அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஆதிக்க சாதிஅமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் ஆதிக்க சாதி வெறியன் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.அனைத்து சமூக பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். இதில் இடம் பெற்றிருப்பது அனைத்துமே ஆதிக்க சாதி அமைப்புகள்தான். இவர்களைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.
“திருச்சியில் சாதி சங்கக் கூட்டம் நடத்தவந்த “சாதி வெறியன்” பா.ம.க ராமதாசு வை எதிர்த்து வன்னியர் சங்கம் உட்பட ஆதிக்க சாதிச் சங்கங்களைத் தடை செய், அவர்களின் சொத்துக்களைப் பறித்தெடு என்ற முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்திய
¤மக்கள் கலை இலக்கிய கழகம்,
¤புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
¤புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
¤பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கைது!!!