நடிகர் ஷாருகான் மகன் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் கைதாகியுள்ள ஆர்யன் கானை கைது செய்து போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பாஜக பிரமுகர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசு இதுவரை பதில் சொல்லவில்லை.
இந்நிலையில் அமீர்கான் சியட் டயர் விளம்பரத்தில் நடத்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் நடிகர் அமீர்கான் பொது மக்கள் தெருவில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது போன்று அந்த விளம்பரம் உள்ளது. இந்த விளம்பரத்திற்கு கர்நாடக பாஜக எம்.பி ஆனந்த குமார் ஹெக்டே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது எதிர்ப்பையடுத்து இந்துத்துவ சக்திகள் அமீர்கானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனந்த குமார் ஹெக்டே சியட் டயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் வர்தன் கோயாங்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,”சமீபத்தில் தங்கள் நிறுவன விளம்பரத்தில், இந்துக்களின் உணர்வுகள் புண்படும்படி காட்சி இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் உங்கள் நிறுவனம், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் என்று நம்புகிறேன். தெருக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என நடிகர் அமீர்கான் அந்த காட்சியில் கூறுகிறார். இது நல்ல செய்தி. உங்களின் இந்த பொது நலன் சார்ந்த விஷயம் பாராட்டுக்குரியது.
மேலும் ஒரு பிரச்சினையை பொதுமக்கள் தெருக்களில் எதிர்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் நமாஸ் என்கிற பெயரில் சாலைகளை மறிப்பதால் பொதுமக்கள் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள். இது இந்திய நகரங்களில் வழக்கமாக நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சிக்கி பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன.
தர்காக்கள் மீது வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் பிரார்த்தனை (அசன்) செய்யப்படுகிறது. இதனால் அதிக ஒலி வெளியாகி நோயாளிகள், ஓய்வு எடுப்பவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இடையூறு ஏற்படுவதுடன் ஒலி மாசு உண்டாகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒலி அதிகமாக வெளிப்படுகிறது. வெள்ளிக்கிழமை நாட்களில் இது அதிக நேரம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தடுக்க நீங்கள் தீவிரமாக கவனம் செலுத்துகிறீர்கள். நீங்களும் இந்து மதத்தை சேர்ந்தவர் தான். ஆண்டாண்டு காலமாக இந்துக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை நீங்கள் அறிவீர்கள். சமீபகாலமாக இந்து அல்லாத நடிகர்கள், எப்போதும் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார்கள்.
அதே நேரத்தில் அவர்கள் சார்ந்த மதத்தினர் செய்யும் தவறுகளை வெளிப்படுத்துவதே இல்லை. எந்த நிலையிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.