விமான நிலையத்தில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக பெருமளவிலான அமைச்சர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் என பெருந்தொகையாயோர் விமான ஓடுதளப் பகுதியில் காத்து நின்றனர்.
விமானத்திலிருந்து ஜனாதிபதி இறங்கியவுடன் கீழே விழுந்து மண்டியிட்டு பூமியை தலையால் தொட்டு வணக்கம் செய்தார்.
பின்னர் அமைச்சர்கள் அனைவரும் அவரை கட்டியனைத்து முத்தமிட்டு வரவேற்றனர்.
அதன்பின்னர் அங்கே வந்திருந்த ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கையை அசைத்து ஜனாதிபதி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை தேசிய கொடியையும் பௌத்த கொடியையும் கையிலேந்தி அதனை அசைத்த வண்ணம் மகழ்ச்சியை தெரிவித்தார்.
பின் அங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌத்தமத வழிபாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு சகல மதத்தலைவர்களும் ஆசி வழங்கினர்.
ஜனாதிபதியின் வருகையை ஒட்டி கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு மிகவும் பலப்பட்டிருந்ததுடன், பெருந்தொகையான படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜனாதிபதி கொழும்பை சென்றடையும் நேரத்தில் கொழும்பிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
டக்ளசுவும் சங்கரி ஐயாவும் இனி பெளத்தர்களாக மாற வேண்டுயது தான்!
இதில் என்ன சந்தேகம்! அவர்கள் (டக்கிளசு சங்கரி கருணா பிள்ளையான்)ஏற்கனவே> “நாங்கள் பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகளே” என உயில் எழுதிக் கொடுத்துவிட்டார்களே!