இலங்கையில் இதுவரையிலான மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையில் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்றுக்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் சிறீலாங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அனுராதபுரத்தில் ஆளும் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மக்கள் வாக்களிப்பில் பெருமளவில் பங்கெடுத்துக்கொண்டனர். சர்வதேசத்திற்கு தமது வெற்றியை காட்டவேண்டும் என்பதை முன்வைத்து இனவாத அடிப்படையிலும், பிரதேச வாதத்தைப் பயன்படுத்தியும், ஏகாதிபத்திய நாடுகளை முன்வைத்துமே மக்கள் ஆதரவை வாக்குப் பொறுக்கும் கட்சிகள் திரட்டிக்கொண்டன.
This is a very positive and a welcoming trend. The Tamil majority of the Eastern Province is slowly getting into the national stream.
எதைவைத்து வாக்குப் பொறுக்கினாலும் பரவாயில்லை. திருமலை மறுபடியும் தமிழர் கையில் என்பது மகிழ்ச்சியே.
தவறு. வெறும் 72 வாக்குகளை அதிகமாக கூட்டமைப்பு பெற்றுள்ளது. ஆசனங்கள் மஹிந்த அரசுக்கும் கூட்டமைப்பிற்கும் தலா மும்மூன்று ஆசனங்கள் மட்டுமே. அத்துடன் அரசின் தோழமைக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தை பெற்றுள்ளது. போதாக்குறைக்கு கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை மஹிந்த அரசே பெற்றுள்ளது. தமிழ் கட்ட்சிகள் தேர்தல் காலங்கள் மற்றும் நெருக்கடியான காலத்தில் மட்டும் கிழக்கின் ஏனைய இனங்களுடன் அரசியல் செய்யாமல் நீண்ட புரிந்துடனான அரசியல் செய்யும் பக்குவத்தை பெற வேண்டும். அது பிற்கால தமிழ் பேசும் மக்களின் அரசியல் இருப்புக்கு கொஞ்சமாவது உதவி புரியும்.