மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்பாளருமான மு.க., அழகிரி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க.,போட்டியிடுமா என கேட்டதற்க நான் போட்டியிடவில்லை என கூறினார்.ஸ்டாலின் நிகழ்ச்சியில்கலந்து கொள்ளாத உங்களது ஆதரவாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரே என கேட்டதற்கு, தி.மு.க.,வில் நிர்வாகிகள் நீக்கம் என்பது சகஜமான ஒன்று. இங்கு அழகிரியின் ஆட்கள், ஸ்டாலின் ஆட்கள் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருணாநிதியின் ஆட்கள்தான் எனக் குறிப்பிட்டார்.
தி.மு,க என்ற திராவிடக் கட்சி என்பதற்கு குடும்பக் கட்சி என்பதை அழகிரி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.