இலங்கையில் நிலவும் பால் மா பற்றாக்குறை என்ற பிரச்சனையை மையமாகக் கொண்டு நெடுந்தீவு முகிலனின் இயக்கத்தில் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வியாபார மயப்படுத்தப்பட்ட
தென்னிந்தியாவின் வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்களோடு சமூகத்தைச் சீர்குலைக்கும் சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் பாற்காரன் என்ற இந்தக் குறும்படம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. மிக நுணுக்கமான கலை நுட்பங்கள் இக் குறும்படத்தில் கையாளப்பட்டுள்ளது. கோவிலில் பாலூற்றி விரையமாக்கும் ஐயருடன் ஆரம்பிக்கும் குறும்படம் பசிக்குப் பால் கேட்கும் குழந்தையுடன் முடிவடைகிறது. பல்வேறு சமூகச் சீரழிவுகளின் பின்னாலுள்ள அரசியலை மனதை தைக்கும் வண்ணம் கவிதை போல் நகர்த்தப்படும் இப் படைப்பு தென்னிந்திய குப்பைகளுக்கு மத்தியிலிருந்து முகிழ்த்திருப்பது வியக்கவைக்கிறது.
ஒவ்வொரு குறியீடுகளும் அழகாகப் படமாக்கப்ப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் துயரத்தில் அழகைக் வெளிப்படுத்தியிருக்கும் கமரா, பின்னணியில் தவழும் இசை, ஆர்ப்பாட்டமில்லாத நடிகர்கள் அனைத்தும் இணைந்த கோர்வையை நெடுந்தீவு முகிலன் வழங்கியிருப்பது தேசிய சினிமாவின் மைற்கல்.
“பாற்காரன்”
என்னைப் பொறுத்த வரையில்… இலங்கையில் நிலவும் பால் மா பற்றாக்குறையை மையப் படுத்தி எடுத்த படம் என்பதற்கு அப்பால்… இன்றைய மக்களின் நிலையை ஓர் “பாற்காரன்” மூலம்… 9 நிமிடத்தினுள் அழகாக… சில வெளிப்புற படப்பிடிப்புக்களுடன்… பல உள் அர்த்தங்களுடன்…தெளிவு படுத்துகிறது… (படத்தை எடுத்த நெடுந்தீவு முகிலனிர்க்குத்தான் தெரியும் உண்மையாக இந்தப் “பாற்காரன்” மூலம் என்ன சொல்கிறார் என்று…ஹ்ம்ம்…)
சரி விடயத்திற்கு வருவோம்… இலங்கையில் பால் பற்றாக்குறை இன்று மட்டும் இல்லை… நாம் சிறுவராக இருந்த காலம் தொடக்கம்… முக்கியமாக யாழில் பால் பற்றாக்குறை கூட இருந்தது…
ஆனால் மட்டக்களப்பில் இருந்து தினமும் முட்டித் தயிர் பேருந்தில் யாழ் கடைகளிற்கு வரும்… (மட்டக்களப்பில் பால் தட்டுப்பாடு இல்லை என்று கூறுவார்)
அக்காலத்தில் நான் அறிந்த வரையில் வன்னியிலும் பால் தட்டுபாடு இருக்கவில்லை (முக்கியமாக நெய் கூட அங்கிருந்து தான் வரும்… அத்துடன் யாழ் தோட்டங்களிர்க்கு எரு கூட வன்னியில் இருந்து வரும்…)
இப்படம் இன்றைய யாழில் ஏற்பட்டுள்ள இந்தியப் படங்களின் தாக்கத்தையும்… ஏழ்மையையும்… காட்டுவதுடன் நிற்காமல்… விளிப்புனர்ச்சியூடான… பகுத்தறிவையையும்… காட்டுகிறது… என்று மட்டும் நிற்காமல்… தொழிலுக்கு புறப்படும் “பாற்காரன்” முதல் ஊற்றாக… புற்றுக்கு ஊற்ற பால் கொடுத்த நிலையில்… கடைசியில்… வாழத் துடிக்கும் சிறுமிக்கு பால் கொடுக்க முடியாத நிலையுடன் யாழின் நிகழ்கால நிலையையும்… தற்செயலாக நடந்த நிகழ்வு மாதிரி… தத்ரூபமான ஒளிப்பதிவுனூடே… காட்டுகிறார்…! (you find it)
பிற்குறிப்பு:
முன்பு இந்தியாவில் தான் இச் சிறுமி போன்ற நிலையை பார்த்திருக்கிறோம்… (குழந்தைகள் பால் இல்லாமல் அழும் போது… தெரு மூலையில் உள்ள பிள்ளையாருக்கு பால் ஊற்றுவார்கள்…)
Now I get it. Short Film. That is the Tamil word. How is the audience among Tamils in India.
,இசையும் ஒளிப்பதிவும் உயிரூட்டி கதையை கொண்டுசென்றிருக்கிறது,நடிப்புகளற்ற யதார்த்தம். பால்க்காரனிடமிருந்து கற்று இனிவருவோர் படம் பண்ணலாம்.மிகவும் நேர்த்தியான அழகான அமைதியான படம் .பாராட்டிக்கொண்டேயிருக்கலாம்.
ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கையையும் அவன் வாழும் சமூக நிலையையும் படமாக எடுத்தால் எத்தனையோ ஆயிரம் அற்புதமான யதார்த்தமான படங்களை எடுத்து நாம் பார்த்து மகிழலாம் அத்தோடு சமூகமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும் அதை விட்டு குடும்ப அங்கத்தவா்கள் நடிகா்களாகவோ தயாரிப்பாளா்களாகவோ அல்லது இயக்குனா்களாகவோ இருந்ததால் நடிப்பிற்கு வந்த சில்லறை நடிகா்களுக்காக சிலா் எடுக்கும் குப்பைகளையெல்லாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அவா்களுக்கு வேறு சங்கங்களும் அதன் பின்னே அலைய ஒரு கூட்டம் வேறு.
தேசிய சினிமா வழர எமது வாழ்த்துக்கள்.
This is a mile stone from sr
ilankan short film version. my best wishes to mugilan and team…
That is right Sayan. The whole of South India is not all Tamil.
Human must to think
No one said so, what is it your are trying to establish hre.
“Human must to think” about what…?
Cogito ergo sum .