முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்க ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 8 ம் திகதி நடைபெற்ற 23 உள்ளுராட்சிமன்றத் தேர்தலன்று கொலன்னாவைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் உயிரிழந்தனர்.
கோதாபயவின் நண்பரான துமிந்த சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னரே நீதீமன்ற உத்த்ரவு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.