மூன்று லட்சம் தமிழ் பேசும் மக்கள் அனாதைகளாக எந்தச் சாட்சியமுமின்றி ஐம்பதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்த அரச படைகள் புடைசூழ சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற ஒரு சந்ததியையே பயங்கரவாத ஒழிப்பின் பேரால் உருவாக்கிவிட்டு இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அறுபதாண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாமலே தேர்தற்களத்தில் தமது வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டன அரசின் துணைக் கட்சிகள். அடையாளத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் தோற்றுப் போனது மட்டுமல்ல, அந்தத்த் தோல்வி பேரினவாதத்தின் வெற்றியாக, அங்கிகரிக்கப்பட்ட இனப்படுகொலையாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆசியப் பொருளாதாரத்தின் உலகு சார்ந்த புதிய மாற்றம், பிராந்திய அதிகார மையங்களின் புதிய எழுற்சி, மேற்குப் பொருளாதார ஆதிக்கத்தின் பின்னடைவு என்ற சிக்கலான பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் பேரினவாத அடக்கு முறைக்கெதிரான வீழ்ச்சி என்பது சில இலகு படுத்திய பாடங்களைக் கற்றுத்தந்திருக்கிறது.
புலிகள் தமது போராட்டத்தின் ஆரம்பப் காலப் பகுதிகளிலிருந்தே அதிகார வர்க்கங்களுடனான சமரசம் மட்டுமே தமது அரசியற் தந்திரோபாய உக்தியாகக் கையண்டிருந்தனர்.
1980 களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் கட்சி அரசியல் வாதிகளைப் பின்புலமாகக் கொண்டும் அதிகார மட்டத்தில் செல்வாக்கு நிலையிலுள்ளவர்களை ஆதாரமாகக் கொண்டும் தமது செயற்பாடுகளை வளர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஐரோப்பிய நாடுகளிலும் இதேவைகையான தமது செயற்பாட்டுத் தளத்தை விரிவு படுத்தியிருந்தனர்.
ஐரோப்பாவின் அரசியல் வாதிகள், சில தன்னார்வ அமைப்புக்களின் உறுப்பினர்கள், வியாபார நிறுவனங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டே புலிகள் அமைப்பின் சர்வதேசச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. மத்தியதரவர்க்க, படித்த நிர்வாக அமைப்பாளர்களூடாகவும் கட்சிசார் அரசியல் வாதிகளூடாகவம் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகளின் ஆதார சக்தியாக புலிகளின் பண வலிமையும் உலக மயப்படுத்தப் பட்டிருந்த அவர்களின் வியாபார அமைப்புக்களுமே அமைந்திருந்தன.
இவையெல்லாம் இராணுவத்தளபாடங்கள் மட்டுமே போராட்டத்தின் ஒரே பலமென நம்பிடிருந்த புலிகளின் தலைமைக்கு அதற்கான இராணுவப் பலத்தை அதிகரிப்பதற்காகவே பயன்பட்டன.
உள்நாட்டில் மட்டுமல்ல அன்னிய தேசங்களிலும் கூட மக்களின் பலத்தையும் மக்கள் சக்தியையும் முற்றாகவே நிராகரித்த அதிகார அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருந்த புலிகளின் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் புலிகளை மட்டுமல்ல போராட்டத்திற்கான நியாயத் தன்மையையும், உலகெங்குமுள்ள ஜனநாயக, மனிதாபிமான சக்திகள் மத்தியில் சிதறடித்து இனப்படுகொலைக் கெதிரான போராட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது.
G20 நாடுகளின் ஒன்று கூடல் லண்டனில் நிகழ்ந்த போது பிரித்தானிய அரசு அதிர்ந்து போகும் வைகையில் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சமூக உணர்வுள்ள மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நாளில் வன்னியில் இலங்கை அரசு தனது சொந்த மக்களைக் கொசுக்கள் போலச் சாகடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறத்தில் பிரித்தானியத் தமிழ் போரம் போன்ற புலி சார் அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் தலைமை தாங்கி நடாத்திய புலம் பெயர் தமிழ் மக்களை மட்டுமே உள்வாங்கிக் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பிரித்தானிய மக்கள் மத்தியிலோ, அவர்களைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் அரசியல் முற்போக்குக் கூறுகள் மத்தியிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவ்வாகிரமிப்பை எதிர்த்து “போர் எதிர்ப்பு அணி” பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டது. இவர்கள் நடாத்திய முதல் எதிர்ப்பூர்வலம் மூன்று லட்சம் பிரித்தானிய மக்களைத் தெருவில் இறக்கியிருந்தது. இவ்வணியின் தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சாரங்களும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த ரொனி பிளேயரின் அரசியல் செல்வாக்கையும், அவரின் மனிதாபிமான பிம்பத்தையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து வந்த தேர்தலில் குறித்த தோல்வியைச் சந்திக்கவும் இது பிரதான காரணமாக அமைந்திருந்தது.
பிரித்தானிய அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோக்கும் சக்திவாய்ந்த இது போன்ற அமைப்புக்களோ, அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்களோ இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இன்று வரை அணுகப்படவில்லை. ஐம்பதாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் கூட அதிகார மையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த புலி சார் அமைப்புக்களின் இந்தச் சிந்தனை முறையும் அரசியலும் தான் எதிர்ப்புப் போரை அதன் தடையங்கள் கூட இல்லாமல் நிர்மூலமாக்கியிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடத்தப்பட்ட போதெல்லாம் தெருவுக்கு வந்து போர்க்குரல் கொடுத்தவர்கள் தான் தமிழ் நாட்டுமக்கள். 1983 இல் இலங்கையில் இனப்படுகொலை ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த போது நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் நாடே செயலிழந்து போயிருந்தது. இலங்கை அரசின் திட்டமிட்ட இனப் படுகொலைகளை நன்கு அறிந்திருந்த தமிழ் நாட்டு மக்கள் புலிகளை அவ்வடக்கு முறையின் பிரதானமான எதிர்ப்புச் சக்தியாகக் கருதினார்கள்.
மக்களை ஒரு போதும் நம்பியிராத புலிகள் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை தமக்குச் சார்பாகக் கையாளும் வழி முறையாக இம் மக்கள் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள, கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற சந்தர்ப்பவாதிகள் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துத் தம்மை வளர்த்துக் கொண்டனர்.
பிரபாகரன் கொல்லப்பட்டால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு பாயும் என்றவர்களின் கரங்களில், பிரபாகரனோடு ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது கீறல் கூட ஏற்படவில்லை. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என சூடான, சுவாரஸ்யமான விவாதங்களில் இவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது தடுப்பு முகாம்களில் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம் என வர்ணிக்கப்படும் வன்னிப் படுகொலை நடந்து சாட்சியின்றிச் சுத்தம் செய்யப்பட்ட இலங்கைத் தீவின் கொல்லைப் புறத்திலில்ருந்து இந்த அரசியல் வாதிகள் நடத்தும் அரசியலென்பது அவமானகரமானது.
இன்றைக்கு வரைக்கும் இவர்களின் பணபலம் மிக்க அரசியலுக்கு அப்பால் இலங்கை அரசு சாட்சியின்றி நடத்தும் இனப்படுகொலைக்கெதிராக மக்கள் கலை இலக்கியப் பேரவை போன்ற இடதுசாரி அமைப்புக்களும் ஏனைய ஜனநாயக அமைப்புக்களும், தனி மனிதர்களும் நடாத்தும் போராட்டங்கள் தியாக உணர்வு மிக்கது மட்டுமல்ல மக்கள் மத்தியில் குறித்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளால் ஏமாற்றப் பட்டதைத் தமிழ் நாட்டு மக்கள் இனம்காண ஆரம்பித்துள்ளனர்.
புலிகள் இராணுவ பலம் மிக்க அமைப்பாக இருந்த போது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அமைப்புக்களும், தனி மனிதர்களுமே இன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
மேற்கு நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் மக்கள் சார்ந்த அமைப்புக்களைப் புறக்கணித்த புலிகளின் சிந்தனை முறையையும் செயற்பாட்டுத் தன்மையையும் இன்று கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
இராணுவ அமப்பின் பலம் மட்டுமே புலிகளின் பலம் என்ற நிலையானது, புலிகளின் அப்பலம் அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிர்ப்பரசியற் தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டார்கள். இந்நிலையில் புலிகள் குறித்த தொடர்ச்சியான விமர்சமென்பது இலங்கை அரசின் பேரினவாத அடக்கு முறையை நியாயப்படுத்துவதாக அமையும் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டாலும் புலிகளின் தோல்வியுற்ற போராட்ட முறைமை என்பதும் அதற்கான சிந்தனை வடிவங்களும் முற்றாக விமர்சனத்திற்குட்படுத்தப் படவேண்டியது அவசியமாகும்.
புலிகளின் இவ்வாறான அதிகார சமரச அரசியலின் நேரடியான தொடர்ச்சியே தேசம்கடந்த தமிழீழ அரசாகும். ஏலவே தோல்வியுற்ற இவ்வரசியல் சிந்தனை முறமையானது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.
புதிய ஒழுங்கமைபின் அதிகார மையங்களான ஐரோப்பா,அமரிக்கா,இந்தியா,சீனா போன்ற நாடுகளின் அணிகளிடையேயான சர்வதேச உறவு என்பது மக்கள் நலன் சார்ந்த, மனிதாபிமானம் சார்ந்த ஒன்றல்ல.
சரிந்து விழுகின்ற வியாபாரக் கட்டமைப்பை மறுபடி ஒழுங்கைமைக்க முடியாமல் திணறுகின்ற மேற்கிற்கும், புதிய ஆசிய வல்லரசுகளுக்கும் தமது வியாபார நலன்களே பிரதானமானவை. ஆப்கானிஸ்தானிலும்,இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இதே வியாபார நலன்களுக்காக இன்னும் மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்படும்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களைப் போலவே உலகெங்கும் படுகொலைகளையும், அவலத்தையும் எதிர்னோக்கும் மக்கள் கூட்டங்களைப் பலப்படுத்த வேண்டும். மேற்கு நாடுகளில் அழுத்தக் குழுக்களோடு இணைந்து கொண்டு அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நிராகரித்து, புதிய முற்போக்கு இயக்கங்களைப் பலப்படுத்தவேண்டும். இவர்கள் முன்னெடுக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.
தவிர, தேசம் கடந்த தமிழீழ அரசு என்ற புலிகளின் தோல்வியடைந்த போராட்ட அரசியலின் தொடர்ச்சியென்பது அபாயகரமானது. அநாவசியமான, மறுதலையான நம்பிக்கையை வளர்க்கும் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய போராட்ட சக்திகள் ஈழத் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பது மட்டுமல்ல நீண்டகால நோக்கில் எதிர்ப்பரசியலுக்கான சாத்தியப்பாட்டையே நிமூலமாக்கும் தன்மை வாய்ந்தது.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் சமூக உணர்வுள்ள மக்கள் நலன் சார்ந்த அரசியற் சக்திகளுடன் புலிகளின் அரசியலுக்கப்பால் ஒருங்கிணைந்து செயற்படுதல் என்பது மட்டுமே தெற்காசியாவில் எதிர்வு கூறப்படும் எதிர்காலப் படுகொலைகளை எதிர்கொள்வதற்கான ஆரம்ப வழிமுறையாக அமையமுடியும்.
தொடர்புடைய முன்னைய பதிவுகள் :
1.எதிர்ப்பரசியலின் எதிர்காலம்
2.இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம்
3.புலிகளின் சரணடைவு அரசியலும் புத்துயிர் பெறும் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதமும்
4. பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்
புலிகளின் மீதான தற்போதய விமர்சனம் எதிரிகளுக்கே சாதகமாக அமையும்.
நாடுக்கடந்த தமிழீழம் என்பது புலிகளின் குரலாக தெரியவில்லை. தற்போது ஏற்ப்பட்டுள்ள வெற்றிடத்தை சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்தி கொள்ள வைக்கும் முழக்கமாக இருக்கலாம். அல்லது எதிரியிடம் விலைபோன துரோகிகளின் முயற்சியாக இருக்கலாம்.
புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தபின் விமர்சனம் வைக்கலாமே; தாங்கள் குறிப்பிடும் மக்கள் கலை இலக்கிய பேரவை போன்றவை ஈழத்துக்கு சொல்லும் தீர்வு என்ன?
களத்தில் உள்ளவர்களை விமர்சனம் செய்தே நாம் காலத்தை கடத்தி விட்டோம். உங்களை பொன்றோரின் அரசியல் சித்து விலையாட்டை தமிழ் நாட்டோடு நிறுத்தி கொள்ளலாம்.
தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நிராகரித்து, புதிய முற்போக்கு இயக்கங்களைப் பலப்படுத்தவேண்டும் எனும் கருத்து வரவேற்கத்தக்கது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது கானல் நீர்தான். இனிமேலும், அரசியல்வாதிகளை நம்பாது எஞ்சி இருக்கும் நமது ஈழத்து உறவுகளை காக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே சந்தர்ப்பவாதிகள். என்னைப் போன்ற தமிழகத் தமிழர்கள் எமது தொப்புள்கொடி உறவுகளின் பெரும் துயரத்தைக் கண்டு ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றோம். தமிழகத் தமிழர்கள் தங்கள் உறவுகளை காக்கத்
தவறிய கையாலாகத மனிதர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பிரபாகரன் இறந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று கூறிய அரசியல்வாதிகள் தற்போது வாய்மூடி மவுனம் காப்பதேன்? இன்னும் கூட ஒரு நப்பாசை இருக்கிறது, எமது தமிழினத் தலைவன் பிரபாகரன் தப்பிப் பிழைத்து மீண்டும் வந்து விட மாட்டாரா என்று!
புலிகள் இராணுவ பலம் மிக்க அமைப்பாக இருந்த போது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அமைப்புக்களும் தனி மனிதர்களுமே இன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். அவை தொடர்பான பட்டியலையும்
அந்தப் போராட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுத் தங்கள் கூற்றை அத்தாட்சிப்படுத்துவீர்களா?
ந.முரளிதரன்
WHAT DOES STOPS YOU FROM CONTRIBUTING TO TAMILS. WHAT HAPPENS NOW IS EVERYONE ADVICES OTHERS WITHOUT DOING ANYING TO THE COMMUNITY. BEFORE STOPPING OTHERS OR NEGATIVE CRITICISMS (POSITIVE CONSTRUCTIVE CRISTISMS ALWAYS GOOD) – FIRST SHOW THE PEOPLE YOUR THOUGHTS, YOUR WORK ETC.
ENOUGH IS ENOUGH. LET’S UNITE AND WORK FOR A COMMON GOAL
இந்தியாவாகட்டும், பிற நாடுகளாகட்டும் – அதிகாரத்துடன் தொடர்பு கொண்டுள்ள அமைப்புகளோடு அல்லாமல், மக்கள் சார் அமைப்புகளுடனும், நபர்களுடனும் உறவு வைக்கும்போது மட்டுமே ஈழ மக்களின் உரிமைக்கு வழி பிறக்கும். சபாவின் இந்தக் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
அடுத்துவரக்கூடிய 10 நாட்கள் மிகவும் முக்கியமானவை. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னிப்பெருநில மக்களின் மீழ் குடியேற்றத்திற்கான முதல் அடி இந்த நாட்களில்தான் நிகழப்போகின்றன. இந்த மீழ்குடியேற்றத்தில் இந்திய அரசும், இலங்கை அரசின் “மீழ்க் குடியேற்றத்திற்கான செயற்குழுவும்” இணைந்து செயலாற்றவுள்ளன. இலங்கை அரசின் மீழ்க்குடியேற்ற செயற்குழுவில் உள்ள 19 உறுப்பினர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. ராஜபக்சே சகோதரர்களும், 7 உயர் ராணுவ / காவல்துறை அதிகாரிகளும், 10 நிர்வாக அதிகாரிகளுமே அதன் உறுப்பினர்களாக உள்ளனர். குறைந்த பட்சமாக, இலங்கையின் நீதித் துறையில் இருந்துகூட இந்தக் குழுவில் உறுப்பினர்கள் இல்லை. இதனால்தான் என்னவோ, இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்: ” இந்த மக்களால் இலங்கை நீதிமன்றங்களில் நீதி கேட்க முடியாத சூழலே உள்ளது. அவர்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறோம்.”
இலங்கை அரசு முழுமையானதொரு சர்வாதிகார அரசாக, ஒரு குழுவிற்கான அரசாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் இருப்பு, வளர்ச்சி ஆகியவை – இந்தியா, ஷாங்ஹாய் கூட்டமைப்பு நாடுகள், சில மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளால் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டஇராணுவமயமாக்கப்பட்ட, ஒரு குழு சார்ந்த சர்வாதிகார இலங்கை அரசின் முக்கிய அங்கமே “வடக்கின் வசந்தம்” என்ற வஞ்சகத் திட்டத்தினை வன்னிப் பெருநிலத்தில் நிகழ்த்தப் போகின்ற “பசில் ராஜபக்சே”வின் தலைமையில் அமைந்த “வடக்கின் மீழுருவாக்கத்திற்கான செயற்குழுவாகும்”.
இந்த செயற்குழுவுடன் இணைந்து, இந்திய அரசின் சார்பாக, இந்தியாவின் வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனால் “பெண்களை முன்னிலைப் படுத்தும் வேளாண்மைத் திட்டத்தின்” அடிப்படையிலேயே முகாம்களில் உள்ள வன்னிப் பெருநில மக்களின் மீழ்குடியேற்றம் நிகழ்விருக்கிறது. அதனை உறுதிப் படுத்தவே ஜூன் 9 இல் எம்.எஸ்.சுவாமிநாதன் மஹிந்த ராஜபக்சேவை சந்தித்ததும், ஜூன் 24 ஆம் தேதியன்று பசில்/கோத்தபயா ராஜபக்சே, லலித் வீரதுங்கா ஆகியோர் புதுதில்லியில் இந்திய வெளி உறவு அமைச்சரை சந்தித்ததற்கான காரணங்கள்.
ஜூலை முதல்வாரத்திலோ, அல்லது இரண்டாம் வாரத்திலோ எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் வவுனியாவுக்கு – வன்னிப் பெருநில மக்களின் மீழ்குடியிருப்புக்கான வேளாண் பணிகளைத் தொடங்கச் செல்லவுள்ளார்கள்.
இந்த நகர்வைத் தடுக்காவிட்டால், வன்னிப் பெருநிலத்தின் “வாழ்வியல் கட்டமைப்புகள்” அனைத்துமே வன்னி மக்களுக்கு அப்பாற்பட்டவர்களின் செயலாலும், திட்டங்களாலும் தீர்மாணிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தீர்மாணிக்கப்பட்டுவிட்ட கட்டமைப்புகளை எதிர்காலத்தில் மாற்றியமைப்பது என்பது இயலாத ஒன்றாக மாறிவிடவே வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்திய-இலங்கை அரசுகளின் இந்தக் கூட்டுச் சதியை முறியடிப்பதே இன்றைய அவசரத் தேவையாகும்.
இப்படிப்பட்ட சூழலை விளக்கி – உலகத் தமிழ் ஆய்வாளர்கள் எவரும் எழுதாத சூழலில் – தமிழுணர்வாளர் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான “ஜூனியர் விகடனில்” கட்டுரை எழுதியுள்ளார். அதனை உடனடியாக மீழ் பிரசுரம் செய்த “புதிணம்” வலைத்தளம், ஒருநாள் கழித்து அதனை அகற்றி விட்டிருக்கிறது. காரணம் தெரியவில்லை.
உடனடியாக இன்றே செய்ய வேண்டிய பிரச்சினைகளை விட்டுவிட்டு, இந்தியாவின் “நியூஸ் டுடே” பத்திரிகைக்குப் பொதுவான, இந்திய அரசினை நட்பு சக்தியாகக் கருதும் நேர்காணலை “கே.பி.” கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதே போக்கு தொடருமானால், “நாடுகடந்த ஈழ அரசு” உருவாகி அது இயங்கத் தொடங்கும் முன்பே வன்னிப் பெருநில மக்களின் அனைத்து செல்வங்களும், வாழ்வாதாரங்களும் பிறருக்கு சொந்தமாகியிருக்கும்.
எனவேதான் நண்பர்களே… “அரசியல் இடையீடு” என்று பொத்தாம் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்காமல் – அதி முக்கியமான, அவசரமான பிரச்சினைகளை விவாதிப்பதும், அவற்றை அரசியல் ரிதியாகக் கைகொள்ள வேண்டிய நேரம் இது.
இந்த அடிப்படையிலேயே, சபாவின் பொதுவான அரசியல் முன்வைப்புகளை நான் வரவேற்கிறேன்.
தமிழா முதலில் ஒன்றுபடு , குரை கோருவதே வாழ்வாகக் கொண்டுநம்மில் பலர் அலைவதுநல்லதன்று . விமர்சனம் மட்டும் எழுதும் சிலர் எப்போதவது சற்றே உழைப்பு பற்றியும் யோசிக்க வேண்டும் , எவன் என்ன சொன்னாலும் இன்றோநாளையோ தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் அப்போ வந்து வாழ்த்திவிட்டுப் போங்கள் அதுவரை உதவி செய்யாவிடினும் உபத்தரவம் செய்யாமல் இருங்கள் , தோழமையுடன் ஒரு தமிழகத் தமிழன்
இலஙகைத் தமிழர்களின் மொழி,பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கான அரசியல் ஏற்பாடு என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட மாநில அரசாக மட்டுமே இருக்க முடியும் என ஐம்பதுகளிலிருந்து இன்று வரை ஆணித்தரமாக வலியுறுத்தி வருவது அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியும் இன்றைய மார்க்சிஸ்டு கட்சியும் மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! அது இக்கட்டுரையில் இடம்பெறாதது த்ற்செயலானதா! அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா?
//தமிழா முதலில் ஒன்றுபடு , குரை கோருவதே வாழ்வாகக் கொண்டுநம்மில் பலர் அலைவதுநல்லதன்று . விமர்சனம் மட்டும் எழுதும் சிலர் எப்போதவது சற்றே உழைப்பு பற்றியும் யோசிக்க வேண்டும் , எவன் என்ன சொன்னாலும் இன்றோநாளையோ தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் அப்போ வந்து வாழ்த்திவிட்டுப் போங்கள் அதுவரை உதவி செய்யாவிடினும் உபத்தரவம் செய்யாமல் இருங்கள் , தோழமையுடன் ஒரு தமிழகத் தமிழன்//
வன்னியில் மக்களைப் பலிகொடுத்து ஆடுமாடுகள் போல அடைத்துவைத்து நீங்கள் மலர்த்திய தமிழீழம் போதும்டா சாமி! இனியாவது நாவலன் சொல்வது போல வேறு வழிகளைப் பற்றி சிந்திக்கவாவது விடுங்கல்
Dear Friends,
1.We all shd unite to win freedom,justice,equality,humanrights,harmony in NESL with India’s help!
2.Exile TE Govt shall coordinate,unite world tamils,democratically and organise IC+UN diplomatically,help IDPs humanly.
3.If GOSL bring justice,equality,HR,freedom through NESL Federal State with UN-help within 1 year,then we shd cooperate.
4.Otherwise we shd get true help from India/USA or China/N.Korea/Russia by diplomatic team work of Tamil inteligensia.
5.It is possible,If we truely unite,work hard,use geo-political quiz to our goal,we can achieve it!BELIEVE IN OUR TEAMWORK!
please what is your solution for the IDP tamils?
எதிர்ப்பியக்கங்களின் எதிர்காலம் தொடர்பாக…
கட்டுரை இந்திய – சீனா போன்ற “வல்லரசுக் கனவு” களுடன் வாழும் ஆசிய வல்லரசு நாடுகளின் நிலை குறித்த விளக்கத்தினைத் தருகிறது. ஆயினும் ஒரு தொடர்பற்ற தன்மை அல்லது விடயங்கள் பல புரிபட முடியாமல் உள்ளது.
ஆசிய வல்லரசு நாடுகள், இலங்கைப் பிரச்சினையைக் கையாண்டதில் கவனத்திற்குரிய விடயங்கள் பலவுள.
1. இலங்கையில் யுத்தம், அகதிகள் பராமரிப்பு, சனநாயக விரோதச் செயல்கள் குறித்த மேலைத்தேச நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக புதிய நாடுகள் அணிசேர்ந்து கொண்டமை
2. மேலைத்தேச நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அமைப்பு மற்றும் விதிகளினூடாகவே தமது நிலைப்பாட்டினை வெற்றியடையச் செய்திருத்தல்
3. மேலைத்தேச சனநாயகவாதிகள் எதிர்த்த சனநாயக விரோதச் செயல்களை தங்கள் இருப்புக்கு அவசிமயான ஒன்றாக அடையாளம் காட்டியமை.
இந்த நிலை, இந்நாடுகள் சர்வதேச ரீதியாக தமக்கான ஒரு அணியை – அமெரிக்கா எதிர்ப்பு நாடுகள் – உருவாக்கிக் கொண்டு புதிய போக்கில் வளர்ந்து செல்கின்றதனை அவதானிக்க முடிகிறது. “சர்வதேச ஒழுங்கில்” எதிர்காலத்தில் இந்நிலை ஒரு தாக்கம் செலுத்தும் விடயமாக அமையலாம்.
புதிய ஆசிய வல்லரசுகளால், சனநாயகம் தொடர்பான சிறு கோரிக்கைகளும் தங்கள் இருப்புக்கெதிரானாக நோக்கப்படுகிறது: மோசமான ஒடுக்குமுறைகளினூடாக அடக்கப்படுகினறன. அதற்கப்பால் எல்லாக் கேடுகெட்ட வழிமுறைகளையும் கையாண்டு தங்கள் இருப்பை உறுதி செய்யவும் முனைகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகள் பற்றிய செய்திகள் “உணர்திறன்” கொண்டவையாக உணரப்படுகின்றன. (சிறிலங்கா – இந்திய அரசுக் காவலர்கள் பலர் இதனைக்கூறியிருந்தனர்.)
உண்மையில் மக்கள் பற்றிய செய்திகள் இந்நாடுகளின் வல்லரசுக் கனவை தகர்க்கச் செய்வனவாக நோக்கப்படுகின்றன. அவை மறைக்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. அல்லது வெளியடப்படாமல் இருக்க எல்லா வழிகளையும் கையாள்கிறது. இவை ஊடகம் தொடர்பான அடக்கு முறைகளுக்கு வித்திடுகிறது.
இந்தியாவில் பாராளுமன்ற சனநாயகம் ஒரு போலி முகத்திரையாகவே இருந்து வருகிறது.
ராஜீவ் காலத்து இலங்கை விவகாரமாகட்டும், இன்றைய இலங்கை நிலைகைளாகட்டும் முக்கியமாக மக்கள் படுகொலைகள் பாராளுமன்ற சனநாயகத்தால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வில்லை !! ஒரு சில நபர்களால் தீர்மானிக்கப்படுகிற விடயங்களாக அவை அமைந்திருக்கின்றன. மிகப் பெரும் அரசு இயந்திரம் ஒரு சில நபர்களிடம் !!!
சீனா கட்சி அரசியலில் இருந்து விலகி தனிநபர் அதிகார அரசியலுக்குள் செல்கிறது என்பதற்கான தகவல்களைப் பெறமுடியாதுள்ளது. ஆனால் அது உலகில் தன்னை ஒரு பெரும் வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்ள அரும்பாடுபட்டு வருகிறது. அதற்காக தன் இருப்பிற்காக எல்லா மக்கள் விரேதச் செய்லகளையும் செய்ய அது தயங்கப் போவதில்லை.
புதிய ஆசிய வல்லரசுகள் வர்த்தக நோக்கில் எல்லாவற்றையும் செய்கின்றன என்பதற்கு இன்றைய இலங்கை தக்க எடுத்துக்காட்டாகவும் அமைகிறது. பத்திரிகைச் செய்திகளும் விளம்பரங்களும் நிலைமைகளை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இந்நிலையில் நாம் மற்றொரு விடயத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புலிகள் தங்களை மீள அமைத்துக் கொள்ள முற்படுவார்களாயின் மீண்டும் கொரில்லா பாணி முறைக்கு செல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. எனவே நிலத்தொடர்பற்ற ஒரு அமைப்பாக – ஒரு பயங்கராவாத அமைப்பாக செயற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன.
சர்வதேச ஒழுங்கில் – ஆசியாவில் புதிய சொற்களையும் வியாக்கியானங்களையும் காண்கிறோம். நிலைமைகள் தீவிரமாக மாற்றமடைந்து செல்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது.
வியார்
PLease stop your non sence, LTTE is the primary representation for eelam Tamils, was demonstrated so many times all over the world. Tamils want separation from Srilankan Sinhala nation, doesn’t matter how, Tamils will support whoever take iniatives. If you don’t want to support please keep quit!!!!.
இக்கட்டுரை ஒரு திட்டமிட்ட, புலிகளுக்கெதிரான, பொய்ப் பிரச்சாரமாகவே தெரிகிறது. இது ம.க.இ.ம. வின் தொடர்ந்த நிலைப்பாடுதான். அதற்கும் காரணமுண்டு.
ஒரு செயல்முறை தோற்றால் அது அந்த செயல்முறையின் குறைபாடுகள் மட்டும் காரணமா அல்லது எதிர்பாராத சூழல் மாற்றம் காரணமா என்று நேர்மையாக ஆய்வு செய்ய வேண்டும்.
விமாணம் பறப்பதும், பறந்து கொண்டிருப்பதும் பொதுவாக நாம் அறிந்த அறிவியலின் படித்தான். ஆனால், ஏதேச்சையாக ஏற்படும் வெற்றிடங்களாலோ அல்லது பனிமூட்டங்களாலோ சில விபத்துக்களும் நேர்கின்றன. அதனால், விமான அறிவியலையே நாம் குறைகூறுவதில்லை.
சீனா, தியானமன் முற்றத்தில் 3000 சீன மாணவர்களை, டாங்க்குகள் ஏற்றிக் கொன்றது, சில வருடங்களுக்கு முன்பு. சீன தேசமே ஒரு மனிதாபிமானமற்ற தேசம். ஈராக்கிற்காக ஆங்கில மக்கள் செயல்பட்டது, தங்களது படைவீரர்கள் கொல்லப்படுவதும் மற்றும் எண்ணெய், அரபு நாடுகளின் நட்பை இழக்கமுடியாத நிலையும், இங்கிலாந்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தைத் தடுக்கவுமே தான் காரணம்.
சீக்கியர்கள் தெருவுக்கு வருவதுபோல, தமிழன் வரவில்லை. கதை இப்படி இருக்க, ஆங்கில மக்கள் வந்துவிடுவார்களா?
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகு போலவே அழிவுப்பாதையில் செல்கின்றன. இந்த உலகில் இன்னும் நடக்கப்போகும் பல அட்டூழியங்களைக் காண நாம் தயாராக வேண்டும்.
இந்தக் கட்டுரையாளர் உலகளாவிய தமிழீழ தேசத்தை எதிர்க்கிறார். அதற்கான காரணங்களைச் சொல்லாமல் எதிர்ப்பது, இவர்களது வரட்டு நிலைகளைக் காட்டுகிறது. கட்டுரையின் தலைப்பைப் பற்றியே இரண்டு வரிகளில் மட்டும் சொல்லும் ஞானசூன்யமாகவே தென்படுகிறார் கட்டுரையாளர்.
இந்தியாவில் கம்யூனிசம் தோற்றது, மார்க்ஸியத்தில் கோளாறா அல்லது வேறு காரணங்களாலா?
புலிகள் தோற்றது, இந்தியா என்ற அயோக்கிய தேசத்தின், பார்ப்பனீய கொள்கையாலும், உலக அயோக்கிய அனுகுமுறையாலும் தானே ஒழிய, இவர்களின் செயல்பாடுகளால் (மட்டும்) அல்ல.
புலிகள் முப்படைகளயும் வைத்திருந்தது, பார்ப்பனீயத்திற்கு பொறுக்க முடியவில்லை. ஈழம் அமைவதைப் பார்ப்பனீயம் ஒட்டுமொத்தமாகவே ஏற்கவில்லை, எப்போதும் ஏற்கப்போவதுமில்லை. இதை மீறித்தான் ஈழம் அமையவேண்டும்.
புலிகளைத் தவிர்த்து, மக்கள் திறள் மட்டுமே கூட போராடினாலும், ஈழம் அமைவதைப் பார்ப்பனீயம் விரும்பவே விரும்பாது.
தனித் தமிழ்நாடு உருவானால் மட்டுமே, பார்ப்னீயம் தவிர்த்த தமிழ் அரசு உருவானால் மட்டுமே, ஈழம் அமைய முடியும்.
ஆக, அவர்கள் ஈழத்திற்கு போராடட்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் விடுதலைக்கான, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடும், தமிழீழமும் விடுதலை அடைய அது ஒன்றே ஒரே வழி.
தேசம் கடந்த தமிழீழ அரசு – This idea really going bad feture for our young tamil genaration in worl tamil people , before we are trerist only in SRI LANKA after this we will going identify fro all over the world , we could not make tamil ellam with Prabakaran. but he dead no more prabakaran any more for freedom fight ………
please stop this nonsence idea.
Oh my god I can’t image again we are going trerist for all over the world …………
Till the assaination of Mr.Rajiv Gandhi Indian Tamils had soft corner for Srilankan Tamils. We gave you shelter,arms,money,training camps etc. But you people belived Karunanidhi,Vaiko,Veeramani,Nedumaran etc. They let you down. You were mute spectators while moderate Srilankan Tamils like Sri Appa pillai Amirdhalingam. LTTE killed more Tamils than Srilankan army. You never listened to indian mediation. Now you paid for your mistakes. Still you have time. Onle India could bring you peace. Only India could take your people to prosperity. Will you listen?
For Sure India will suffer because of wrong handling of SriLankan Issue,also like Russia India will go into spilt soon.Pakistan the way started help SriLanka now suffer due to Islamic funded Terror,Similar China will suffer finally India will suffer.Tamils need one homland for their own.Not a sinhalese genueine politician wanted to solve SriLanka Tamil issue instead they all wanted to Rule with the buring issue along with Rajapakse is not willing to solve at all instead he wanted to rule along with his family prosperrity.Sihalese soon realise this and that will be final for Rajapakse.
பொருளாதார சுனாமி, எதிர்ப்பு அரசியல் என்ற உங்கள் முன்னைய கட்டுரைகளையும் படித்தேன். நீங்கள் கூற முனைவது 1. பொருளாதாரம் இப்போ ஐரோப்பாவில் இல்லை 2. ஆசியாவுக்கு இடம்மாறி விட்டது. 3. அதனால் எதிர்ப்பு அரசியல் வேறு வடிவங்களைக் எடுத்து விட்டது. 4. புலிக்கள் அதற்கு இசைவாக்கம் அடையாமையினால் அழிந்து போனார்கள். 5. ஆகவே புது வடிவங்களில் போராட வேண்டும்.
நீங்கள் முன் வைக்கும் கருத்துக்களோடு உடன்படுகிறேன். இறுதியாக எவ்வாறான போராட்ட வடிவங்களை முன் மொழிகிறீர்கள்?
In the fall of LTTE in Srilanka means India is lost their power in southasia.Because Srilanka is becoming the small chianese colony and this is very dangerous to the Indian security.It means now India is without a proper leadership to tackle the global security.M.M.Singh is only to do what Sonia says.
Chiana used the clear advantage to combat the India.
யார் இந்தச் சபா நாவலன்? எங்கிருந்து முளைத்தது இந்தக் காளான்? புலிகளின் எதிர்காலம் பற்றி விமரிசனம் இவர் யார்? நல்லாகச் சிந்தியுங்கள். அப்போது பதில் புரியும். வீணர்களின் கதையை நம்பி ஏமாறாதீர்கள் என்பது எனது பணிவான வேண்டுகோளாகும்.
தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுவோம். நமது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு போராடுவோம்.
sir, your article is biased one. Becasue, through there may be some mistakes committed by tigers, tigers took forward the tamil national struggle well in ahead. Another thing, your talks having resemblence with RajaBakse like tigers are differnt from tamil people, that is wrong conclusion. Tigers are tamil people and they are for tamil people. Tigers will will soon in all pace
உடலைவிட்டு என்
உயிர்போகுமன் என்
உறவுகளுக்காக
கண்ணீருடன்
இரத்தத்தையும்
சிந்த தயாராகத்தான்
இருக்கின்றோம்
உணர்வற்று நடைபிணமாய்
உலாவும் மனிதர்களுக்கு
மத்தியில்
உங்களுக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கின்றோம்
எங்களை வழி நடத்த உங்கள் கரங்களை எங்களுக்கு காட்டுங்கள்
என்றும்
உணர்வுடன்
கோவையிலிருந்து மு. சரளாதேவி
நன்முறைதோற்கின் வன்முறை! இது வகுக்கப்படா விதி குரல்கொடுத்தோரை ஒதுக்கி குரலை போற்றுவது எங்ஙனம் ? தோற்றோம் தோற்றோம் என்றுகூறி மக்களை துவலச்செயாதீர் !அவலங்கள் இன்றி ஆக்கங்கள் ஏது?
இறந்தவன் பிறப்பது இயலாது இருப்பினும் இருந்தவன் இறப்பதில்லை மக்கள்மனதில் இருந்தவன் என்றும் இறப்பதில்லை