உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் 9-வது அகில இந்திய இரண்டு நாள் மாநாடு திருவனந்தபுரத்தில் ஜனவரி 8-ம் தேதி துவங்கியது. சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் எம்.கே. பாந்தே வீரவணக்கம் செலுத்தி மாநாட்டின் செங்கொடியை ஏற்றினார்.
ரஞ்சனா நிருலா தலைமையில் 7 பேர் கொண்ட தலைமைக்குழுவில் தமிழகத் தின் எஸ்.பிரேமா உறுப்பினராக இருந்தார். மாநாட்டுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த 300 பெண் பிரதிநிதிகளை வரவேற்று சீமான்குட்டி எம்எல்ஏ பேசினார். பின்னர் கடந்த காலத்தில் மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கே. பாந்தே துவக்க உரை ஆற்றினார்.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மாலதி சிட்டிபாபு உட்பட 49 பெண்கள் தமிழக பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.
அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங் கிணைப்பாளர் ஹேமலதா, 9-வது அகில இந்திய மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையின் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த 20 பெண் பிரதிநிதித் தோழர்கள் விவாதத்தை நடத்தினர். விவாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செண்பகம், எல்ஐசி வி.ஜான்சி ராணி, ஆசிரியர் க.பாண் டிச்செல்வி மூவரும் விவாதங்களை நிகழ்த்தினர்.
இம் மாநாட்டின் மினிட்ஸ் குழுவில் தமிழகத்தின் மல்லிகா பத்மினி (அரசு ஊழியர் சங்க நிர்வாகி)யும், தீர்மானக்குழுவில் வி.பி.இந்திரா (அ.இ.கமிட்டி உறுப்பினர்) மற்றும் தகுதி ஆய்வுக் குழுவில் குணசுந்தரி ரங்கநாதன் (உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு) பங்கேற்றனர்.
கேரள மண்ணின் பாடல்களும், திருவாதிரைத் திருநாள் நடனம், பொறியியல் மாணவர்களின் குச்சிப்புடி நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் முதல் நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.