காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் நேற்று மீண்டும் துப்பாக்கி சூடு நடந்தது. பதான் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
இந்த சம்பவத்தை அடுத்து காஷ்மீரில் பல இடங்களில் பதட்டம் உருவானது. தலைநகர் ஸ்ரீநகரில் ஆங்காங்கே கும்பலாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நவ்சட்டா என்ற இடத்தில் போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
அதேபோல ராசீரிகடல், சரன்நகர், ராவல்புரா, மைசுமா ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீநகரில் 8 போலீஸ் நிலைய பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று அப்பாவி பொதுமக்களை கொன்றொழிப்பது பயங்கர வாத இந்தியாவிற்கு புதிதல்ல. பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் காஸ்மீரத்து சகோதரர்களுக்கு எமது ஆதரவை நல்குவோம். இந்திய சிங்கள இனவாத கொலைவெறி அரசுகளால் அழிக்கப்பட்ட இனததிலிருந்து அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்திற்கு எம்மால் அனுதாபக் குரலை விட வேறு என்ன செய்ய முடியும்?