துனிஸியாவின் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டுத் தலைவர் ஸின் எல் அபிடின் பென் அலி 90 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டியுள்ளார். இதன் பிரகாரம் 5 ஆவது தடவையாக மேலும் 5 வருட காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
இத்தேர்தல் நீதியும் நியாயமுமான முறையில் நடைபெற்றதாக ஆபிரிக்க ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் பெஞ்ஜமின் போங்கோலொஸ் தெரிவித்த போதும், தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜனாதிபதி பென் அலி கடந்த 23 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பை வகித்து வருகிறார். பென் அலி இதுவரை எதிர்கொண்ட தேர்தல்களில் முதல் தடவையாக 94 சதவீதத்திலும் குறைவான வாக்குகளை இம்முறை பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் 95 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ANOTHER MUGABE