மேற்கில் ஏற்பட்டுள்ள அமைப்பியல் பொருளாதார நெருக்கடி அந்நாடுகளின் இருப்பைக் கேள்விகுரியதாக்கியுள்ளன. இங்கு மூலைக்கு மூலை பெட்டிக்கடைகள் போல உருவாகியிருக்கும் பல்கலைக் கழகங்கள் தமது கல்வி வியாபாரத்திற்கு தெற்காசியாவின் ஆங்கிலம் பேசும் மேற்கு மோகம் கொண்ட மாணவர்களில் தங்கியிருக்கின்றது.
இவ்வாறு அறியப்படாத கல்விக் கூடங்கள் மாணவர்களைத் தேடிக்கொள்ளும் புதிய உக்திகள் பலவற்றைக் கையாள்கின்றன. இந்த வகையில் நடிகர் விஜயகாந்திற்கு அமரிக்கக் கல்விக்கூடம் ஒன்று கலாநிதிப் பட்டம் ஒன்றை வழங்கவுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிறப்பு டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்க அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐஐசிஎம்) என்ற பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இதன் நிர்வாகிகள் நவ.22 வெளியிட்டனர்.
அவர் செய்த “சமூக சேவைக்காக” இப்பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைகழகம் குறிப்பிடுகிறது.
மகிந்தர் கேள்விப்பட்டால் கோபித்துக் கொ(ல்)ளப் போகிறார்!!!ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியனாமே?இவர் நாற்பதாயிரம் பேரையல்லவா கொன்றார்?????அவருக்குக் கொடுக்காமல்,விசயகாந்துக்குக் கொடுப்பதா??????????????
என்ன இந்த மாற்றமோ என் மனது தவிக்குதே?