திருகோணமலை மாவட்டத்தின் சில சிங்கள கிராமங்களில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கென 500 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
வன்னியில் இடம்பெறும் தாக்குதலையடுத்துத் தப்பிச் செல்லும் விடுதலைப் புலிகள் பாதுகாப்பற்ற கிராமங்களில் வாழும் மக்களை தாக்கக் கூடுமென எதிர்பார்த்தே இத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வகையில் கடந்த காலங்களில் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகிய சேதுநுவர , மொரவௌ, கோமரன்கடவல பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்கென அப்பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கியே மேற்படி 500 பேருக்கும் இத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாதுகாப்பற்ற கிராமங்களில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளும் துப்பாக்கி இயக்குதல் தொடர்பான பயிற்சிகளும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.