சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர்களுடன் நடிகர் ரஜினி காந்த் கலந்து கொண்டார். இவரோடு, இந்து தத்துவா அடிப்படைவாதி பா.ஜ., தலைவர் அத்வானி, குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். துக்ளக் ஆண்டு விழாவில் அத்வானி பேசிய: போது அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
ஜெயலலிதாவின் நண்பரும் பார்ப்பனப் பத்திர்கையாளருமான சோ பேசுகையில், திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ., ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.
சீர்திருத்தவாத திராவிடக் கட்சிகள் தோன்றிய தமிழ் நாட்டில் மதவெறி பார்ப்பனக் கட்சிகள் புற்று நோய் போன்று சமூகத்தை அழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படுகின்றது.
உண்மை
பூனை குட்டி வெளியே வந்து விட்டது
தன்னை யார் என வெலிப்படுத்தி விட்டார்