உலகின் பல்தேசிய வியாபார நிறுவனங்களதும், பணத் திருடர்களதும் சொர்க்க புரியாக மாறியிருக்கும் இலங்கையின் தலை நகரைத் தெற்காசிய நிதி மூலதனத்தின் தலை நகரமாக மாற்றும் திட்டம் நரேந்திர மோடியின் வருகையின் பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சவிற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இலங்கையில் பயங்கரவாதத்தின் பேரால் மக்கள் எதிர்ப்பின்றி இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மேலும் பலப்படுத்தப்படுகின்றன. இதனோடு கூடவே இனச்சுத்திகரிப்பு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சட்டவிரோத கொள்ளைப் பணத்திற்காக இலங்கை அகலத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் நிதி மூலதனத்தின் தலை நகரமாக உருவாகி வந்த மும்பை இலங்கையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதை பல பொருளியலாளர்கள் சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளனர். இலங்கையை நோக்கி நகரும் பல்தேசிய வியாபாரிகள், கொள்ளையர்களுக்கு ஏற்ற நுகர்வுக் கட்டமைப்புக்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றன ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்தேசியக் கொள்ளையர்களுக்கான களியாட்ட விடுதிகள், கசீனோக்கள், பாலியல் தொழிற்சாலைகள், மாளிகைகள், தங்குமடங்கள் போன்றன கட்டமைக்கப்படுகின்றன. இவற்றைப் பாதுகாக்கும் இராணுவமும் போலிஸ் படையும் வடக்கையும் கிழக்கையும் தளமாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன.
சிங்கப்பூரிலும் மும்பாயிலும் கிடைக்காத கொலைப்படைகளின் பாதுகாப்பு இலங்கையில் கிடைக்கிறது. அமைதிப்போராட்டம் நடத்தினாலே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை இராணுவம் வெலிவேரியாவில் நிரூபித்துள்ளது.
இவற்றை இனி நரேந்திர மோடியும் மகிந்த ராஜபக்சவும் இணைந்தே நிறைவேற்றுவார்கள். இந்தியாவில் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்து செயற்கையாக உருவாக்கிய நரேந்திர மோடி என்ற கொலைகாரனும், மகிந்த ராஜபக்ச என்ற கிரிமினலும் இலங்கையை ஒட்டச் சுரண்டுவார்கள்.
இங்கு தமிழ்த் தலிபான்களும் ஏகாதிபத்திய நாடுகளும் ராஜபக்சவிற்கு பக்கபலமாக அமைவது வெளிப்படையானது. நரேந்திர மோடி, தமிழ்த் தலிபான்கள், ராஜபக்ச ஆகியோரின் கூட்டு தமிழ்த் தேசிய இனத்தை இலங்கையின் எல்லைக்குள் துடைத்தெறியும்.
இச்செயற்பாட்டிற்கு இனப்படுகொலை முடிவுற்ற ஐந்து வருடங்களிலும் தமிழர் பிரச்சனை மிகவும் தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்னும் பயன்படும்.
ராஜபக்ச அரசின் திட்டங்களை வகுப்பதற்காக இலங்கையை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்குச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து நரேந்திர மோடி செல்கிறார். டேவிட் கமரன் வடகிற்குச் சென்று தனது நாடகத்தை அரங்கேற்றிவிட்டு கொழும்பில் தனியார் பலகலைக் கழகத்தையும், கனிம, தனியார் மருத்துவ முதலீடுகளையும் ஒப்பந்தம் செய்தது போன்ற மற்றொரு மெகா நாடகம் அரங்கேறும். அதற்கான தயாரிப்புக்களில் இந்திய அரசு ஈடுபட்டுவருகிறது.
சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பின்னர் பொதுவுடமை சித்தாந்தவாதிகள் காணாமல் போய்விட்டார்கள் என்பதை இந்தக் கட்டுரை பொய்ப்பிக்கிறது. பொதுவுடமைப் பொருளாதாரம் மேசையில் சாப்பாட்டை வைக்காது. வறுமையைத்தான் பங்கிடும். ஒரு நாடு முன்னேற அந்நிய முதலீடுகள் அவசியம். இலங்கையில் ஜே.ஆர். கொண்டு வந்த திறந்த பொருளாதாரத்தின் பின்தான் இலங்கை வளர்ச்சிப் பாதையில் கலடி எடுத்து வைத்தது. அதற்கு முன் பாணுக்கு மக்கள் கியூவில் நின்றார்கள். அதே போல் இந்தியாவில் பிரதமர் நரசிம்மராவ் இந்தியப் பொருளாதாரத்தை திறந்துவிட்ட பின்னர்தான் இந்தியா அசுர வளர்ச்சியைக் கண்டது. மோடியின் ஆட்சியில் இது மேலும் மேம்படையும். அமெரிக்காவில் உள்ளது போல கசினோக்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் அது அமெரிக்க பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. சொல்லப் போனால் அமெரிக்காவின் பொருளாதரத்துக்கு அவையும் முண்டு கொடுக்கின்றன.
நல்ல கட்டுரை. அய்யா இலக்குவனாரின் தமிழ்ப் பற்றை யாரும் விஞ்ச முடியாது. கலைஞர் கருணாநிதிதான் கலைஞர் குடும்பத்தின் கடைசி பகுத்தறிவுவாதி. கடைசித் தமிழ்மொழிப் பற்றாளர். பெயர் வைப்பதில் கலைஞரின் சொல்லை அவரது குடும்பம் கேட்பதாக இல்லை போலும். அதற்கு அவரது அகவை ஒரு காரணம். மகள் கனிமொழியே நீரா ராடியாவோடு பேசும் போது அப்பாவுக்கு காது கேட்காது அவர் முன்போல் இல்லை என்ற பொருள்படப் பேசியிருக்கிறார். கலைஞருக்கு தமிழ்மொழிப் பற்றுப் போதியளவு இல்லை என்று அவரைத் திட்டித் தீர்ப்பவர்கள் ஜெயலலிதாவை மட்டும் ஏன் விட்டு வைக்கிறார்கள்? அண்மையில் 7 புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்தார். அதில் ஒன்று கூடத் தமிழ்ப் பெயர் இல்லை. காரணம் அவருக்கு தமிழ்ப் பற்றுச் சற்றும் இல்லை. ஜெயலலிதா எங்கேயாவது தமிழ்மொழியின் அருமை பெருமை பற்றிப் பேசியிருக்கிறாரா? அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஜெயலலிதா இழுத்து மூடிவிட்டாரே? அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் அவரது படத்தை கொடியிலும் வைத்திருக்கும் ஜெயலலிதா அண்ணா நினைவு நூலகத்தை கருணாநிதி கட்டினார் என்பதற்காக மூடியது பற்றி ஏன் தமிழக தேசியவாதிகள், தமிழக உணர்வாகளர்கள் மவுனம் – கள்ள மவுனம் – சாதிக்கிறார்கள்?
திமுக இன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் குடும்ப அரசியல்தான். ஸ்டாலினை திட்டமிட்டு தலைமைப் பதவிக்கு வளர்த்து எடுத்ததை மக்கள் விரும்பவில்லை. மறுபுறம் எனக்கு தமிழ்மக்களாகிய நீங்கள்தான் எனது குடும்பம் என ஜெயலலிதா சொல்வது மக்களிடம் எடுபடுகிறது.
வைகோவின் தோல்விக்கு அடிமட்ட மக்களிடம் தேசிய உணர்வு இல்லாததுதான் காரணம். முக்கால்வாசிப் பேர் பணம், மது, பிரியாணிக்கு வாக்குப் போட்டுவிட்டார்கள். அதிமுக இன் பணபலத்தோடு வைகோ போட்டி போட முடியாது. தோதாதற்கு தமிழ்த் தேசியம் பேசுவர்கள் அவர் தெலுங்கர் என்று சொல்லி தேர்தலின் போது அவரை எதிர்த்தார்கள். அவர் தோல்வி அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியுமா?
இறுதியாக முள்ளிவாய்க்காலில் மரணித்த எமது மக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்த வேண்டாம். வன்னியில் வாழ்ந்த மக்கள் தொகையில் 146,000 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இவர்களில் 40,000 – 70,000 மக்கள் போரில் இறந்துவிட்டார்கள் என்பதே பலரது எண்ணமாகும். அய்.நா. வல்லுநர் குழு இறந்தவர்களின் எண்ணிக்கையை 40,000 எனச் சொல்கிறது.
How do you relate this article with your comment?