நாடு முழுவதும் 16 வது நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 6 வது கட்டமாக வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும், தேர்தல் பாதுகாப்பிற்கு, ஒரு லட்சத்து, 43 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,” என, டி.ஜி.பி., அனுப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்தம், 28,224 கட்டடங்களில், 60,818 ஓட்டுசாவடிகள் உள்ளன.தேர்தல் பாதுகாப்பு பணியில், 1.43 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையுடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத அடிப்படை வாதிகளும், இனக்கொலையாளிகளும் ஊழல் பெருச்சாளிகளும், கோமாளிகளும் மக்கள் முன் சென்று வாக்குக் கேட்கும் வன்முறையைத் தேர்தல் என்று அழைக்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள் தேர்தலில் போலிசையும் சட்டத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
தேர்தலையொட்டி மாலை 6 மணி முதல், 24ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி 36 மணிநேர 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து வியாழன் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.