மன்னர்கள் அதிகாரத்திலிருந்த காலத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் சங்கிலி போன்று மன்னர்களும் பேரரசுகளும் காணப்பட்டன. ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி ‘ என்ற பழ மொழி தமிழ் நாட்டிற்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. மன்னர்கள் ஆட்சி செய்த நாடுகள் அனைத்திற்கும் இது பொருத்தமானது. இவ்வாறு மன்னராட்சி நடைபெற்ற காலப் பகுதியில் அதிகமான நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்தவர்களே சமூகத்தில் ஆதிக்கம் மிகுந்தவர்களாக இருந்தனர். அவர்களே மனித வாழ்கைக்குத் தேவையான உற்பத்தியைக் கையகப்படுத்தி வைத்திருந்தனர்.
நிலத்தைச் சார்ந்தே சமூகத்தின் உற்பத்தி அமைந்திருந்தது. நிலங்களை அதிகமாக சொந்தமாக வைத்திருந்தவர்களை நிலப் பிரபுக்கள் என்றார்கள். அந்தச் சமூகத்தை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்றார்கள். மன்னர்களே அதிக நிலத்தை உடமையாக வைத்திருந்தனர்.
ஆக, மன்னர்களின் ஆதிகத்தில் குறு நில மன்னர்கள், நிலப் பிரபுக்கள், சிறு நில உடமையாளர்கள், பண்ணை அடிமைகள் என்று சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் மன்னர்கள் மாற்றமடையும் போது மக்களின் பண்பாடு, மொழி போன்றவற்றின் ஒரு பகுதியும் மாற்றமடைந்தது. நிலப் பிரபுத்துவ காலத்தில் அந்த அமைப்பிற்குரிய தத்துவம் ஒன்று அவசியமானது. மதங்களே அத் தத்துவ அமைப்பை சமூகத்திற்கு வழங்கியது.
குறு நில மன்னர்களை அழித்தும் அட்க்கியும் மன்னர்கள் பேரரசுகளை உருவாக்கினார்கள். குழுக்களாக இருந்த
சமூகங்களை ஒன்றிணைத்து பேராசுகள் தோன்றிய போது மக்கள் மத்திய்ல் குழப்பங்கள் உருவாகின. பேரரசுகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந்தார்கள். இந்தியாவில் இந்து மதமே இவற்றை முடிவிற்குக் கொண்டுவந்து மக்களை அடக்கியாள வழிசெய்தது. வெவ்வேறு தொழில் பிரிவினைகளக் கொண்ட குழுக்களான சமுதாயத்தை ஒருங்கிணைத்து பேரரசுகள் உருவாகின. ஒவ்வொரு தொழில் செய்தவர்களும் ஒவ்வோரு சாதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அது கடவுளின் படைப்பு எனவும் மையப் பேரசை நோக்கி மக்களை இசைவாக்கம் அடைய வைத்தது இந்துத்துவம்.
இதனால் மக்களை அடக்கியாள மன்னர்களுக்கு மதங்கள் தேவைப்பட்டன. ஆக, மதங்களே நிலவுடமைச் சமுதாயத்திற்குரிய தத்துவார்த மேற்கட்டுமானத்தை வழங்கின.
இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, நிலப்பிரத்துவ சமூக அமைப்புக் காணப்பட்ட எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும். நாடுகளில் குறிப்பாகக் காணப்பட்ட உற்பத்தி முறைக்கு எற்ப மதங்களின் பண்பும் வேறுபட்டது.
இந்தியா போன்ற நாடுகளில் நிலம் சார்ந்த பயிரிடுகை விவசாயமே பிரதான தொழில். அதற்காகக் கால் நடைகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் விவசாயத்திற்கு நிலங்களை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் கால் நடைகள் தேவைப்பட்டன. இதனால் கால் நடைகளைக் கொல்வதும் மாமிசம் உண்பதும் இந்து மதத்திற்கு ஒவ்வாத ஒன்று என்றும் குற்றச் செயல் என்றும் இந்து மதம் கூறியது.
ஐரோப்பாவிலோ கால் நடை வளர்ப்பும் மாமிச உணவும் மக்களின் பிரதான உணவாகியது. இதனால் ஐரோப்பாவில் பேரரசுகளை இறுக்கமாகக் கட்டிவைத்திருந்த தத்துவமான மதங்களுக்கு மாமிச உண்ணுதலுக்கு எதிரான பிரச்சாரம் தேவைப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறு மக்களை இணைக்கும் மையப் பகுதியாக மன்னர்களும், பேரரசுகளை காக்கும் தத்துவார்த்த மேல்கட்டுமானமாக மதங்களும் நில உடமைச் சமூகத்தில் காணப்பட்டன.
நிலப் பிரபுத்துவ காலத்தில் தேசங்களோ அன்றி தேசியமோ இருந்ததில்லை. மன்னர்களின் ஆட்சி நிறைவுறும் போதே தேசங்கள் தோன்றின.
சமூகம் குறித்த அறிவியல்பூர்வமான பார்வையற்ற இனவாதிகள் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும் போன்ற சுலோகங்களை முன்வைக்கிறார்கள்.
முட்டாள்தனமான இவ்வாறான முடிவுகள் ஈழப் போராட்டம் ஆரம்பிப்பதற்கான நுளை வாசல்களில் காணப்பட்டன. பிற்காலத்தில் இவையே பல அழிவுகளுக்கும் வழிவகுத்தன.
தாமே ஆண்ட பரம்பரை என்ற உணர்வை மக்களுக்கு தோற்றுவித்து அதையே சமூகத்தின் பொதுப்புத்தியாக்கி ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் போராட்ட தளத்திலிருந்து நீக்கி பேரினவாதத்திற்குச் சேவை செய்தார்கள்.
ஆண்டபரம்பரை ஆட்சிசெய்ய வேண்டுமானால், அமரிக்காவும் கனடாவும் செய்வ்விந்தியர்களுக்கும், அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அப்ரோஜீன் பழங்குடி மக்களுக்கும் சொந்தமாக வேண்டும்.
ஆக, நில உடமைச் சமூக அமைப்பின் அழிவிலேயே தேசங்களும் தேசிய இனங்களும் தோன்றுகின்றன. ஆண்ட பரம்பரைகளிலிருந்தல்ல.
மிகுதி அடுத்த பதிவில்…
//////சமூகம் குறித்த அறிவியல்பூர்வமான பார்வையற்ற இனவாதிகள் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும் போன்ற சுலோகங்களை முன்வைக்கிறார்கள்.
முட்டாள்தனமான இவ்வாறான முடிவுகள் ஈழப் போராட்டம் ஆரம்பிப்பதற்கான நுளை வாசல்களில் காணப்பட்டன. பிற்காலத்தில் இவையே பல அழிவுகளுக்கும் வழிவகுத்தன./////நாவலன் என்ன விளையாட்டு இது . சில முட்டாள்கள் ஏன் தமிழீழம் எண்ட கேள்விக்கு “ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள் வேண்டும் எண்டு உங்களுக்கு சொல்லி இருக்கலாம்” .
கோழி கூவுவதால் தான் சூரியன் உதிக்கின்றது எனச் சொல்பவர்களும் சமூகத்தில் இருக்கத் தான் செய்வார்கள். இதற்காக அந்த சமூகம் முழுவதும் அப்படி எனச் சொல்ல முடியாது .
அதே போல் ஆண்ட பரம்பரை ஆழ நினைப்பது என காரணம் சொல்பவர்கள் இருக்கலாம் அதற்காக ஆண்ட பரம்பரை அர்த்ததில் தமிழீழ விடுதலைப் பொராட்ட நுழை வாயில் இருந்தது என சொல்வது அப்பட்டமான பொய். ஏன் இப்படி எழுதினீர்களோ தெரியாது . வாசகர்களைக் கிண்டி விடுவதும் நல்லது எண்டு யோசிச்சிருந்தால் சபாஸ்
எல்லா தமிழீழ விடுதலை இயக்க தலைமைகளும் , மீண்டும் அழுத்தமாக சொல்லுகின்றேன் எல்லா தமிழீழ விடுதலை இயக்க தனிச் சிங்களச் சட்டம் , இனக் கலவரங்கள் , குடியேற்ற திட்டங்கள் , குறிப்பாக தமிழர் மீதான கல்வி வேலைவாய்ப்பு ஒடுக்கு முறைகள், சிறீலங்கா இராணுவ வெறியாட்டங்கள் , சிங்கள இனவாதிகளின் தமிழர் மீதான கொடூரங்கள் என சொல்லொணா துன்பங்கள் தாங்க முடியாமலே காரனமாக ஆயுதப் தமிழீழ போரட்டத்துள் குதித்தார்கள். இதனை ரெலோ இயக்க தங்கண்ணா “னாம் ஆயுதம் மீது மோகம் கொண்ட வெறியர்கள் அல்ல” என மிக அழகாக நீதி மன்றில் சொல்லி இருந்தார்.
சைவ சமயம் எப்படி தோற்றம் பெற்றது பாரத தேசத்தின் பண்புகளை எப்படி வளர்த்து வந்தார்கள் என்பது மொழியால் வரணிக்க முடியாதவை ஆனால் மதத்தால் வர்ணிகப்பட்ட ஒரு இறை நம்பிகையே இத்தவரை எமது சமூகத்தை அதாவது தமிழினத்தை பாது காக்கின்றது. என்பதனை மறுக்க முடியாது.
மன்னராட்சி என்பதும் ஆண்ட பரம்பரை என்பதும் மட்டுமல்ல பூர்வீகத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வாழும் மக்களினத்தின் வரலாற்றை தோற்கடிக்க முடியாது. அதனால் அதனை அடையாளப்படுத்த உண்மை யை மதிககும் உத்தமர்களாக அரம்பத்திலிருந்து வரும் சொதனைகளை வென்று வராலாற்றின் விதிவழியே அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். . மக்களின் அவலங்களை விட எதிரியினது எதிர்பார்ப்புக்களுக்கு விலை போகாமல அர்ப்ப மனதர்களை அவர்கள் இனம்காண வேண்டும். உண்மை வரலாறுகள் அவர்களது எதிர்காலத்தை ஊக்கு விக்கும் சந்தற்பங்களை அவர்கள் பரிய வேண்டும். காலம் அவர்களை தூண்டிக்கொணடே இருக்கும் அது அவர்களுக்கு சந்தற்பமாக அமையும் போது அவர்கள் அதனை தட்டிக்கழிக்க முடியாத சந்தற்பமாக அமையும் .
அதனால் காலம் ஒரு வரலாற்றைத்தீர்மானித்து விட்டால் அதற்கான காலம் என்பதனை விட அதற்கான தராதரத்தை எல்லோராலும் பெற்று விட முடியாது. எதிரி யாகவும் துரோகியாகவும் இனம் கண்டு உன்னத மான செய்பாடுகளை பாதுகாக்கும் ஒருவராகவே உலகத்தின் வரலாற்றுப்பாதை கட்டமைகப்படுகின்றன அதிலும் பாரத தேசமும் ஈழத்தின் வரலாறும் முதன்மை யானவை எனக் கூடக் கூறலாம் அந்த அளவிறகு ஒரு புனிதமான பாதை என்பதனை கடந்தகால உயிர் தியாகங்களினது வரலாறு தாங்கி நிற்கின்றது. அதனை ஒரு ஆண்டவன் பரம் பரையில் இருந்துதான் புரிய முடியும் என்பதும் வரலாறு ஆகும். ;
மார்க்சீசவாதிகளது பெரும் குறை எதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். நவீனத்துவம், முதலாளித்துவம், வர்க்கப் போராட்டம் ….. என யதார்த்தத்துக்கு அப்பால் எழுதி வருகிறார்கள். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்பது ஒரு குறியீடு. ஒரு காலத்தில் அரசு வைத்து தம்மைத்தாமே ஒரு குறித்த நிலப்பகுதியில் ஆட்சி செய்த மக்கள் அதனை அந்நியருக்குப் பறிகொடுத்தபின் மீண்டும் அதனை அடையப்பாடு படுகிறார்கள். ஆள நினைப்பது மக்களே ஒழிய இறந்துபோன அரச பரம்பரை அல்ல. அய்யன்னா தொடக்கப்பட்ட போது 50 நாடுகளே உறுப்புரிமை வைத்திருந்தன. இன்று அதன் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பில் பெரும்பான்மை ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைத்ததே காரணம். எடுத்துக்காட்டு குரோசியர், மசிடோனியர், உக்பெனிஸ்தானியர் போன்றோரைக் குறிப்பிடலாம்.
நாம் எந்த தளத்தில் நிக்கின்றோம் என்பதே இன்றைய தேவை .என்னுடய 10 ருபாய் காசையும் பக்கத்து வீட்டுகாரன் 12 காசையும் கிறடிட் காட் என்ற போர்வையில் அனுபவிப்பவன் எவனோ ஓடி என்ற போர்வையில் .இன்று எது தேவையோ அதுவே இன்றைய தேவையாகவும் உளகம் உள்ளது .380 ருபாய் பவுன் 220 ருபாய்க்கு தீர்மானிப்பது சூத்திரமாக அதிகார வர்க்கம் தானே .இதில் மதம் இனம் மொழி சம்மந்தம் உண்டா………….? மாக்சிசத்தையும் தான்டி ஒரு புதிய சிந்தனைத்துவத்தை கொண்டுவரவீட்டால் சந்திரமன்டலத்துக்கு போவதுதான் சாத்தியமான சிந்தனை .அத்திய அவசிய பொருள் மலிவில்லா நாடு என்றும் உருப்படாது .சந்திரமன்டலத்தில் அத்திய அவசிய தேவையே வாழ்க்கையாக அமையும் மொழியா? தேசியமா? என்பது 10+12 …..380+220 போல் மறைமுக தந்திரமே உளக அரங்கிள்
இந்த தேசிய தமிழின பிழைப்புவாதிகள் 25 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்பதை விடுத்து வேண்டுமானால் 6 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒரு தனிநாடு அமைக்கப் போராடுவது வரவேற்கக்கூடியது. தமிழ் தலைமைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சியிலிருந்த முற்போக்கான அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவாகச் செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து. மனிதனைக் கடிப்பது போல தனது இனத்தையே அழித்து நிர்வாணமாக்கியவர்கள் புலிகள்! புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்று சம்பந்தன் இடைக்கிடை கூறி வருகின்றார். இந்த தேசிய விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அழிவுகளையே தந்தது. தமிழ் மக்களை மோசமான அடக்குமுறைக்கு உட்படுத்தியது. ஏராளம் ஆய்வறிவாளர்களையும் அரசியல் தலைவர்களையும் எவ்வித நியாயமும் இல்லாமல் கொன்றொழித்தது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுதலித்ததோடு அவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக இனப்பிரச்சினை இன்றைய மோசமான அளவுக்கு வளர்வதற்குக் காரணமாக இருந்தது. புலிகளின் தோல்வி பற்றி பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் அது விவேகமற்றவர்களின் முடிவு என்று கூறினார். அப்படியானால் புலிகள் முன்னெடுத்த அரசியல் விவேகமற்ற அரசியல் என்பதே அர்த்தம். அந்த விவேகமற்ற அரசியலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் செயற்படுவது எந்த வகை அரசியல்?