மூழ்கிடும் கப்பலில் ஏற நெனச்சிடும்
முட்டாள் பசங்கள என்ன சொல்ல
மூடையில் காசினை கொட்டிக்கொடுத்ததும்
மூத்திரம் சிலருக்கு தீர்த்தம்புள்ள
மூலையில் எங்கள போட்டு மிதிச்சது
மூளைய விட்டின்னும் போகவில்ல
மூனாம் மொறையவன் மூக்க ஒடைக்கனும்
முட்டுக் கொடுப்பவன் ‘சோனி’யில்ல….
ரோசம் பறந்தின்று முந்தி விரித்திடும்
மந்திரி ரோட்டுல நாயுமில்ல
நாசமாப் போன நரியனின் பக்கம்
நம்மவர் போவது ஞாயமில்ல
தேர்தலில் மட்டும் தேத்தண்ணி ஊத்திடும்
தேவாங்கு எமக்கு தேவையில்லை…
தேடிவருவான் ‘மாமா’மாருடன்
தேஞ்ச செருப்பின காட்டுபுள்ள…
தேஞ்ச செருப்பின காட்டு பிள்ளே… என்ற இந்த கவிதையின் தலைப்பை படித்தவுடன், கவிதையை உடனே வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மறைந்த கல்முனைக் கவிஞர் பசீல் காரியப்பரின் கவிதை வரிகள் சிலவும் ஞாபகத்திற்கு வந்தன.
“ தேர்தலில் மட்டும் தேத்தண்ணி ஊத்திடும்
தேவாங்கு எமக்கு தேவையில்லை…
தேடிவருவான் ‘மாமா’மாருடன்
தேஞ்ச செருப்பின காட்டுபுள்ள… என்ற வரிகள் என்னை கவர்ந்தன.
1980 ம், ஆண்டளவில் கவிஞர் பசீல் காரியப்பர் அவர்களின் சிறிய வீட்டில் பிளேயின் தேநீர் அருந்திய வண்ணம் பல இலக்கிய உலக கதைகள் பேசிய வண்ணம் அவர் வாசித்து காட்டிய கவிதை வரிகளை தற்போது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கவிஞர் பசீல் காரியப்பர் ஒரு ஆசிரியர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
கொப்பி இல்லாத பிள்ளைகளை நான்கூப்பிட்ட போது
கண்களை கசக்கியபடி அவள் என் மேசை முன் வந்து நின்றாள்..
ஏன் வீட்டு பாடம் எழுதி வரவில்லை என்று கண்டித்தேன்
“வாப்பாவுக்கு கண் தெரியா, உம்மாகிட்ட காசு இல்ல..
கூப்பன வித்துப் போட்டு கொப்பி வாங்கி தாரன் என்றா
சொல்லி அழும் போதினிலே சுடு நீர் துளி மணிகள்
முள்ளாக என் நெஞ்சுக்குள் முனை எடுத்து பாய்ந்ததடா..
கிழக்கின் ஏழை இசுலாமியர்களின் வாழ்வு இது தான்…