கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வரும் நிலையில் அவர்களில் அரசியல்கைதிகளை சிறப்பு முகாம்களில் இந்திய அரசு அடைத்து வருகிறது.
சிறப்பு முகாம் என்பது சிறைக்கூடம் போன்ற ஒன்றுதான் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இந்தமுகாம்களில் அடைக்கப்பட்டவர்கள்வெளியுல தொடர்புகள் இன்றி சிரமங்களை அனுபவிப்பார்கள்.
கைது செய்யப்படும் ஈழத் தமிழர்கள் ஜாமீனில் வந்தாலும் அவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள். இந்த சிறப்பு முகாம் திருச்சி மத்திய சிறையில் வளாகத்திற்குள்ளேயே உள்ளது. இங்கு 15 ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல மாதங்களாக போராட்டம் நடத்தியும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த 15 பேரும் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டதாகத் தெரிகிறது. அதில் ரமணன் என்பவர் கத்தியால் தன்னை கீறிக் கொண்டுள்ளார். நிசப்தன் என்பவரும் கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தூக்க மாத்திரை உண்ட 5 பேரும் கத்தியால் கீறிக் கொண்ட இருவருமாக மொத்தம் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.