தூக்குத் தண்டனைக்கு இன்று தடை உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் நீதிமன்ற வாசலில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருக்க 8 வாரங்களுக்கு இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மக்கத்தான வெற்றி இது. வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான் தமிழக மக்கள் தீர்ப்பு வந்ததும் ஆர்ப்பரித்தனர். நேற்றுத் தமிழகம் முழுவது நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் மூவரின் தலையெழுத்தை மட்டுமல்ல தமிழக மக்களின் அரசியல் திசைவழியையும் தீர்மானிக்கும் என்பது திண்ணம்.
ஜெயலலித சட்ட சபையில் இன்று தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தனக்கு அதிகாரம் இல்லை என்று நேற்றுக் கூறியிருந்தாலும் இன்று மக்களின் உணர்வுகளை மதித்து தீர்மானம் கொண்டுவருவதாகத் தெரிவித்தார். அத் தீர்மானத்தில் ஆளுனரைத் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோருவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்.
இது தமிழக மக்களின் போராட்டத்திற்கும் உணர்வுகளுக்கும் கிடைத்த வரலாறு காணாத வெற்றி! புலி ஆதரவு இனவாதிகள் மூலையில் முடங்கியிருக்க புதிய இளைஞர்கள் தமிழகம் எங்கும் பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எல்லம் இந்த வெற்றியைக் குவித்துள்ளது.
இதைக் கேட்கும் புலம் பெயர் தமிழர்கள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சீமான்,நெடுமாறன்,வைக்கோ,திருமாவளவன் போன்றோர்கள் ஒதுங்கி
விட்டார்களா? அல்லது பின்னால் மறைந்துள்ளர்களா? இந்த முடிவுக்கு
அகில இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளதா? சிங்களவருடன் தமிழரை
பகைமை கொள்ளச்செய்து சுயநலமடைவோர் போல, தமிழகத்தையும்
இந்தியாவின் பிற மாநிலத்தவர் பகைமை கொள்ளச்செய்ய
யாழ் மேலாதிக்க வர்க்கம் தமிழகத்திலும் செயற்படுகின்றதா?-துரை
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, சிங்களவருடன் தமிழரை
பகைமை கொள்ளச்செய்து சுயநலமடைவோர் போல, தமிழகத்தையும்
இந்தியாவின் பிற மாநிலத்தவர் பகைமை கொள்ளச்செய்ய
யாழ் மேலாதிக்க வர்க்கம் தமிழகத்திலும் செயற்படுகின்றதா என்பதை விட புலிகலின் வாலுகள் முயல்கின்றன, இத்னை எழுதும்நான் தென் இலங்கையில் வசிக்கின்றேன்
புலிகலின் துரோகத்தை பற்றி தெரியாமல், இதெல்லாம் நத்கின்றது, அவர்களை வைத்து நீங்கள் கொஞ்ஞுங்கள், மிகுதி உள்ள தலைவர்களையும் அவர்கள் கொல்லட்டும், இலங்கை கண்டியிலிருந்து தமிழன்
வீரன் உங்கள் ஆவேஷம் புரிகிறது மட்டுமல்லாமல் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. புலிக்கு கட்சிவளர்த்தவர்கள் புலம்பெயர்தேசத்தில் தான் இருக்கிறார்கள். இன்று அவர்களை நெருங்க முடியாது. மில்லினர்கள்.
பிரபாகரன் தனக்கு பாதுகாப்பாக தற்கொலைப்படையை வைத்திருந்தது
யாழ்பாணத்தவரையோ கிழக்குமாகாணத்தவரையோ அல்ல. இரண்டு கலவரங்களில் ´சிததேறிவந்த அப்பாவி ´மலையகமக்களே!. தற்கொலைபடைக்கு அனுப்பப் பட்டவர்கள் சாதிப்பிரிவினையால் ஒதிக்கிவிடப்பட்ட பாமரர்களே!. இதுவே! மேட்டுக்குடி வரலாறு. ஆனால் மரணதண்டணையை ரத்து செய்ய முளுமையான ஆதரவைத் தாருங்கள். அதன் அர்த்தம் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்பதல்ல.
இலங்கை தமிழர்களை தமிழ் தேசியம் என்ற போர்வைல் ஆளுமை செய்யா துடிக்கும் தமிழ் நாட்டு தேசிவதிகள்
இலங்கை தமிழர்களுக்கு என்று தனித்துவம் இருப்பதை உணரவேண்டும்இலங்கை தமிழர்களை தமிழ்தேசியம் என்ற போர்வைல் அட்டி படகிறர்கள் இதை உணராத புலம் பெயர் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழ் தேசியவ்திகளில் சொல்லுக்கு தலை அட்டி போமை போல் ஆடுகிறார்கள்
ஷந்திரன் ராஜா இப்பொது உன்மை பேசி உள்ளீர்கள்.நன்றீ.
என்ன சந்திரன் ராசா இப்படிச் சொல்லிப்போட்டியள்.
//மலையகமக்களே!. தற்கொலைபடைக்கு அனுப்பப் பட்டவர்கள் சாதிப்பிரிவினையால் ஒதிக்கிவிடப்பட்ட பாமரர்களே!. இதுவே! மேட்டுக்குடி வரலாறு. // பிரபாகரன் என்ன மேட்டுக்குடியா? ஏதோ சாதியை உயர்த்துவந்தவர்போல் எகிறுகிறீர்கள். பிரபாகரன் கரையான் என்பதை யாரும் அறிந்த ஒன்று. கரையாரை மேட்டுக்குடி என்றுயார் சொன்னது. உங்களுக்கு மேட்டுக்குடி என்றால் என்ன என்று தெரியவில்லை. மேட்டுக்குடி என்ற பெயர் எப்படிவந்தது என்றாவது தெரியுமா?
புலிசிந்தனை உங்களுக்கு மேட்டுகுடிசிந்தனையாக தெரியவில்லையோ?
அப்ப அதுகரையார் சிந்தனையாக கருதவேண்டுமென நினைக்கறீர்களா.
முதலவர் ஜெயாவின் “சட்டத்தரணி ” சோ வுக்கு தான் ரொம்ப கவலையாக இருக்கும்.மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி “அன்னை”யை புகழ தமிழ் பிழைப்புவாதிகளுக்கு நல்ல வாய்ப்பாக போகிறது.
இந்திய நடுவன் அரசின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதையாகி விட்டது. தூக்கிலிட்டால் ராஜீவின் இறப்பின் மழுங்கடிக்கபட்ட ஈழ ஆதரவு மீண்டும் முழு வீச்சில் முன்னெடுக்கபடும். தூக்காவிட்டாலும் மக்கள் போராட்டத்தின் மகத்துவத்தை தமிழகம மற்றைய ஈழ ஆதரவிற்கும் பயன்படுத்தும்.
3 பேர் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்: தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி காஷ்மீர் முதல்-மந்திரி விமர்சனம்; அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றலாமா? காஷ்மீர் முதல்-மந்திரி கல்த http://www.maalaimalar.com/2011/08/31152655/kashmir-chief-minister-omar-ab.html