வன்னிப் படுகொலைகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியினரைத் துடைத்துச் சுத்திகரித்த பின்னரும் தேசிய இனங்கள் குறித்தும் அவற்றின் பிரிந்து போகும் உரிமை குறித்தும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய ஆரம்ப நிலைக்கு வந்திருக்கிறோம். இழப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளும் நிகழ்சிப்போக்கில் நமது சமகாலப் புறச் சூழலை சார்ந்த அரசியல் விவாதங்களைப் போலவே, தத்துவார்த்த விசாரணைகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வகையில் தேசியம் என்பதன் முழுமையான உள்ளர்த்தம் சரியான வகையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும் பிற்போக்கானது என்ற வாதம் வேவ்வேறு நோக்குநிலைகளிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாகவும் மறுபுறத்தில் இனவாதக் குராலாகவும் புனையப்படுகின்றது.
இலங்கையிலும் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளிலும் சுய நிர்ணய உரிமையும் பிரிந்து போகும் உரிமையும் குறித்த உரையாடல்கள் இலங்கை இனப்படுகொலைகளின் பின்னர் முனைப்படைந்துள்ளன.
குறிப்பாக நான்கு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. முதலில் பிரிந்து போதலை ஆதரித்தல் என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் பிற்போக்கு முதலாளித்துவத்தை ஆதரிப்ப்பதாக முன்வைத்தல்.
2. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளலும் பிரிந்து போதலை நிராகரித்தலும்.
3. பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொண்டாலும் அதன் உள்ளடக்கமான பிரிந்து போதலை நிராகரித்தல்.
4. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் பிரிந்து செல்லும் உரிமையையும் ஏற்றுக்கொள்ளலும் தேசிய இன ஒடுக்கு முறை மேலோங்கியுள்ள நிலையில் அதற்காகப் போராடல்.
பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடது சாரிகள் மார்க்சிய லெனினியத்தை தமது வாதங்களுக்குத் துணையாக அழைப்பதும் மார்க்சிஸ்டுக்களாகத் தம்மைப் பிரகடன்ப்படுத்திக்கொள்வதும் வழமை.
ஒடுக்கும் பேரினவாத அரசின் கருத்தியலோடு ஒரு புள்ளியில் இணையும் இவர்களின் உரிமை மறுப்பு மார்க்சிய ஆய்வறிதலுக்கு அடிப்படையில் முரணானது.
இந்த நிலையில் சுய நிர்ணயம் குறித்தும் பிரிந்து போதல் குறித்தும் லெனின் முன்வைக்கும் தர்க்க ரீதியான ஆய்வுகளை இப்போது மீள் விசாரணை செய்தல் பொருத்தமான அணுகுமுறையாக அமையலாம்.
முதலில் பிரிந்து போதலை ஆதரித்தல் என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் பிற்போக்கு முதலாளித்துவத்தை ஆதரிப்ப்பதாக அமையும் என்ற வாதத்திற்கு லெனினின் தீர்க்கமான பதில் எமது தெற்காசிய இடதுசாரிகளுக்கென்றே கூறுவதைப்போல அமைகிறது. ரோசா லக்சம்பேர்க்குடன் நிகழ்ந்த விவாதத்தில் லெனின் முன்வைகும் கோட்பாட்டு விளக்கம் இது.
” பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என எம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள். ரோசா லக்சம்பேர்க் இத்தைத்தான் கூறுகிறார். இதற்கு நம் பதில் இதுதான்: இப்பிரச்சனைக்கு செயல்பூர்வமான தீர்வு காணுவது முதலாளிகளுக்குத் தான் முக்கியமானது. இரு போக்குகளின் கோட்பாடுகளையும் வேறுபடுத்தி அறிவதுதான் தொழிலாளர்களுக்கு முக்கியமானது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கும் தேசிய இனத்தை எதிர்த்து எந்த அளவிற்குப் போராடுகின்றதோ நாம் அந்த அளவிற்கு அப்போராட்டத்தை ஒவ்வொரு வகையிலும் ஏனையோரைக்காட்டிலும் அதிகமாக ஆதரிக்கிறோம். ஏனென்றால் ஒடுக்குதலுக்குத் தீவிரமாக சிறிதும் விட்டுக்கொடுக்காத எதிரி நாம் தான்.”
இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டங்கள் முற்போக்கனவை மட்டுமன்றி அவசியமானவையும் கூட. பிரிந்து போதலுக்கான போராட்டம் என்பதை ஏனையோரைக் காட்டிலும் மார்க்சிஸ்டுக்களும் இடதுசாரிகளுமே ஆதரிக்கின்றனர்.
ஆக, உலக மயமாதல் அதன் பின்னான முதலாளித்துவத்தின் புதிய வடிவங்கள் என்ற அடிப்படையான தத்துவார்த்தப் பிரச்சனைக்கள் குறித்த ஆய்வுகளின் வெளிச்சத்தில் இவை மீட்டமைப்புச் செய்யப்பட வேண்டுமாயினும், இலங்கைப் பிரச்சனையில் பிரிந்து போதல் குறித்த இடதுசாரிகளின் தவறான நிலைபாட்டிற்கு லெனின் உகந்த பதிலை முன்வைக்கிறார்.
தமது கோட்பாட்டுத் தளத்தை விரிவாக்கும் லெனின், பிரிந்து போகும் உரிமையை மறுப்பதன் எதிர்விளைவை இவ்வாறு விளக்குகிறார்.
“நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமையை முன்வைத்துப் ஆதரித்துப் பேசத் தவறினால், நாம் முதலாளிகளின் நோக்கத்திற்கே உதவுவோம். தவிர, ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் நிலப்பிரபுக்களின் வரம்பில்லா ஆட்சியின் நோக்கத்திற்கே உதவுவோம்” என்கிறார்.
ஆக, பிரிந்துபோகும் உரிமையை நிராகரித்தல் என்பதும் ஒடுக்குமுறைக்கு உள்ளான சூழலில் பிரிந்துசெல்வதற்கான போராட்டத்தை நிராகரித்தல் என்பதும் உலக முதலாளித்துவத்திற்குத் துணைசெல்வதாகும். தமது சந்தைப் பொருளாதார நலன்களுக்காக மட்டுமே உலகின் ஒருங்கிணைவைக் குறித்துப் பேசுகின்ற ஏகபோக வல்லரசுகள் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை.
நமதுஆரம்பகால இலங்கை இடதுசாரித்துவம் பிரிந்து போகும் உரிமையை மறுத்ததும் தேசிய இனப்பிரச்சனை குறித்தை முரண்பட்டைக் கையாளத் தவறியமையும் நிலப்பிரபுக்களுக்கும் தேசிய உருவாக்கத்தின் எதிரிகளான தரகு முதளாத்துவத்திற்குமே வழியைத் திறந்துவிட்டிருந்தது.
தேசிய இன அடக்குமுறையின் உச்சபட்ச எல்லையில் இத் தரகு முதலாளிகளும் நிலப் பிரபுக்களும் தேசியத்திற்கு எதிரான தமது போராட்டத்தை விடுதலைக் குழுக்களூடாக முன்னெடுத்தனர். இவர்களின் பெரும்பகுதி வன்னிப் படுகொலையின் பின்னர் ஒடுக்கும் அரசுடன் இணைந்துகொண்டமை குறித்துக்காட்டத்தக்கது.
இலங்கை இடதுசாரிகளின் வரலாற்றுத் தவறு பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை தீவிர வலதுசாரி இயக்கங்களின் தலைமையை நிறுவியது. அவ்வாறான தீவிர வலதுசாரியத்தின் தலைமையில் வளர்ச்சியடைந்த தேசிய விடுதலைப் போராட்டம் இனவாதப் போராட்டமாகச் சீர்குலைய அதன் மறுபுறத்தில் இனவாதத்திற்கு எதிரான பேரினவாதம் மேலும் உறுதிபெற்றது. அதன் அழிவை முள்ளிவாய்க்காலில் சந்தித்த நேர்ந்தது. புலிகள் சார்ந்த இனவாதிகள் எவ்வாறு தமது கடந்தகாலப் போராட்டம் சரியான திசைவழி கொண்டது என இன்னமும் வாதிக்கிறார்களோ அவ்வாறே இடதுசாரிக் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துகின்றன.
பேரினவாதம், தமிழ் இனவாதம், பிறழ்வுற்ற இடதுசாரியம் என்ற அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அபாயம் இன்னமும் எதிர்கொள்ளப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.
இலங்கையின் இடதுசாரிகள் தமது மரபார்ந்த சிந்தனை முறையிலிருந்து முறித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்தில் முனைப்புப் பெற்று பின்னர் எரியும் பிரச்சனையாக உருப்பெற்ற தேசிய இனப் பிரச்சனையை ‘தீட்டு’ மனப்பான்மையோடு அணுகியமையினாலேயே அவர்களால் ஒரு காத்திரமான தலையீட்டைச் செய்ய முடியவில்லை. இந்த அரிவரிப் பாடம் கற்றுக் கொள்ள சிலருக்கு 30 வருடங்கள் தேவைப் பட்டிருகிறது. சிலருக்கு இன்னும் 30 வருடங்கள் தேவைப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தாங்கள் எழுதியிருக்கிற விடயம் தற்போது முக்கியப்படுத்தப்பட்டதொன்று. இது தொடர்பாக …
http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={9081115F-9C3E-4940-8AEC-0289573FBADE}
Vijey
இந்த கட்டுரையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இனங்களின் பிரிந்துபோகும் உரிமையை வலிறுத்திவர்கள் போல்சேவிக்குகள் அதற்கு தலைமைதாங்கிய லெனின் அவர்கள். அவர்களுக்கு கட்சியில் பலமிருந்தது. உலக தொழிலாளர்கட்சி மிகுந்த பலமுடன் தோன்றும்- தோன்றும் போது முதாலித்தவத்தை தோற்கடிக்க முடியும் என்றார்கள். அப்படியே சொந்தநாட்டு முதாலித்துவத்திற்கும் கணக்கு தீர்த்தார்கள். சிலவருடங்களின் பின் துரஷிஸ்மான நிகழ்வுகள் நடந்தேறியன. அது இப்போதைக்கு அவசியம் இல்லை. ஆகவே சுயநிர்ணஉரிமை என்பது அவர்கள் முதாலித்துவத்தை தோற்கடிக்க ஒரு தந்திரோயமாகவே பாவித்தார்கள். வர்கப்போராட்டத்தை விருத்திசெய்வதற்கு அவசியமானது 100 வருடங்களுக்கு முன்பு. இன்று அப்படியல்ல. ஒருவன் வெள்ளவத்தைதேனீர்கடையில் சோடக் குடித்துக்கொண்டிருக்கும் போதே கனடாவில் இருந்து செய்து போகிறது அவர் மணைவிக்கு இதுவே உலகம் கையளவுக்கு மாறிவந்ததின் அர்த்தம். சோடவிஷயம் மட்டுமல்ல பணபுளக்கம் வியாபாரம் சந்தைகள் கூட இந்த நிலைமையில் தான் மாறிவந்து கொண்டிருக்கின்றன. இனங்களுக்கான சுயநிர்ணயஉரிமை என்பது லெனினது கூட இருந்தாலும் காலவதியானவையே! சகல இடதுசாரிகளும் இந்த தந்திரோபாயத்தை பாவித்துதான் ஒருபயங்கரவாதஇயக்கத்தை இனவிடுதலைபோராட்டம் என்றுசொல்லி இறுதியில் இடதுசாரிகளை அழித்துமல்லாமல் நாட்டைவிட்டும் வெளியேற நிர்பந்தித்தது. ஆகவே இந்த காலத்திற்கொவ்வாத புரிதல் மேலும் அழிவுகளை தரும் என்பதை கட்டுரையாளர் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை. இனங்களின் சுயநிர்ணயஉரிமைக் கோட்பாடு இன்றும் பொருந்த கூடியது என விளக்கம் தந்தால் அதை பற்றி கேட்பதற்கும் எனதறிவை விரிவாக்குவதற்கும் தயாராக இருக்கிறேன்.
தமிழர்கள் பிரிந்து போகும் உரிமையைக் கோருவதாக வைத்துக்கொள்வோம். இணைந்த வடக்கு-கிழக்கை ஒரு நிலப்பகுதியாக பிரிக்க நினைக்கிறார்கள்.
அங்கே கிழக்கை தாயகமாகக்கொண்ட முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இவ்வாறு பிரிந்து செல்வதில் ஆர்வமில்லை. விருப்பமும் இல்லை.
இப்போது தமிழரின் பிரிந்து செல்லும் உரிமை முஸ்லிம்கள் விடயத்தில் எடுக்கக்கூடிய நிலைப்பாட்டின் கீழ் கோடிடுக.
1. கிழக்குவாழ் முஸ்லிம்களையும் பலவந்தமாக பிரித்தெடுத்துக் கொண்டு செல்லல்
2. வடக்குக்கிழக்கில் இருந்து, பிரிந்துசெல்லப் பிரியமற்ற முஸ்லிம் இனத் துரோகிகளை விரட்டி வெளியேற்றி விடுதல்
3. வடக்குக்கிழக்கைப் பிரித்துவிட்டு பிறகு கிழக்கை பிரித்து முஸ்லிம்களுக்குவழங்குதலும், அந்தக்கிழக்கைக்கொண்டுபோய் முஸ்லிம்கள் தெற்கோடு இணைத்தலும்
4. வடக்கை மட்டும் பிரித்தல்
சுயநிர்ணய உரிமை என்பதே அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடியதாகவே இருக்க முடியும். உலக வரைபடத்தையும் வரலாற்றையும் ஆராய்ந்து பார்த்தால் தமிழ் முஸ்லிம் மக்களின் குடிப்பரம்பல் ஒன்றும் விசித்திரமானதல்ல. உலகில் இது போன்ற பல நாடுகள் சுமுகமான முறையில் தமது எல்லைகளை வகுத்திருக்கிறார்கள். இப்போது என்னவோ பேச்சு வார்த்தை மேசையில் உட்கார்ந்து எல்லை வகுக்கும் வேலை தான் பாக்கி என்பது போல் இருக்கிறது பிரிந்தனின் வாதம். தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமைக்கு மாறாக முஸ்லிம்களின் குடிப்பரம்பல், மூன்றில் இரண்டு கடல் வளம் தமிழ் பகுதிக்குப் போய் விடும், தமிழர் பகுதிகளில் நதி வளம் கம்மி என்று அளப்பவர்கள் ஒருமுறை உலக விடுதலைப் போராட்டங்கள் இப்படி எத்தனை சவால்களை எதிர் கொண்டு வெற்றிகரமாக தமது வெற்றியை நிர்ணயம் செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு எதியோப்பியாவில் இருந்து எரித்திரிய நாடு பிரிந்த போது எதியோப்பியா தனது முழுக் கடல் வளத்தையும் இழக்க நேரிட்டது. முஸ்லிம் மக்கள் 100% பேரும் பிரிந்து போவதில் விருப்பமில்லாதவர்கள் என்பதில் உண்மையில்லை. இந்த விடயம் சம்பந்தமாக சமயம் வரும் போது அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் முடிவெடுப்பார்கள். உண்மை நிலையை அறிந்து கொள்ள ஒரு நேர்மையான அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த பேரினவாதிகள் தயாரா?
தேசியயினங்களின் சுயநிர்ணய என்கிற பதம் அல்லது கோட்பாடு முதாலித்துவயரசுகளுக்கு கோரிக்கை வைப்பதற்கல்ல. மாறாக ஒரு நாட்டின் முதாலித்துவயரசுக்கு கணக்கு தீர்பவையை அடிப்படையாக கொண்டவை.
உருவநிலையில் ஜேவீபி யும் இடதுசாரி இடத்தைத்தான் கொண்டிருக் கிறது. உண்மையில் எதுவோ? இதில் வர்க்கநிலையை ஒத்துப்போவதை கவனிக்காமல் ஏன்வேறுபட்ட சமூகத்தை துணைகிழுக்கிறார் இந்திரன்.
நாளை சாதிப்பிரிவனையும் வேறுபட்ட மதங்களையும் துணைக்கழைப் பார் போல்லிருக்கிறது.
பிரிந்தன்,
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்துசென்று தனியரசாவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதே- இது முதலாவது !
ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது அது பிரிந்து செல்வதற்காகப் போராடுதல் என்பதும் பிரிவினையை ஆதரிப்பது என்பதும் ஜனநாயக முற்போக்கு சக்திகளதும் இடதுசாரிகளதும் கடமை – இது இரண்டாவது!
ஒட்டோபவர், ரோசா லக்சம்பர்க் போன்றவர்களுடன் லெனின் நடத்திய விவாதங்களில் இதன் தெளிவான விளக்கங்களைக் காணலாம். வேண்டுமானால் இன்னொருதடவை கட்டுரையாக எழுதுகிறேன். இங்கே சிக்கல் என்னவென்றால், இலங்கையில் இடதுசாரிகள் சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதற்கான உரிமை என்பதை ஏற்றுக்கொண்டு அவ்வாறு பிரிந்துசெல்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்றாவது குறைந்தபட்சம் சொல்லியிருக்கலாம்.
அறுபது ஆண்டுகளாகப் சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதற்கானது அல்ல என்று ஆயிரம் தடவை இடதுசாரிகள் சொல்லியிருக்கிறார்கள். இது திரிபுவாதம். இந்தத் திரிபைத் திருத்திக்கொண்டு பிரிந்து செல்வது தேவையற்றது, தேசிய இன முரண்பாடு இலங்கையில் இல்லை என்று சொன்னால் அது சந்தர்ப்பவாதம். இது இரண்டும் இணைந்தது இடதுசாரி சந்தர்ப்பவாதம்.
இப்போது முஸ்லீம்கள் விவகாரத்திற்கு வருவோம். முஸ்லீம்கள் பொதுவான பிரதேசத்தைக் கொண்ட தனியான தேசிய இனமா? இல்லை என்றால் அவர்கள் தனியான தேசிய இனமாகப் பரிணாம் பெறுவது முற்போக்கானதா? என்ற தத்துவார்த்த முடிபுகளுக்கு வாருங்கள். அவர்கள் தனியான தேசிய இனம் என்றால் அவர்கள் பிரிந்து செல்லும் உரிமை பெற்றவர்களே. அதனை விடுத்து அவர்கள் இணைந்து வாழ்வதே சிறந்தது என்று கருதினால் அது அவர்களின் உரிமை.
தத்துவார்த்தத் தளத்திலேயே அப்பட்டமான திரிபுவாதக் கருத்துக்களை முன்வைத்திருக்கும் நிலையில், நடைமுறை முடிபுகள் சாத்தியமற்றது.
எது எவ்வாறாயினும், விவாதங்களை ஆரம்பிக்க நான் தயார்.. உங்கள் வரவு நல்வரவாக எதிர்பார்கப்படுகிறது.
பிரிவினை,தன்னாட்சி,சுயநிர்ணய உரிமை,தேசியம் என்கின்ற கண்ணாம்பூச்சிச் சொல்லாட்சிகளில் பொதிந்திருக்கிற போதையினுள் சிக்கி சிதைவுண்டு போன வரலாறுகள் பலவற்றை நாம் கண்ணுற்றவர்கள்.கனடா வாழ்பிரான்சியர்கள் கீயுபெக்கை தன்னாட்சி கொண்ட பிரான்சாக பிரகடனப்படுத்தப்போராடினார்கள்.அதற்காதரவான கட்சியை வெற்றியீட்டச்செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள். இன்றைக்கு தலைகீழாக தன்னாட்சிக்கோட்பாட்டை தகர்த்தெறிந்துவிட்டு பிரான்சியர்கள் ஜனநாயகமே வழியென்கின்றார்கள்.வர்க்கப்புரட்சி என்பதெல்லாம் சுத்தப்புரட்டு.லெனினின் பழைய குப்பைகளுக்குள் இருந்து விடுபட்டிருக்கிற ரஸ்ய மனிதனை தயவு செய்து சந்தித்துப்பேசுங்கள்.கம்போடிய எல்லைக்குள் புதைந்துகிடக்கிற எலும்புகள்,ஏன் முள்ளிவாய்க்கால் எலும்புகளும்தான் உதாரணமாய் இருக்கிறது வல்லவன் மட்டுமே வாழ்வான் என்பதற்கு????
கனடிய பிரெஞ்சுக்காரா்கள் தனிநாடாக இன்னும் பிரிந்து செல்லவிரும்பவில்லை ஆனால் சுயநிர்ணயத்தை எட்டிவிட்டார்கள் அல்லவா?
மதிப்பிற்குரிய குமார் அவர்களே, சுயநிர்ணயத்தை கியூபெக் மக்கள் எட்டிவிட்டதால் பிரிவினைக்கொள்கையினின்றும் அவர்கள் விடுபட்டுவிட்டார்கள் என்பது வேடிக்கையாயிருக்கிறது. கனேடிய அடிப்படைச் சுய உரிமைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டதொன்றல்ல. இதே உரிமைகள் அவர்கள் பிரிவினைகேட்டுப் போராடிய போதும் இருந்தது.நாவலன் அவர்கள் சொல்லவிளைகிற /சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்துசென்று தனியரசாவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதே/ என்கின்ற நியாயத்தை எட்டாமலேயே பிரிவினை கேட்டவர்கள்.மறுபடியும் கூடிவாழ்கின்றார்கள்.
“கிழக்கு தீமோரை நினைவில் கொள்க”
பேரினவாதம், தமிழ் இனவாதம், பிறழ்வுற்ற இடதுசாரியம் these are just words educated Tamils use to mesmerizes fellow Tamils. Sinhalese and Tamils fates are determined by Bilderberg Group. Ceylon got dominion status from Briton on February 04, 1948. Just before 1948 Bilderberg Group stared its mission through missionaries in Ceylon. (All most all the missionaries are used by Bilderberg as mercenaries around the world. Sad part is most of the missionaries do not know they are used as mercenaries.) First weapon was “Wheat Flour” agreement between US and Ceylon governments.
After wheat flour agreement Sinhala colonization started and followed by communal riots. Even well-educated economics PHD holder NM Perera never talks publicly about the first weapon used against Ceylon’s innocent civilians.
Fellow Sinhalese and Tamils please learn about Bilderberg Group. Once you learn about Bilderberg Group Sinhalese and Tamils will know how to get independence from this evil force.
நாவலன் கவனிக்கத் தவறிய சில விடயங்கள்:
நீங்கள் கூறுகிறபடி கிழக்கு முஸ்லீம்கள் தனியான தேசிய இனம் இல்லாவிட்டால் கிழக்குத் தமிழரும் தனியான தேசிய இனம் ஆக மாட்டார்கள்
இன்று தனிநாட்டுக் கோஷம் அரசின் அடக்குமுறையிலிருந்து வெளியேறுவதற்காகப் பயன்படுகின்ற கோஷமா அல்லது சுயநிர்ணய உரிமையுடன் இணைந்ததா? (அடக்குமுறை நிறுத்தப்பட்டால் சுயநிர்ணய உரிமையும் மறந்து போகுமா?)
இன்று இலங்கையிலுள்ள தமிழரை விட மற்றவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றி அதிகம் யோசிப்பது ஏன?
சொல்ல வேண்டியதை , பிறர் சொல்லத் தயங்குகின்ற விஷயத்தை துணிந்து கூறியமைக்கு பாராட்டுக்கள்.குறிப்பாக ஆடை பைத்தியம் பிடித்த மன்னனின் உதாரணம் அதன் சிகரம்.