ஆந்திராவில் தொடர்ந்து கலவரம் நீடித்தால், ஆந்திர மாநில ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தனித் தெலங்கானா கோரி தெலங்கானா பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது. தனித் தெலங்கானாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர மாநிலப் பகுதிகளில் போராட்டம் வெடிக்கிறது. இந்த நிலையில், கலவரத்தை அடக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரியை நீக்கிவிட்டு, வேறு புதிய ஆளுநரை நியமிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கலவரம் நீடிக்குமானால் ஆந்திர மாநில அரசைக் கலைத்துவிடவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
The On going crisis in Telengana was a sad state of affair.Before announcing the Telengana formation the Centre should have thought of the after effects.Having announced centre should keep up the Image and Ethics.The Ultimate sufferer is the People of India.Disturbed by Travel and other inconveniences.
K.Ragavan.Chennai.47.