திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்தள்ள மக்கேசர் விளையாட்டரங்கில் புனரமைப்புபணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் 12 ஆம் திகதி இரவு 8 மணியளவில் கிணறு ஒன்றினை அகழும் பணியினை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் எழும்புகளும் எச்சங்களும் தென்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று 12 ஆம் திகதி காலை முதல் இப்பகுதியில் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டனர்.
இப்பகுதிக்கு பொதுமக்கள் எவரும் நேற்று மாலை 7 மணிவரை அனுமதிக்கப்படவில்லை அத்துடன் ஊடகவியலாளர்களும் அவ்விடத்திற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டனர்.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா இவ்விடத்தை நேற்று மாலை (13.02.14) 5 மணியளவில் பார்வையிட்டதன் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை வரை அவ்விடத்தை பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.