகளையும் ஏற்காமல், தற்போது இருக்கும் மாற்று தலைமைகளையும் ஏற்காமல் இருப்போரின் கைதட்டளுக்கான மேடைப் பேச்சுக்கும், அவர்களின் மனவலி, ஆதங்களிற்கு ஓர் உடன் நிவாரனியாகவே இருக்கிறது.
திரு. சபா நாவலன் அவர்களே, இன்று நாம் புலம்பெயர் மண்ணிலிருந்துகொண்டு எப்படி மக்களமைப்புக்கள், மக்கள் நிர்வாக அங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், மாணவர் அமைப்புகளை எமது ஈழமக்களிடையே உருவாக முடியும்? மக்களுடன் மக்களாக இருந்துதான் இதை செய்ய முடியும். இதற்க்கு இன்றிருக்கும் எமது நாட்டு சூழ்நிலை இடம் தருமா? முன்பு ஓர் இனவாத அரசிற்கு எதிராக போராடிய நிலையில், பின் அதையோத்திய. . …அதற்கும் மேலான புலித்தலைமையுடன் எதிர்த்து போராட முடியாதநிலையிலேயே இன்று புலம்பெயர் தேசங்களில் அகதியாகவுள்ளோம்.
இன்றோ அதற்கும் மேலாக புலிகளும் அழிந்த நிலையில் எமது தமிழ் தலைமைகளே போட்டி போட்டுக்கொண்டு அரசிற்கு துணை போவது மட்டுமல்லாமல் என்னத்திற்காகப் போராடினோமோ அதையே மறந்து எதிர்நீச்சல் அடிக்கும் நிலையில், மேலும் தங்கள் பாணியில் சொல்லும் ” புலம் பெயர் தொங்கு தசைகளும்” போட்டிபோட்டுக் கொண்டு நியாயப்படுத்துகின்ற நிலையில் இவற்றை எப்படி முன்னெடுக்கலாம்? I’m asking in practical.
மேலும் இவ் ” புலம் பெயர் தொங்கு தசைகளும்” தமது பிளைப்பிற்க்கான நியாயத்தை நியாயப்படுத்துகின்ற நிலையில் புறப்பட்டுவிட்டார்கள். ஈழத்தில் தமிழர் ஒற்றுமைஎன்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு புதுப் புது கட்சிகள், பிளவுகள் மாதிரி, புலம் பெயர் தேசங்களிலும் யாரும் இணையம் தொடங்கலாம், அமைப்பு தொடங்கலாம் என்பதற்கு இணங்க, ” கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்’ முதன்முதலாக ஏற்பாடு செய்த கருத்தரங்கிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. இக் கருத்தரங்கிற்கு மூத்த இடதுசாரித் தொழிற்சங்கவாதி எஸ்.தருமராசன் தலைமை வகித்தார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தான் வாழும் புலம்nhயர் நாட்டிலிருந்து தாயகம் சென்று, சுமார் நான்கு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தமிழ் – முஸ்லீம் – சிங்கள அரசியல் தலைவர்களைச் சந்தித்து உரையாடி, பல விடயங்களையும், கண்ணோட்டங்களையும் திரட்டி வந்துள்ள பிரபல ஊடகவியலாளர் எஸ்.மனோரஞ்சன் அவர்களுடான ஒரு சந்திப்பை கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் பலரே மேற்கண்ட அபிப்பிராயங்களை முன் வைத்தனர்”. இப்படியும் ஓர் செய்தி. http://www.thenee.com/html/230210-4.html
மேலும் அறிய
Paranjothi Jeyakumar
Posted on 10/02/2009 at 6:23 pm
வங்காலை செல்லையா இக்னாசியஸ் (மனோ ரஞ்சன்)
மிகவும் பலவீனமான ஒரு பேர்வழி
எழுத்துக்கும் பேச்சுக்கும்
நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை.
சும்மா பீலா விட்டு பிலிம் காட்டி
தம்பட்டம் அடித்து
மனோ ரஞ்சன் போன்றோர்
இம் இனத்தின் சோரம் போன
துரோகிகள்.
https://inioru.com/?p=4837
தாங்கள் ஆறு மாதங்களின் முன்பு எழுதியதையும் நினைவூட்ட விரும்புகிறேன்..”இலங்கை அரச குற்றவாளிகளின் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு நடுவில் இன்றைய செயற்பாட்டு ரீதியான முற்போக்கு சக்திகளின் இணைவு என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிடினும் குறைந்த பட்சம் அழிவுகளை மட்டுப்படுத்தவும் போராட்ட சூழலை விரைவுபடுத்தவும் ஆகக் குறைந்த முன்நிபந்தனையாக அமையலாம்” திரும்ப கேட்கிறேன் ……what ‘s in practical ? https://inioru.com/?p=4641
முற்போக்கு சிந்தனையுடன் நடக்கப்போவதை எம்மக்களிற்கு நல்லதை, தேவையை உணர்ந்து….நடைமுறையில் செய்வோம்….செய்ய முயற்ச்சிப்போம்.
தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.
ஓர் “தன்மானத்தமிழனின்” குமுறல்!வேண்டுதல்!
தமிழினத்தின் தலை விதி!
தமிழ்த்தாயகத்தில் தமிழ் இனவிருத்தி அற்று தமிழினம் அழிந்துகொண்டு போகிறது. குடியிருக்க மக்களின்றி தமிழ் மண் குறுகிக் கொண்டு போகிறது, வசதியுள்ள தமிழ் மக்கள் குடும்பத்துடன் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் வெற்று இடங்களில் வேறினத்தவர்கள் குடியேறுகிறார்கள், அவர்கள், தங்கள் இனத்தை பெருக்கி, தங்கள் எதிர்கால சந்ததிகளுக்காக இடத்தையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏழைத் தமிழ் மக்களும், உண்மையான தமிழ், தமிழ்மண் பற்றாளர்களும் முடிந்தவரைக்கும், எமது தமிழ் தாயகத்திலேயே வாழ்ந்து மடிவோம் என்ற தியாகச் சிந்தனையுடன் வாழுகிறார்கள்.
ஆனால், எமது புலன்பெயர் தமிழ் இனமோ, அந்த,அந்த நாடுகளில் குடியுரிமையை பெற்று நிதந்தரமாக அங்கேயே தங்கி விட்டார்கள்.
அவர்கள் வசதியாக மட்டுமல்ல, நல்ல பாதுகாப்புடன் வாழ்ந்துக்கொண்டு இன்னும் பழைய புராணம் பாடிக்கொண்டு கற்பனை கனவில் மிதக்கிறார்கள்.
இங்கு, அவர்கள் விட்டுட்டு போனமாதிரியே தான் எல்லாம் இருக்கபோகுது. அவர்கள் நினைக்கிற மாதிரித்தான் எல்லாம் நடக்கப்போகிறது. விடுமுறைக்கு வந்து பந்தா காட்டிவிட்டு போனால் எல்லாம் சரி என்ற ஒரு நினைப்பு.
இங்கு மெல்ல, மெல்ல கிழக்கு மாகாணமும் தொடக்கி வன்னி மண்ணும் பறிபோகவுள்ளது.கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள்.
வெளிநாடுகளில் பணத்திக்கும், ஆடம்பர வாழ்வுக்கும், வரட்டு கௌரவதிக்கும் அடிமட்ட இனமாக, நவீன கொத்தடிமைகளாக, வேற்று நாடுகளுக்கு, வேறு இனத்துக்கு கடுமையாக ஊழியம் செய்யும் தமிழர்களே!
உண்மையில், தமிழ்த்தாயக பற்று, தமிழ்அன்பு, தமிழ் மக்களில், தமிழ்த்தாயகத்தில் அக்கறையுள்ள தமிழன் என்றால்?,
நீங்கள், உங்கள் குடும்பத்துடன் இங்கு திரும்பி வந்து, எங்களைப்போல் மண்வெட்டி பிடித்தாலும், மரம் வெட்டினாலும், மாடு வளர்த்தாலும் பரவாயில்லை என்று, எமது மண்ணில், எமது இனத்துடன், எமது தாயகத்தில் தன்மானத்துடன் வாழ வேண்டியது தானே.
உங்களில் யாரும் ரெடியா?
– தன்மானத்தமிழன்
ஓர் இணையதளத்தில் கிடைத்தது.
//திரு. சபா நாவலன் அவர்களே, இன்று நாம் புலம்பெயர் மண்ணிலிருந்துகொண்டு எப்படி மக்களமைப்புக்கள், மக்கள் நிர்வாக அங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், மாணவர் அமைப்புகளை எமது ஈழமக்களிடையே உருவாக முடியும்? //
நியாயமான கேள்வி, புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நான் இங்கு முன்மொழிய வரவில்லை. ஒரு போராட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த கருத்தை முன்வைத்தேன். அவ்வளவு தான்.
//மக்களுடன் மக்களாக இருந்துதான் இதை செய்ய முடியும். இதற்க்கு இன்றிருக்கும் எமது நாட்டு சூழ்நிலை இடம் தருமா? //
தராது. இதனால் தான் இந்தத் தளத்தை உருவாக்குவதற்கான ஜனநாயக மீளமைப்பிற்காகத் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்றேன்.
//இன்றோ அதற்கும் மேலாக புலிகளும் அழிந்த நிலையில் எமது தமிழ் தலைமைகளே போட்டி போட்டுக்கொண்டு அரசிற்கு துணை போவது மட்டுமல்லாமல் என்னத்திற்காகப் போராடினோமோ அதையே மறந்து எதிர்நீச்சல் அடிக்கும் நிலையில், மேலும் தங்கள் பாணியில் சொல்லும் ” புலம் பெயர் தொங்கு தசைகளும்” போட்டிபோட்டுக் கொண்டு நியாயப்படுத்துகின்ற நிலையில் இவற்றை எப்படி முன்னெடுக்கலாம்? ஈ’ம் அச்கிங் இன் ப்ரச்டிசல்//நடைமுறைக்கான வழிமுறை:
1. அடிப்படை முதலாளித்துவ ஜனநாயகத்தை மீள் கட்டமைத்தல்.
2. மக்களமைப்புக்களை உருவாக்குவதற்கான வேலை முறையை முன்வைத்தல்.
3. கட்சித் தலைமை ஒன்றை உருவாக்கல்.
4. தற்பாதுகாப்பு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தல்.
இவை முள்ளிவாய்க்கால் அதற்கு முன்னைய அனுபவங்களிலிருந்து பகுத்தாராய்ந்த குறைந்தபட்ச அடிப்படைகளாக நான் கருதுகிறேன்.
//
முற்போக்கு சக்திகளின் இணைவு என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிடினும் குறைந்த பட்சம் அழிவுகளை மட்டுப்படுத்தவும் போராட்ட சூழலை விரைவுபடுத்தவும் ஆகக் குறைந்த முன்நிபந்தனையாக அமையலாம்” திரும்ப கேட்கிறேன் ……what ’s in practical ?//
இந்திய முற்போக்கு சக்திகல், உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள், இவ்வாறான இணைவை செயற்பாட்டுத் தளத்தில் முன்வைக்கிறார்கள். புதிய திசைகள் என்ற அமைப்பு நேபாள முன்னணியோடு இணைந்து நடத்திய போராட்டத்தை இதற்கு முன் மாதிரியாகக் குறிப்பிடலாம். இவையெல்லாம் தவிர்க்கவியலாதவாறு வளர்ச்சியடையும். புதிய போராட்டம் உருவாகும் நிலையில் அதனை சரியான திசையை நோக்கி நகர்த்த இவை பயன்படும்.
//ஓர் இணையதளத்தில் கிடைத்தது.//
வன்னியில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது யாழ்ப்பாணத்திலோ கிழக்கிலோ மலையகத்திலோ இருந்து கருத்துச் சொல்லக்கூடாது என்று கருத்துவது சரியல்ல. மேற்கில் வாழ்வதால் தான் இதையாவது பேச முடிகிறது. இலங்கையில் குறைந்த பட்ச ஜனநாயக சூழல் உருவாகும் போது ஒரு குறித்த தொகையினராவது அங்கு மறுபடி செல்வார்கள் என்பது உண்மை. இன்று கொழும்பிலிருந்தவர்கள் வடகிழக்கிற்குச் செல்லவில்லையா? காரை நகரில் 90 களில் 500 பேர்வரையே இருந்தார்கள்.இன்று நிலைமை வேறு. தவிர, புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் ஈழப் பிரச்சனை குறித்த கருத்துக்களை முன்வைக்க முடியாது என்று கூற வியாபாரிகள் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை.