ஆளும் கட்சியின் இரண்டு முக்கிய உறுப்பினர்களான துமிந்த டீ சில்வாவும், பாரத லக்ஷ்மண் பிரேமச் சந்ரவும் கொலன்னாவை தேர்தல் சாவடிக்கு அண்மையில் சந்திதுக்கொண்ட போது வாய்த் தர்க்கம் துப்பாக்கி மோதலாக வெடித்தது. துமிந்தவின் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கி முதலில் பாரதவின் மெய்ப்பாதுகாவலர் மீது சுடப்ப்பட்ட போது மோதல் வெடித்தது. இலங்கை அரசின் ஒவ்வொரு உறுப்பினர்களும் எதோ ஒரு வகையில் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் நிழல் உலகத்தோடு தொடர்புடைவர்கள் என்பது ரகசியமானதல்ல. துமிந்த டீ சில்வாவின் நிழல் உலகத் தொடர்பை மருத்துவ மனையில் இறக்கும் தறுவாயிலிருந்த பாரத லக்ஷ்மண் பிரமச்சந்ர வாக்கு மூலமாகப் பதிவு செய்துள்ளார்.
கோதாபய ராஜபக்ச இன்று மருத்துவமனையில் சென்று துமிந்தவைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பாரதவின் வாக்குமூலம்: