Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

இனியொரு... by இனியொரு...
06/16/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

tamil_muslimsஇலங்கை சனத்தொகையின் 9 வீதமான முஸ்லீம் தமிழர்கள் தொடர்பான புனைவுகளும் கற்பனைக் கதைகளும் திட்டமிட்ட வதந்திகளும் சிங்கள, தமிழ்ம் முஸ்லீம் தரகு முதலாளித்துவ அதிகாரவர்க்கங்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. முஸ்லீம்களின் அடிப்படை வாழ்வோடு தொடர்பற்ற முஸ்லிம் காங்கிரஸ் போன்ற தலைமைகள் அவர்களை ஏனைய தமிழ்த் தேசிய இனங்களுடன் முரண்பாட்டை ஆழப்படுத்துவதற்கும் மறுபுறத்தில் இலங்கை பேரினவாத அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவும் உதவிற்று.

அதே வேளை தமிழ்ப் பேசும் மக்களின் தலைமைகள் இலங்கை அரசின் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்பவே செயற்பட்டன. விடுதலைப் புலிகள் உடப்ட இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல்கள் முரண்பாடுகளை ஆழப்படுத்தின.

ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமைக்கான தேவை உணரப்படுகின்ற இந்த வேளையில் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய ஆய்வுக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.

1985 ஆம் ஆண்டில் சிறு நூலாக வெளிவந்த இக்கட்டுரை நூலகம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு இங்கே இணைக்கப்படுகிறது.

நூலுக்கான முன்னுரை கீழே:

ஒடுக்குதல்களுக்கு எதிராகப் போராடும் வர்க்கங்களோ அல்லது தேசிய இனங்களோ, தமது சமூக அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக சமகாலத்தில் நிலவும், தேசிய சர்வதேசிய நிலைமைகளையும் முரண்பாடுகளையும் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து தெளிவதன் மூலம் மட்டுமே, தமது போராட்டம் தொடர்பாகவும் தாம் எதிர்நோக்கும் நிர்மாணப் பணி தொடர்பாகவும், சரியானதும் தொலைநோக்குள்ளதுமான மூல உபாயத்தையும் தந்திரோபாயங்களையும் வகுத்தல், சாத்தியப்படும்.

பல்லாயிரம் மக்களின் தலைவிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இவ்வகையில் மட்டுமே, பொறுப்புள்ளதும் இறுதி வெற்றிக்கான மார்க்கத்தில் பொருந்துவதுமான தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும், இயக்க ரீதியாக மேற்கொள்ளுதல் இயலும்.

ரஷ்யா, சீனா, வியட்னாம், அல்பேனியா, கியூபா, நிக்கரகுவா போன்ற நாடுகளில் மக்கள் தலைமைகள் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலேயே தமது தேசியப் போராட்டம், தேச நிர்மாணம் தொடர்பான மூல உபாயங்களை வகுத்துக் கொண்டன. இவற்றை மேற்படி காலகட்டங்களில் மேற்படி நாடுகள் சார்ந்து நிலவிய தேசிய, சர்வதேசிய முரண்பாடுகள் தொடர்பாகப் புரிந்து கொள்ளுதல் மூலம், பயனுள்ள சர்வதேச அனுபவங்களை நாமும் பெறுதல் அவசியமாகும்.நாடுகளிடையே சமூக, கலாசார, பொருளாதார நிலைமைகள் மாறுபடுவதையும்; இயங்கியல் போக்கில் பல்வேறு வகைகளிலும் காலகட்டங்கள் மாறிச் செல்வதையும், நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சர்வதேச அணுபவங்கள் பலவும் பலதேசிய இனங்கள் வாழும் நாடுகளில் (Multi-Nations Countries) புரட்சிகளின் போது இடம்பெற்ற விவாதங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றின் ஊடாகவே நமக்குக் கிட்டுகின்றன. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் வேறு மார்க்கங்கள் அற்றுப்போன நிலையில் தனது இருப்புக்கும், தேசிய விடுதலைக்குமாகப் போராடும் நிலைமைகளில் போதிய அளவு பங்களிப்பு, சர்வதேச ரீதியில் இடம்பெறவில்லை. பெரும்பாலான தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் 1840களின் பின் முதன்மை பெற்று ஒரு நூற்றாண்டினுள்ளேயே பெரும்பாலும் நடந்து முடித்து விட்டன. அது வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டம் என்பதும் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

போராடும் நமது தேசிய இனம் சார்பாகவும், இந்து சமுத்திரத்தில் மையப்பட்ட சர்வதேச நிலைமைகள் சார்பாகவும் சமகால நிலைமைகளை ஒட்டிய தகவல்களை விஞ்ஞான ரீதியாகத் திரட்டிப் பகுப்பாய்ந்து நமது விடுதலையின் மார்க்கத்தைக் கண்டு கொள்ளுதல் மூலம் மட்டுமே நமக்கும், சர்வதேசியத்துக்கும் உருப்படியான வரலாற்றுப் பங்களிப்பை நாம் செய்தல் கூடும்.

நான் எழுதி வரும் எமது மண்ணும் எமது வாழ்வும் என்ற நூலின் ஒரு பகுதியான ‘தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ என்ற அத்தியாயத்தை, அவசியம் கருதிச் சிரமம்பாராது வெளியிட முன்வந்தமைக்காக அலை வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றிகள்.

எனது சிரமம் நிறைந்த பொருளாதார நிலையில், இந்த ஆய்வுகளைத் தொடர பல்வேறு வகைகளிலும் உதவியாக இருந்த அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் எனது நன்றிகள். திக்குவல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும், பேருவலையில் இருந்து கல்முனை வரைக்கும் சகல விதத்திலும் எனக்கு கற்பித்த முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் நண்பர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.

எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு பணியாற்றப் போகிற தமிழ், முஸ்லிம், மலையக இளைஞர்களுக்கு இந்நூல் காணிக்கை.

வ. ஐ. ச. ஜெயபாலன்

சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியும் இன உணர்வும் ஓங்கியிருந்த 1955 ஆம் ஆண்டில், யாழ்ப்பாண நகரபிதாவாக ஒரு முஸ்லீம் ஏகமனதானதாகத் தெரிவுசெய்யப்பட்டார். நகரபிதாவாகத் தெரிவு செய்யப்பட்ட காதி எம்.எம்.சுல்தான் நான் மதத்தில் முஸ்லீமாயினும் இனத்தில் தமிழன் என அறிக்கை வெளியிட்டார்.

-ஜெயபாலனின் கீழ் வரும் நூலிலிருந்து..

நூலைத் தரவிறக்கம் செய்ய…:

இலங்கை முஸ்லிம்கள்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்! : எஸ்.ஹமீத்

பயங்கரவாதி கோட்டாபயவின் அமைப்பான BBS ஐ புலம்பெயர் நாடுகளில் தடைசெய்யக் கோருவோம்

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    As that Ragavan said it in the British Broadcasting Corporation World Service there is a big vacuum. The Muslims her are all Sunni and they speak Tamil all over the Island still in 2014.

  2. Alex Eravi says:
    12 years ago

    BBC Thamil Osai began its shortwave broadcast on May.3.1941 initially as a weekly newsletter…  Progressing to a biweekly program in the 1980 & a daily 30 minutes broadcast in 1990s…

    Tamil was one of the first BBC South Indian languages to be broadcast…
    Karampon Somu Udaiyaar grandson Somasundarampillai   Sivapathasuntharampillai… (1912)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...