31.03.2009.
திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மாதம் 11 ஆம் திகதி றெஜி ஜூட் வர்சா என்ற இந்த 6 வயதுச் சிறுமி பணயம் கோரி சிலரால் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே இரு சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த வேளையில் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று மேலும் இரு சந்தேக நபர்களை சில ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸார் அழைத்துச் சென்ற வேளை, ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் என்று கூறப்படும் ஒரு குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கி மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதலின் போது அந்த குழுவினர் சுட்டதில், கிருஷாந்த் மற்றும் றெஜினோல்ட் என்ற இந்த சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
BBC.
ரீ.எம்.வி.பி என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை கிழக்கில் நடந்த அத்தனை கடத்தல் கொள்ளை> கப்பம் பெறுதல்>கற்பழிப்பு >கொலை என அத்தனைக்கும்>மேலும் கொழும்பில் நடந்த இவற்றைப்போன்ற கனிசமான அத்தனை சம்பவங்களுக்கும் கருணா-பிள்ளையான் உட்பட்ட இதே ரீ.எம்.வி.பி கட்சிதான் காரணம் என்பது அங்கு எல்லோருக்கும் தொpந்த விடயமே.
தற்போது கருணா மகிந்தாவின் கட்சியுடன் சேர்ந்ததும் புனிதமாகிவிட்டதா?இந்தக் கப்பப் பணத்தில் பிள்ளையான் கருணாவிற்கு வேண்டிய சொத்துக்களை வெளிநாடுகளில்(கருணா ஒளித்துத் திரிந்தும் கம்பி எண்ணிய காலங்கள்உட்பட)இடத்துக்கிடம் வாங்க செய்த லீலைகளை கருணா இவ்வளவு விரைவில் மறந்து விட்டாலும் இங்கும் அங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மறப்பார்களா?
இந்த நிலையில் கருணா மகிந்தாவின் கட்சி தாவியவுடனே நடக்கும் கூத்துக்கள் மக்களுக்கு புதிதல்லவே.
ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரீ.எம்.வி.பி.யில் பிள்ளையான் உட்பட 3பேர் மட்டுமே இருப்பதாக கூறி தன்னுடன் 3000பேரை மகிந்த கட்சிக்கு இணைத்ததாக கருணா தம்பட்டம் அடித்தார்.
எனவே ரீ.எம.வி.பி.யை முற்றுமுழுதாக அழித்து -கிழக்கு தனித்துவத்தையும் மகிந்தாவுக்கு மொத்தமாக விற்று தனது அமைச்சர் பதவிக்கான விசுவாசத்தை அழகாக மகிந்தாவிற்கு காட்டுகின்றார்.கருணாவின் இந்த பச்சைத் துரோகத்தை பால்குடிக் குழந்தை கூட உணரும் எனவே வர்சாவின் கொலைக்கான அத்தனை ரீ.எம்.வி.பியினரையும் அழிக்கும் அதேசாக்கில் ஒரே கல்லில் இருமாங்காயாக ரீ.எம்.வி.பியையும் அழிப்பதில் கருணா மும்முரமாக செயற்படுகின்றார்.
மூன்றாவது மாங்காயாக தாங்கள் எல்லோரும் இலங்கை ராணுவத்துடனும்-ராணுவத்திற்கு உளவு சொல்லித்திரியும் கூலிக்கு மாரடிப்பவர்களின் அத்தனை ரகசியமும் வெளியே வரப்போவதை அப்படியே மூடி மறைப்பதற்காக நடத்தப்படும் தொடர் கொலைகள்தான் இவை.
புலியை குறிக்கப்பட்டசதுர அடிக்குள் வைத்து யுத்தம் செயிகின்றோம் என ஒருபக்கம் மார் தட்டும் இலங்கை அரசின் கணக்கைப் பார்த்தால் எப்படி திருகோணமலையில் அதுவும் மிக ரகசியமாக குற்றவாளிகளை வெளியே கொண்டு வருவதை காத்திருந்து வன்னிப்புலிகள் கொலை செய்ய முடியும் .வன்னிப் புலிகள் தங்கள் இருப்பையே பாதுகாத்து கொள்ள போராடும் நிலையில் இங்கு நிற்பது உண்மையென்றால் கணக்கு எங்கோ உதைக்கின்றதே?
பல்லிக்கு கூட இந்த கணக்கு வழக்கு பிடிபிவில்லையா?
திருகோணமலைப்பக்கமும் பல்லி உமது புலானாய்வு மூளையை செலுத்தும்.நல்ல “ஜேம்ஸ் பாண்ட்” படத்தை பார்க்கும் அல்லது தெலுங்கில் வரும் அரசியல் படத்தை பார்க்கும் உணர்வு வரும் .புலி -கிழக்குப்புலியாகி- இபபோ மகிநதபுலியாகி என்னென்ன திருவிளையாடல்களெல்லாம் பண்ணுகின்றார்கள்.சொல்லுபவன் சொன்னால் கேட்பவனெல்லாம் கேணப்பயல்களென நினைத்து விட்டார்களா?
இவற்றையெல்லாம் திருமலையில் நேர்மையான நீதியரசரென சொல்லப்படுபவரும் பார்த்துக்கொண்டருக்கின்றாரா?
ஏதோ ஓன்று மட்டும் நடக்கின்றது.
வர்சாவின் அபயக்குரல் பலபேரை கண்ககுத்தீர்க்கின்றது.
பைபிளின் வாசகம் தான் ஞாபகம் வருகின்றது.
வாளெடுத்தவன் வாளால் அழிவான்.
அப்போ கருணாவிற்கு என்ன கெதியோ? யாராலோ?