நமல் இராசபக்ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
இலங்கை நில அளவை திணைக்களத்தின் வீல் கப் வாகனம், இலங்கை தொழில் துறை திணைக்களத்தின் பிக் அப் வாகனம், மஹிந்தவின் துணைவியாரின் டொயோட்டா பிராடோ வகை பஜெரோ வாகனம் ஆகியனவே விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் மஹிந்தவின் துணைவியார் சிரானி அவர்க்ளின் மைத்துனரும் படுகாயமடைந்துள்ளார்.
அரச சொத்துக்களை மஹிந்த அணி தேர்தலிற்கு பயன்படுத்தியமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக எதிரணி குற்றம் சாட்டியுள்ளது.