தமிழ்நாட்டின் பல்வேறு வரலாற்று நூல்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு நாம் தமிழர் கட்சி சீமானும், பெ. மணியரசனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்துத்துவ கருத்தியல் தமிழ்நாடு முழுக்க பரவிய போதும் மவுனம் காத்த இவர்கள். இப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்ப்பு காட்டுகின்றனர். “தமிழர் வரலாற்றை திராவிட அடையாளமாக திருடி மாற்றுகிறார்கள்” என்று கடுமையாகச் சாடி சீமான் அறிக்கை வெளியிட்ட நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சீமானுக்கு பதில் வெளியிட்டுள்ளார் அதில்,
“திராவிடக் களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாகச் சில தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பலர் பொய்களை பரப்பி வருகிறது. இது தொடர்பாக பரபரப்படும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. இளைய தலைமுறையினருக்குச் இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. சிந்து சமவெளி சிந்து சமவெளி நாகரீகத்திற்கு நமக்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது. வரலாற்று ரீதியாக நமது கலாச்சாரங்களுக்கு இடையில் பல ஒற்றுமைகள் உள்ளது. இது தொடர்பாக நிறைய புத்தகங்கள்கள், கட்டுரைகள் உள்ளன. இதை எல்லாம் தொகுத்து தனியாக திராவிட களஞ்சியம் என்று வெளியிட இருக்கிறோம். ஆனால் நாங்கள் ஏதோ சங்க தமிழ் நூல்களை திராவிட களஞ்சியம் என்று பெயரிட நினைப்பதாக செய்திகளை பரப்புவது தவறானது. படிங்க அடிப்படை ஆதாரமற்ற புகார் இது. ங்க தமிழ் நூல்களை திராவிட களஞ்சியம் என்று பெயரிட நாங்கள் திட்டமிடப்படவில்லை. அறிக்கையை ஒழுங்காக படித்திருக்க வேண்டும். அப்படி படிக்காமல் அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டாம். இந்த அறிவிப்பை வைத்து யாரும் குட்டையைக் குழப்பவும் வேண்டாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலவும் வேண்டாம். அறிக்கையை தெளிவாகப் படிக்காமல், அதை புரிந்துகொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன், என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.