இன்று(19.06) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபாவும் அவரோடு ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்ட இன்னும் பதின்னான்கு உறுப்பினர்களும் நிராயுதபாணிகளான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நாள். ஜூன் மாதம் 19ம் திகதி 1990 அன்று சென்னையில் சக்கிரியா காலனியிலுள்ள அடுக்குமாடிக் கட்டத்தொடரிலுள்ள வீடொன்றில் பதின்நான்கு நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட செய்தி சென்னை முழுவதும் பரவியது. கடல் அலைகளைக் கடந்து ஈழத்தையும் சென்றடைந்தது.
ஈழப் போராட்டத் தலைவர்களுள் ஆஜனுபாகுவான உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றமும் கொண்ட பத்மநாபா ஆரம்ப காலங்களில் தோழர் ரஞ்சன் என அழைக்கப்பட்டார். முன்னர் ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராகவிருந்த பத்மநாபா 1980 ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் மந்த நிலையில் காணப்படுகிறது என்று அந்த அமைப்பிலிருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார். நாபா உடன் வெளியேறிய ஏனையோரும் இணைந்து EPRLF இன் மத்திய குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். அந்த மத்திய குழுவின் செயலாளர் நாயகமாகப் பத்மநாபா தெரிவு செய்யப்படுகின்றார்.
இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே (EPRLF) ஆகும்.
கிராமிய அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை EPRLF உருவாக்கிக் கொண்டது. ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ளக வெளியகப் வெளியீடுகள், அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
1981 ஆம் ஆண்டின் இறுதியிலேயே மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற இராணுவப் பிரிவை உருவாக்கிக்கொண்டு பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
அந்த வேளையில் சமூக ஏகாதிபத்தியமாக தேய்ந்துகொண்டிருந்த சோவியத் ரஷ்யாவின் தமிழ் நாட்டு முகவர்களின் தலையீடுகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு புறத்தில் வெகுஜன அமைப்புகளின் மீதான அக்கறை அருகிவர மறுபுறத்தில் ‘பிராந்திய நல்லிணக்கம்’ என்ற அடிப்படையில் இந்திய அரசுடன் உறவை வளர்த்துக்கொள்கின்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் அந்த அமைப்புன் புதிய போலித்தனமான அரசியலுக்கு எதிரான உட்கட்சிப் போராட்டங்கள் வலுவடைகின்றது. அப்போராட்டத்தில் நாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஓரணியிலும் முற்போக்கான குழுவினர் இன்னொரு அணியிலும் கருத்தியல் விவாதங்களை மேற்கொள்கின்றனர்.
1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்திய அரசும் அதன் உளவுப் பிரிவும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவு செய்துகொண்ட இயக்கங்களுள் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் ஒன்று.
நூற்றுக்கணக்கான கிராமப்புற இளைஞர்களை விட்டில் பூச்சிகள் போல இந்திய அரசு பயிற்சிக்கு அழைத்துச் சென்றது.
இக் காலப்பகுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் உறுப்பினர்களைக் கண்காணிபதற்கு என்று உளவுப்படை ஒன்று உருவாக்கப்படுகிறது.
மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்று அழைகப்பட்ட அந்த உளவு அமைப்பின் செயற்பாடுகள் EPRLF அமைப்பினுள் பல மோதல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கிறது.
இந்திய அரசின் உற்பத்தியான PLA இராணுவப் பிரிவு அரசியலில் அரிவரி கூடத் தெரியாத டக்கள்ஸ் தேவாநத்தாவினால் தலைமை தாங்கப்படுகிறது. டக்களஸின் இராணுவ சாகசங்களாலும், உடல் வலிமை காரணமாகவும், இயல்பான பண்புகளாலும் இராணுவப் பிரிவின் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தார். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் நாபா குழுவினர் டக்ளஸைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். 1986 ஆம் ஆண்டில் டக்ள்ஸ் தேவாந்தாவிற்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையின் பணம் மற்றும் ஆயுதக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட டக்ளஸ் – நாபா பிளவு நிரந்தரமாகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் கைப்பொம்மை போல நாபாவும் இந்திடாவின் கைப்பொம்மையாக சுரேசும் செயற்பட மத்திய குழுவிலும் அமைப்பு முழுவதிலும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸ் இற்கு ஆதரவு வழங்கினர்.
1986 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நம்பிக்கைக்கு உரிய கபூர் என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுகிறார். டக்ளஸ் குழு தனியாக இயங்க ஆரம்பிக்கிறது.
1986 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகின்றது. ஆரம்ப நிலைப் போராளிகளிலிருந்து முகாம்கள் வரை இயக்க உறுப்பினர்கள் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனர். பலர் ஏன் மரணித்துப் போகிறோம் என்று அறியாமலே அனைதைகள் போன்று தெருக்களிலும் புலிகளின் முகாம்களிலும் கொல்லப்படுகின்றனர்.
சுரேஷ் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட கபூர் உட்பட பலர் கொல்லப்படுகின்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இந்தியத் தலையீட்டுக்கு எதிராகவும் மக்கள் திரள் வழிமுறைகளுக்காக்வும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் பலரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகின்றனர். எஞ்சியிருந்த சிலரைப் புலிகள் இயக்கத்தினர் தேடித்தேடி அழிக்கின்றனர். பலர் தமிழ்ப் பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர்,
இவர்களின் வெளியேற்றத்தோடு போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் மௌனிக்கப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான போராளிகளோடு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ‘புரட்சிகர’ சுலோகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்திய உளவுத்துறையின் தயவின்றி ஒரு காத தூரம் கூட நகர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
வாழ்வாதாரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசைத் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகின்றது.
1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.
இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.
1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.
1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.
சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.
ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரால் துரோகிப் பட்டம் வழங்கப்பட்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு பத்மநாபா சுரேஷ் குழுவினர் இந்திய இராணுவத்தோடு வெளியேற வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை திருகோணமலையில் முன்வைக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாச மாகாண சபையைக் கலைத்துவிடுகின்றார்.
வரதராஜப்பெருமாளை இந்திய இராணுவம் தனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறது. பத்மநாபாவும் மத்திய குழுவில் சிலரும் இந்திய இராணுவத்தில் வலைக்குள் தாம் முழுமையாகச் சிக்குண்டதை உணர்ந்துகொண்டதாகவும் அது தொடர்பான மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார். அவ்வேளையில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த கொலையாளிகளால் பத்தமநாபாவும் பதின்மூன்று மத்திய குழு உறுப்பினர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்.
80களின் ஆரம்பத்தில் ரஞ்சன் தோழர் என்று தொலைதூரக் கிராமங்கள் பலவற்றில் அறியப்பட்ட நாபா, உண்ண உணவின்றி மக்களின் விடுதலைக்காக உழைத்திருப்பதை அந்தக் கிராமத்து மக்களே சாட்சியாகச் சொல்வார்கள். அமைதி நிறைந்த தோற்றம் கொண்ட நாபா அதிகமாகப் பேசுவதில்லை. தனது அருகிலுள்ள அனைவரின் மீதும் அன்போடு நடந்துகொள்வார். லண்டனில் மேற்படிப்பிற்காக வந்த நாபா விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காகவே திரும்பிச் சென்றவர்.
இந்திய அரசினதும் அதன் உளவுப்படையினதும் சதிவலைக்குள் சிக்குண்டு சமூக விரோதச் செயல்களுக்குத் தலைமை வகித்து ‘துரோகியாக’ கொல்லப்பட்டார். இறுதியில் நாபாவைக் கொலை செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.
பத்மநாபாவின் பெயரால் மக்களின் அவலங்கள் குறித்துத் துயர்கொள்வதாகக் கூறும் குழுக்கள் இந்த உண்மைகளை மறைத்துவிடுகின்றன..
பத்மநாபாவை விமர்சிக்கத்துணிவற்ற அதிகாரவர்க்கத்தின் அடியாள் கும்பல்கள் ஜூன் 19ம் திகதியை தியாகிகள் தினம் என்று கொண்டாடி மகின்ழ்கின்றன.
//..லண்டனில் மேற்படிப்பிற்காக வந்த நாபா விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காகவே திரும்பிச் சென்றவர்.//நாபா இலங்கைப் போலிஸாரால் தேடப்பட்டு,வெளிநாடு போன,வசதி படைத்த குடும்ப இளைஞர்களில் ஒருவர்.’தண்ணி புகழ்’ இரத்தினா வரைந்த ‘EROS BLUEPRINT’ ஆல்,GUES (GUEST)ஆக இந்தியாவில் இறக்கப்பட்டவர்.
மேற்படி கதை எழுதிய சுதர்சன்( நாச்சியப்பன் இல்லையா?),”மேற்படிப்பு “விளக்கம் தர வேண்டும்.
Now it is your people and our people all over the world. What a country Sri Lanka is? You can get a passport in a day and take off immediately as you please. In Myanmar (Burma) you need a Cabinet Approval for that, I heard.
மன்டையன் குறுப் பிறேமச்சந்திரன் .யார் (ரி என் எ )அம்மாடி தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரால் துரோகிப் பட்டம் வழங்கப்பட்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு சுரேஷ் குழுவினர் இந்திய இராணுவத்தோடு வெளியேற வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை திருகோணமலையில் முன்வைக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாச மாகாண சபையைக் கலைத்துவிடுகின்றார்.
வரதராஜப்பெருமாளை இந்திய இராணுவம் தனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறது. பத்மநாபாவும் மத்திய குழுவில் சிலரும் இந்திய இராணுவத்தில் வலைக்குள் தாம் முழுமையாகச் சிக்குண்டதை உணர்ந்துகொண்டதாகவும் அது தொடர்பான மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார். அவ்வேளையில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த கொலையாளிகளால் பத்தமநாபாவும் பதின்மூன்று மத்திய குழு உறுப்பினர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்.இது கதை அல்ல நிஜம் யார் அறிவார் ? இதைப்போலதான் சிறிசபாரத்திணத்திற்கும் நடந்தது சாபாரெத்திணம் கொல்லப்படும் போது அடைக்கலநாதன் .சிவாஜலிங்கம் பொட்டம்மான் ரகசிய உளவாழிகள் ஆதாரம்(அடைக்கலநாதன் .சிவாஜலிங்கம்.சுரேஷ் பிரேமச்சந்திரன்.)இவர்கள் அனைவரும் ரி என் எ சிறிசபாரத்திணத்திற்கும் நடந்தது என்ன ?இது கதை அல்ல நிஜம் யார் அறிவார் ? பற்மநாபா பலய பதிவு புதிய சிந்தனைக்கு http://www.youtube.com/watch?v=3Ck96c-kaMo
[youtube http://www.youtube.com/watch?v=3Ck96c-kaMo&w=420&h=315%5D
வரதன்! அந்த இணையத்தொடுப்பில்,இந்திய ஷெனாய்(shehnai)தான் செம சாத்து சாத்துகிறது.’பதுமநாபா பரமபுருஷா’ (http://www.youtube.com/watch?v=ACaTtl8383U) என்கிற தெலுங்கு கீதத்தையும் பின்னணியில் பின்னி விட்டிருக்கலாம்.
இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே (நுPசுடுகு) ஆகும்.. போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் மௌனிக்கப்படுகின்றன
யதார்தங்களுக்கான புரிதல் மட்டுமல்ல உண்மை எது என்பதனை எமது சமூகம் ஏற்கப்பட வேண்டும் நாம் எமக்குள் பிளவுபடுவதால் எதிரியை வளர்க்கின் றோம் அந்த வகையில் தற் போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக சில உண்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் எதனை செய்ய வேண்டும் என்பதனை தவிர்த்து கடந்தகாலத்தினது தவறு களையோ அவற்றை நியாயப்படுத்துவதோ அல்லாமல் ஈழத்தின் வரலாற்றை அடையாளமாக போராடிய கடந்தகாலப்போராட்டத்தை முறியடிக்க சிங்கள தேசம் சர்வதேசத்தை பயன்படுத்திய விதம் போல் தமிழர்களும் நடப்பது நியாமாக முடியாது.
அதனால் ஒரு விடுதலைசசெயல் பாடுகளுக்கு பலரது அர்பணிப்பு தேவை அதில் அத்தனையும் நியாயமானது என்று நிரூபிக்கப்பட முடியாது விட்டாலும் கடந்தகாலப் போராட்தின் எழுச்சி மட்டுமல்ல முள்ளிவாய்கால் அவலம் வரை தமிழினம் தமிழர்களோடும் பேராடிய அத்தனை நகர்வும் உள்ளது
அதனால் அவர்களது வெற்றிடம் எதற்கு என்பதனை விட வீழ்ச்சி என்பது கூட பலரது புரிதலுக்கே அன்றி எமது விடுதலை வரலாறு தோற்காத பக்கத்தில் பயணிக்கும் போது நாம் சில விடயங்களை புரிய வேண்டும். அதாவது எமது வரலாறு தவறானவர்களை அடையாளப்படுத்துவதனை ஏற்காது என்பதனையும் கடந்தகாலப்போராடத்தின் நியாயமான எழுச்சியும் அதனது தேவைகளும் எந்த இனத்திலும் எதிர்பார்கப்பட முடியாத நகர்வு என்பதனை ஏற்று எமது தேசத்தின் விடுதலைக்கு தகுதியானவற்றை தமிழினம் ஏற்றாக வேண்டும். அதுவே எமது விடுதலைக்கான அதி உச்ச அடையாளம். அதாவது கடந்த காலத்தினது உயிர் பலிகள் அத்தனையும் எமது தேச விடுதலைக்கானஅடையாளம் அதனைபோல் அதனை காரணமாக கொண்ட புலம் பெயர் சமூகம் அதனை தற்போது பிளவு படுத்தி சந்தற்பங்களை திசை மாற்றாமல் . அவர்களது நியாயமான நகர்வாக எதிர்காலத்தில் நா.க.த.அரசாங்கம் புலம் பெயர் தேசத்தில் வளர்கப்பட வேண்டும். .
அதாவது தாயமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வலுப்படுத்தியும் புலம் பெயர் சமூகம் நா.க.த.அரசாங்கத்தை உண்மைவழிகளுக்குள் செயலாற்றும் சர்தற்பங்களையும் வளர்கப்படும் போது எதிரிகூட எம் மை அழிக்கும் திட்டங்களை கைவிட்டு ஈழத்தின் வரலாற்றினது உண்மைகளை ஏற்று எதிர்காலத்தை உண்மைக்கு கிடைத்த எதிர்காலமாக மாற்ற முடியும் என்பதே காலத்தினது நம்பிக்கை.
யாழ்பபாணம் முதல் மட்டு நகர் வரை இவருக்கு தியாகிகள் தினம் நடந்தது. ஆனால் தலைவர் பிரபாகரனிற்காக மலசல கூடத்தில் ஒளித்திருந்தல்லவா அஞ்சலி செலுத்துகிறார்கள்!
Mr. Vannan. Three pockets in the North and Three in the East.
பத்மநாபா உயர்கல்வி படித்த உயர்குடி வெள்ளாள பணக்காரன். தேசியத் தலைவர் பிரபாகரன் சாதாரணதர பரிட்சை கூட எழுதாத மாணிக் பாட்ஷா. அத்தோடு மீன்பிடி சமூகத்தை சேர்ந்த அடக்கபடும் சமூகம். அதனால் தன் கடைசி கட்டம் வரை போராட முடிந்தது.
Sekar, Peoples Bank Cash Transport. Assistant Superintendant of Police late Thambirajah Jeyakumar.
Sri Padmanaba is Vellalar. I am Sengunthar. S. P. Tamil Selvan said it right. There is a Tamil National interest in Sri Lanka.
பத்மநாபா தியாகியா என்பதுகுறித்து தனக்கென ஒரு அபிப்பிராயத்தை வைத்திருப்பதும் அதனை தெரிவிப்பதும் சுதர்சனின் உரிமை. ஆனால், சுதர்சனுடைய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பல தவறானவை. இது போன்ற தவறான தகவல்களை வைத்திருக்கும் யாரும் சரியான முடிவிற்கு வருவது சாத்தியமில்லை.
ஆனால் சுதர்சன் தெரிவித்துள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து சுதர்சனுக்கும், சுதர்சனின் கட்டுரையை இணையத் தளங்களில் பார்வையிடுபவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
புத்மநாபா மத்தியகுழு கூட்டம் ஒன்றில் அல்லது கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது படுகொலைச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறுவது உண்மையில்லை. அவர் தனது குடும்ப வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே சென்னை வந்திருந்தார். அவர் திருமணமாணம் செய்துகொண்ட பின்னர் அவரது பாவனைக்காக கட்சி வழங்கியிருந்த தொடர்மாடி குடியிருப்பிலுள்ள ஒரு வாடகை வீட்டிலேயே சம்பவம் நிகழ்ந்தது.
மக்கள் ஆய்வுப்பிரிவு ஈபிஆர்எல்எவ் இன் கட்டமைப்பில் உள்ள இராணுவ பிரிவு, அரசியல் பிரிவு போன்ற ஒரு பிரிவு இதற்கு தலைமை ஏற்றிருந்தவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மத்திய குழு உறுப்பினர் மணி. மக்கள் ஆய்வுப் பிரிவின் நடைமுறைத்தவறுகள் காரணமாக தோழர்கள் சிலருக்கு அதிருப்தியும், கருத்துமாறுபாடுகளும் எழுந்திருந்தது உண்மை அது கட்சிக்குள் விமர்சனங்களை முன்வைப்பதற்கு தடையாகவோ, அச்சுறுத்தலாகவோ, யாரையும் தடுத்துவைத்து சித்திரவதைப்படுத்தியதாகவோ, படுகொலை செய்ததாகவோ எதுவுமில்லை. அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஈபிஆர்எல்எவ் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சிசபை தோழர்கள் யாருக்கும் இடமளித்ததும் இல்லை.
கடத்தப்பட்ட தோழர் ரமேஸ் விடுவிக்கப்பட்டதுதான் ஈபிஆர்எல்எவ் இன் வரலாறு.
ஈபிஆர்எல்எவ் இற்குள் உட்கட்சிப் போராட்டம் இந்திய அரசுடனான உறவு குறித்தோ அல்லது வேறேதும் தத்துவார்த்த பிரச்சினைகள் தொடர்பானதோ அல்ல. நடைமுறை சார்ந்த பிரச்சினைகள், கட்சியில் பொறுப்பான பதவி நிலைகளில் உள்ளவர்களின் நடத்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தே அவை இருந்திருக்கின்றன. முற்போக்கான அணி, பிற்போக்கான அணி என இரண்டு அணிகளுக்கிடையில் இந்த போராட்டம் இடம்பெறவில்லை. கருத்து வேறுபாடு கொண்டிருந்த இரு அணிகளிலும் சரியுhன கருத்துக்கள், நடைமுறைகளும், தவறான கருத்துக்கள் நடைமுறைகளும் இருந்திருக்கின்றன. எனவே இவ்வாறு இரு அணிகளாக கோஷ்டி சேர்ப்பதற்கு எதிராகவே பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் இருந்தார்கள். இது எல்லா அமைப்புக்களிலும் எல்லா காலங்களிலும் இருப்பது போன்ற சரிக்கும் பிழைக்கும் இடையிலான ஒரு போராட்டம் தான்.
புத்மநாபாவும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒரு அணியில் இருந்ததாக கூறுவதிலும் உண்மையில்லை. நடைமுறை சார்ந்த விடயங்களில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு கொண்டிருந்த இரு அணிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையே பத்மநாபா மேற்கொண்டார்.
1986 ஆம் ஆண்டில் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திலிருந்தார் எனவே கட்சி வேலைகளுக்கான நிதியினை கட்சியின் அனைத்துப் பிரிவினரும் அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டன. கட்சியின் இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படைக்கு டக்ளஸ் தேவானந்தாவே பிரதம தளபதியாக இருந்தமையால் அனைத்து ஆயுதங்களும் அவரது தீர்மானத்தின் படியே பகிரப்பட்டது. எனவே 1986 ஆம் ஆண்டில் டக்ள்ஸ் தேவாந்தாவிற்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையின் பணம் மற்றும் ஆயுதக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதாக சுதர்சன் தெரிவித்திருப்பது பச்சை பொய். 1986 நடுப்பகுதியில் தோழர் தேவா மேலும் சில தோழர்களுடன் இந்தியாவிற்கு புறப்பட்டு சென்ற பின்னரே தோழர் கபூரிடம் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
உட்கட்சி போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸிற்கு ஆதரவு வழங்கியதாக கூறுவதிலும் உண்மையில்லை. இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் மீண்டும் அதுபற்றிறி எழுத அவசியமில்லை.
உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை புலிகள் தேடி தேடி அழித்ததாக கூறுவதிலும் உண்மையில்லை. எல்லா ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர்களும் ஒரே விதமான ஆபத்தை எதிர் நோக்கினார்கள். ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயுதங்களை வைத்திருந்த இராணுவ பிரிவை சேர்ந்த அங்கத்தவர்களே பெரும்பாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் எல்லோரும் சிறைவாசம் சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார்கள். சிறைகளில் கொல்லப்பட்டுமிருக்கிறார்கள்.
உட்கட்சி போராட்டம் நடத்தியவர்களில் பலர் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் சென்றதுடன் போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் அடங்கிப் போய் விட்டதாக சுதர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.
அது என்ன மற்றொரு வழிமுறை? ஆதனை யார் முன்வைத்தார்கள் என்று சுதர்சன் கூறுவாரா? 1986ம் ஆண்டு மார்கழி 13ம் திகதி புலிகள் தாக்குதல் தொடுக்கும் வரை போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை எந்த ஒரு ஈபிஆர்எல்எவ் நபரும் முன்வைக்கவில்லை. புலிகளின் தாக்குதலை தொடர்ந்து பலர் இயக்க நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டாhர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பிருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள், கல்வி கற்கவும் தொழில் செய்யவும் வாய்ப்பிருந்தவர்கள் அதனை தொடர்ந்தார்கள். பெரும்பான்மையானவர்கள் பார்வையாளர்களாக மௌனமாயிருந்தார்கள்.
இயக்கத்திலிருந்து விலகி கொண்டவர்கள் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஒதுங்கிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். புலிகளின் அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் நிதானமாக நடந்துகொள்ளவில்லை, புலிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் ஒதுங்கி கொண்டவர்கள் இருக்கிறார்கள், தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து போராடியதுடன் எந்தக் குற்றமும் இழைக்காத தம்மை புலிகள் தாக்கியதை, சித்திரவதை செய்வதை, கொன்றொழித்ததை தமிழ் மக்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்ததை அல்லது புலிகளுக்கு ஊக்கமளித்ததை கண்டு போராட்டத்தின் மீது வெறுப்படைந்து ஒதுங்கி கொண்டவர்கள் இருக்கிறார்கள் ஆனால், உள்ளுரில் இருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் இவ்வாறு விலகியிருந்த பலர், புலிகளின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று ஈபிஆர்எல்எவ் மீண்டும் செயற்பட முன்வந்தபோது திரும்பவும் ஈபிஆர்எல்எவ் இன் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக்கொண்டவர்களே அதிகம். ஓன்று அவர்கள் ஈபிஆர்எல்எவ் இன் நடவடிக்கைகளுடன் நேரடியாக பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஈபிஆர்எல்எவ் இன் நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்குபவர்களாக, அந் நடவடிக்கைகளுக்கு உடன்பாடானவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பவர்களாயிருக்கிறார்கள். இதற்கு புறம்பானவர்களை எமது கைகளின் விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.
ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் தாக்குதல் நடாத்தி 27 வருடங்கள் கடந்து விட்டன. தோழர் பத்மநாபா புலிகளால் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்றைக்கும் உலக நாடுகள் பலவற்றிலும், தமிழ் மக்கள் அகதிகளாக வாழும் தமிழ் நாட்டிலும், இலங்கையில் பல இடங்களிலும் தோழர் பத்மநாபாவின் நினைவு தினம் ஸ்தாபன ரீதியாகவும் அதற்கு புறம்பாகவும் அனுஷ்டிக்கப்படுகிறதென்றால் அதற்கான காரணங்கள் குறித்து ஒரு கணம் சிந்திக்குமாறு கட்டுரையாளரையும், வாசிப்பவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே (நுPசுடுகு) ஆகும்.
கிராமிய அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை நுPசுடுகு உருவாக்கிக் கொண்டது. ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ளக வெளியகப் வெளியீடுகள், அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. ஏன கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தபடி இவற்றை என்ன நோக்கத்துடன் ஈபிஆர்எல்எவ் மேற்கொண்டதோ அதே நொக்தத்தை எய்துவதற்கான குறிக்கோளுடன் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட தோழர்கள் பலர் இன்னும் எஞ்சியுள்ளனர். அத்தகைய குறிக்கோளை கொண்ட பல தோழர்கள் அவர்களின் பணிகளுக்கு பக்கபலமாயும் உள்ளனர். தோழர் பத்மநாபாவின் தியாகம் வீண்போகாது.
கொல்லப்படுபவர்கள் எல்லோருமே துரோகிகள் எனவும் சமூகவிரோதிகள் எனவும் மக்களை நம்பச் செய்யும் பணியை புலிகள் வெற்றிகரமாக செய்து வந்தார்கள். அதே பாணியில் கட்டுரையாளர் தோழர் பத்மநாபாவை துரோகியாக்கி முடித்துள்ளார். பத்மநாபாவை கொலை செய்த துப்பாக்கிகளுக்கு பின்னால் இந்தியாவின் மறைகரம் இருப்பதாகவும் கட்டுரையாளர் சந்தேகம் வெளியிட்டிருக்கிறார். தோழர் பத்மநாபவின் வழி வந்த எவருக்கும் அந்த சந்தேகம் இல்லை. கொலையாளிகளும், அதன் பின்னணியில் இருந்தவர்களும் புலிகளே.
நண்பரே கட்டுரையில் பெரும்பகுதியோடு நீங்கள் முரண்படவில்லை போல தெரிகிறது. சில நுண்ணிய தகவல்களில் மட்டும் முரண்படுகிறீர்கள். இதை விட இந்திய இராணுவம் வந்த போது நடந்த சம்பவங்களைத் தோண்டிப்பார்த்தால் இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களில் தொன்மையானவர்களுள் வரதராசப் பெருமாளும் பிரேமச்சந்திரனும் அடங்குவர்.
இன்றும் உயிருடன் வாழும் இந்த இருவரும் இவர்களுக்கு இணையாக செயற்பட்டவர்களும் தண்டிக்கப் படவேண்டிய நிலையில் நீங்களோ விமர்சனத்துக்கு உரியது என்பதோடு நிறுத்திக்கொள்கிறீர்கள்.
புலிகள் செய்த கொலைகள் மக்கள் குலத்துக்கு எதிரானது தான். சித்திரவதை, அழிப்பு முகாம்கள், கொலைகள் போன்ற இதுவரை தமிழ்ப் பகுதிகளில் நடக்காதவைகளை எல்லம் அவர்கள் செய்திருக்கிறார்கள். அப்படித்தான் விடுதலை கிடைக்கும் என அவர்கள் நம்பி மிருகத்தனமாக மாறினார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் இதை விடுதலையின் பேராலா செய்தார்கள் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பேரால் அல்லவா செய்தார்கள்.
ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை விட குரூரமாக ஈபிஆர் எல் எப் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து அழிப்பு நடத்தியது. சந்திக்கு சந்தி சோதனைச் சாவடிகளைப் போட்டு மக்களை சந்தேகமனர்வர்களைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்றது. யாழ்ப்பாணம், சுன்னாக, மல்லாகம், வல்லைச் சந்தி, சிறுப்பிட்டி, மருதனாமடம், திருனெல்வேலி ஆகிய இடங்கள் சாதாரண மக்கள் அருகே கூட செல்ல முடியாத மரணக் கோட்டைகளாகத் திகழ்ந்தன.
நாபா இடதுசாரியாக இருந்து இதற்குப் போராடமுடியவில்லை என்றால் அதற்காக தற்கொலை செய்து செத்திருக்கலாம். இன்று நாபாவை இடதுசாரி என்றால் இடதுசாரிகள் தற்கொலை செய்துகொள்ளலாம்.
நாபாவைக் கொலை செய்தது புலிகள் தான். வெற்று முட்டைக்கோது போன்ற புலிகளின் தலைமை யாரும் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய நிலையிலேயே இருந்தது. கடைசிவரை பயன்படுத்திக்கொண்டது இந்திய அரசுமட்டும்தான் . அனுராதபுரக் கொலை, சிங்கள் மக்கள் மீதான தாக்குதல், ஆனையிறவுத் தாக்குதல், மாத்தையா கொலை, பத்மநாபா கொலை,ரஜீவ் கொலை, முள்ளிவாய்க்காலில் திரளான மக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல் போன்ற எல்லா முக்கிய நடவடிக்கைகளிலும் இந்திய அரசே பின்னணியில் செயல்பட்டது.
நாபாவின் ஆரம்பகால பங்களிப்பும் தியாகங்களும் நிராகரிக்கப்பட முடியாதவை அதே வேளை அவர் தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளி. அந்தப் போர்க்குற்றவாளியைத் தண்டிப்பதற்கு புலிகளுக்கோ அன்றி இந்திய அரசுக்கோ எந்த உரிமையிம் இல்லை.
நாபாவின் அஞ்சலி நிகழ்விகளுக்கு கூட்டம் சேர்வதால் அவர் செய்தவை நியாயம் என்கிறீர்கள். உலகம் முழுவதும் அதிகமாக கூட்டம் சேர்வது புலிகளின் நிகழ்வுகளுக்கே என்கிறார்கள். அப்போ புலிகள் உங்களை விட நியாயமானவர்களோ?
மக்கள் ஆய்வுப் பிரிவு இராணுவப் பிரிவு அதனோடு உறுப்பினர்கள் முரண்பட்டார்கள் என்றெல்லாம் கதைவிடாதீர்கள். அவர்களின் உளவு நடவடிக்கைகளை சம்ப்வங்களின் கோர்ப்பாகக் கூட என்னால் முன்வைக்க முடியும். அதற்கு தோழர் மணி மத்திய குழுவிலிருந்து நியமிக்கப்பட்டார் என்பது உண்மை ஆனால் அதனை ஜேம்சும் சுரேசும் தான் தலைமைதாங்கினார்கள்.
இந்த உளவுத்துறை ஜேம்சு,சுரேசு இருவரினதும் இன்றைய நிலை என்ன?
13 வது திருத்தச்சட்டம்,மண்டையன் குழு மீளமைப்பு இரண்டுமா?
Mohan, A common Heroes Day or Martrys Day for both the North and East. That will suffice the Home Land Concept.
I wish Inioru.com well. I have nothing more to contribute. I am biologist.
பத்மநாபா பற்றி இலங்கை இந்திய தலைவர்கள் – பத்மநாபா நினைவு மலர் பார்க்க
http://pathmanabha.blogspot.com/
சுதர்சன் என்பவர் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோhரன் கூலியாள் என்பது அவருடைய எழுத்துக்களிலிருந்து துல்லியமாக விளங்குகிறது.
//நாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஓரணியிலும் முற்போக்கான குழுவினர் இன்னொரு அணியிலும் கருத்தியல் விவாதங்களை மேற்கொள்கின்றனர்//.
யார் அந்த முற்போக்கான குழுவினர்? தமிழர்களின் விடுதலைக்கு, விமோசனத்திற்கு, தமிழ் இனம் தம் அரசியல் அபிலாஷைகளை எய்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்குகள் என்ன? அவர்கள் சேர்ந்து இயங்கிய “இன்னொரு அணி” யாது? என்பதை அறிய ஆர்வம்—சுதர்சன் தெரிவிப்பாபரா?.
//இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் நாபா குழுவினர் டக்ளஸைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர்//
டக்ளஸ் சூளை மேட்டில் பொதுமக்கள் மீது “மோட்டுத்தனமாக” துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவத்தின் பின்னர்தான் ஈபிஆர்எல்எவ் இல் இருந்து அவர் நீக்கப்பட்டார். அந்த நிகழ்வு சம்பந்தமான வழக்குத்தான் தமிழ் நாட்டில் இன்னமும் டக்களஸ் மேல் நிலுவையில் உள்ளது எனபது சுதர்சனுக்குத் தெரியாததா?
//சுரேஷ் பிரேமச்சந்திரனின் கைப்பொம்மை போல நாபாவும் சுரேசும் செயற்பட மத்திய குழுவிலும் அமைப்பு முழுவதிலும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸ் இற்கு ஆதரவு வழங்கினர்//.
இதே கட்டுரையில் “அரசியலில் அரிவரி கூடத் தெரியாத டக்ள்ஸ் தேவாநந்தா” என டக்ளஸை விபரிக்கும் சுதர்சன்தான் “உட்கட்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸ் இற்கு ஆதரவு வழங்கினர்”. எனகிறார். சுதர்சன் யாரை நையாண்டி பண்ணுகிறார்?. டக்லஸ்சையா? முற்போக்கையா?, முற்போக்கு இளைஞர் சக்திகளையா?
//……பலர் தமிழ்ப் பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர்.இவர்களின் வெளியேற்றத்தோடு போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் மௌனிக்கப்படுகின்றன//.
அந்த “மற்றொரு வழிமுறை”தான் என்னவோ?. சொல்லுங்கள் சுதர்சன். –ஈழத் தமிழினம் முழுவதுமே ஆவலுடன் காத்திருக்கிறது.!
//சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்//.
அந்த நிகழ்வும், கொலைகளும் நடைபெற்றிருக்க்கூடாதுதான்.–அதை ஒப்புக்கொண்டு, அதற்காக ஈபிஆர்எல்எவ் எப்பொழுதோ மன்னிப்புக் கேட்டு விட்டதே. –எந்தத் தமிழ்க் கட்சியும் இதுவரை செய்யாதது.
//1990 ஆம் ஆண்டு பத்மநாபா சுரேஷ் குழுவினர் இந்திய இராணுவத்தோடு வெளியேற வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை திருகோணமலையில் முன்வைக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாச மாகாண சபையைக் கலைத்துவிடுகின்றார்//
தமிழர்களின் தாயகம் இணைந்த வடக்கு-கிழக்கு என்ற அடிப்படையை அங்கீகரித்து, அப்பொழுது அநத மண்ணில் வியாபித்திருந்த இலங்கை அரச படைகளை வெளியேற்றவும், திருகோணமலையில் தனிக் கொடியுடன் வடக்கு –கிழக்கு மாகாண அரசின் செயலகத்தை அமைக்கவும் காரணமாக இருந்த இலங்கை-இந்திய ஒப்பந்தம் செயற்பட விடப்படாது என்ற பிரேமதாசாவினதும் சிங்களப் பேரினவாதிகளின் நோக்கம் நிறைவேற, புலிகள் பிரேமதாசாடன் கைகோர்த்தனர். வடக்கு-கிழக்கு மாகாண சபையின் செயலாக்கம் முடக்கப்பட்டமையால், விரக்தியடைந்த அதன் முதலைமைச்சர் வரதராஜப் பெருமாள், அச் சபை தனித் தமிழ் ஈழத்திற்கான அரசியல் சபையாக (Constitution Assembly) இயங்கும் என்று அறிவித்ததையே ‘தனி ஈழப் பிரகடனம்’ என சிங்களப் பேரினவாதிகளால் பிரச்சாரப்படுதப்பட்டது. அந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டதன் நிகழ்வுகளையும், காரணங்களையும் விளக்காமல், அதையே சிங்களப் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிக்கும் தமிழர்களும் ஈபிஆர்எல்எவ்க்குச் சேறடிக்க அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
//……..ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ‘பிராந்திய நல்லிணக்கம்’ என்ற அடிப்படையில் இந்திய அரசுடன் உறவை வளர்த்துக்கொள்கின்றனர்//
தமிழுக்கும் தமிழர்களுக்கும் புத்துணர்ச்சி அளித்த தமிழுலகமே போற்றும் மறைந்த திமுக தலைவர் சி.என் அண்ணாதுரை ஒரு கால கட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரிந்த தனித் திராவிட நாட்டு கோரித்தான் போராடினார். பின்னர் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்று உணர்ந்தபோது, சீனா இந்தியாவை ஆக்கிரமித்த நிகழ்வைச் சாக்காக வைத்து தனித் திராவிட கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்துடனான சுயாட்சி என்ற கோரிக்கையை வைத்து அரசியலை முன்னெடுத்தார். அதற்காக எவரும் அவருக்குத் ‘துரோகி’ என்று முத்திரை குத்தவில்லை. மாறாக, மக்கள் நலன் சார்ந்த அரசியல் அணுகுமுறை என்றல்லவா பாராட்டினார்கள்.
மேலும், ‘இந்திய ஏகாதிபத்தியம்’, ‘இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்’, ‘இந்தியாவின் கைப்பொம்மை’, ‘இந்திய இராணுவத் துணைக் குழு’, ‘இந்திய கைப்பாவைகள்’ என்றெல்லாம் அரசியல் பூகோள யதாரத்தங்களை கருத்தில் கொள்ளாமல் என்னவோ மெத்தப் படித்த பண்டிதர்கள் போல் பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும், வியாக்கியானம் செய்து ஈழத் தமிழர்களை இன்றைய இழிநிலைக்குக் கொண்டுவந்தவர்களைப் பார்க்கும்போது, அக் காலகட்டத்தில், எதுவித அரசியல் கட்சி சார்புமற்ற ஒரு உயர்ந்த பதவியிலுள்ள இந்திய வெளிவிவகார அதிகாரி ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர் கூறிய கீழ்க்கண்ட வாரத்தைகள் நினைவுக்கு வருகின்றன.-
“தமிழர்கள், தூரநோக்கு அரசியல் திறனற்று, இந்தியப் படை வெளியேற அனுசரணையாக இருந்துவிட்டார்கள். ஆனால், அதே தமிழர்களும், தமிழ்த் தலைமைகளும், இந்தியாவின் உதவியை இரந்து, கெஞ்சி, வேண்டும் காலம் வரும். இப்பொழுது, ‘வேண்டாம்’ என்று ஒதுக்கிய 13வது திருத்தமே தேவலை, அது கிடைத்தாலே போதும், அதனை முழுமையாக அமுல்படுத்தினாலே போதும் என்ற நிலை வரும். அப்பொழுது அது காலம் தாழ்த்திய வேண்டுதலாக இருக்கும். அச்சமயத்தில், இந்தியா தன் பூகோள பொருளாதார, அரசியல் நலன்களுக்காக இப்போது போலல்லாது, சிங்கள அரசு பக்கமே சார்ந்திருக்கும். அத்துடன், தன் சொந்த வீட்டை விட்டு, கொழும்பில் ஒரு அடுக்குமாடியில் வதியும் ஒரு கந்தசாமி, யாழ்ப்பாண மண்ணில் ஒரு அப்புகாமியால் விளைவித்து அறுவடை செய்யும் வெங்காயத்தை, வெளிநாட்டிலிருந்து ஒரு சண்முகநாதன் அனுப்பும் பணம் கொண்டு வாங்கி ஜீவனம் நடத்துவார். முடியுமானால் உங்கள் தமிழ் மக்களுக்கும், உங்கள் அரசியல் தலைமைகளுக்கும் இதனைச் சொல்லவும்.”
அந்த அதிகாரி சொன்ன வார்த்தைகளின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியக்கிறேன். எம்மை வழிநடாத்துவதாகக் கூறிச் செயல்பட்ட தன்னிகரில்லாத் தலைமையின் அரசியல் வங்குரோத்தை எண்ணி விசனம் கொள்கிறேன். அதற்கு ஆட்பட்டு தம் தலையில் தாமே மண்ணை வாரிப்போட்ட தமிழர்களை எண்ணி வருந்துகிறேன். இதனை இன்னமும் உணராத சில பிரகஸ்பதிகளை, உணர்ச்சி மூடர்களை எண்ணி பச்சாதாபப்படுகிறேன். தமிழர்களின் விதியை எண்ணி நோகிறேன்.
அண்ணாத்துரையை ஆவென்று வாய் பிளந்து கருத்தெழுதி,அதிகாரியின் தீர்க்கதரிசனமென ஆகர்சிக்கும் அளவிற்கு,இந்தியா, Abimanu போன்றவர்களை வளர்த்து விட்டிருக்கிறது என்பதற்கு இந்த எழுத்தே சாட்சி.
பத்மநாப தமிழ் துரோகி கொளைகரார்கள்
Mr. Siva, it is time to decide and agree on a common Heroes Day for the North and East. That will satisfy the Traditional Homeland Concept.
Hi ! did hear from you for sometime, did you go and get the Jewish thing done to yourself as I advised.
Sutharsan, Jewish Jesus is the name of a book. All over America it is Five Member Committee for Doctoral Degrees. Two of my mentors are of that faith. The American here at Batticaloa is from California and born in 1966. I just added that Caste thing. Four of a Kind. Karaiyar, Goldsmiths, Vellalar and and Sengunthars. Four Special Operations. Back to normal.
வெள்ளை பயங்கரவாதம் தலை விரித்துஆடியபொது//……..ஈ.பி.ஆர்.எல்.எப் சிவப்பு பயங்கரவாததின் தேவை எற்பட்டது.
IN DEFENCE OF PATHMANABHA ON THE 25th ANNIVERSARY OF HIS DEATH
The 25th anniversary of Pathmanabha’s death is being celebrated all over the world. While most people honour and respect Pathmanabha and his freedom struggle, some online websites are saying disparaging things about him, trying to pin the blame on him and the EPRLF for activities of the past.
For instance, they are trying to blame the presence of IPKF in Sri Lanka between 1987 and 1990 on Pathmanabha. The fact is that the LTTE did not agree with the provisions of the Indo-Lankan Accord. The LTTE rejected the Accord and the EPRLF accepted it, forming the North East Provincial Council.
The LTTE wanted to destroy the EPRLF and the North East Provincial Council. They targeted and killed many members of the Council. They sent intimidation letters to local schools, trying to dissuade people from allying themselves with the Provincial Council. The LTTE killed over 1000 EPRLF members in the Northeast over a two year period from 1988 to 1990. The EPRLF resorted to tit-for-tat attacks against the LTTE for these killings. However, to blame these counterattacks of the EPRLF or on Pathmanabha is unfair. There were leaders within the EPRLF regionally who made decisions autonomously to protect their families against armed attacks from the LTTE.
The LTTE then started killing EPRLF family members all over the North East. One story relates how one girlfriend of an EPRLF member was kidnapped. The LTTE cadres then put chilli powder in her vagina in a bid to torture her, which created retaliatory outrage from the EPRLF. It is clear that this was an act of cruel provocation to try to paint the EPRLF along extremist lines, when the reality is that the EPRLF was normally on the side of finding peaceful solutions as opposed to resorted armed militance.
Not only this, but the LTTE tried to target prominent community leaders in the Tamil community in the North East. I can cite two examples, one in the North and the other in the East.
One individual in the North, who was a human rights activist named Rajani Thiranagama was killed by the LTTE, though the killing was blamed on the EPRLF. At first people believed the allegation, but later the truth came out. The truth is she was killed because she was working on a book exposing the LTTE and other militant groups, including the EPRLF, of wrongdoing. After her death, the book “Broken Palmyra”, was released, proving the case.
The other case involved another killing in the Eastern province in the city of Trincomalee. His name was A.G.A. Ganeshalingam. He was a retired government servant. He was a minister of the Northeast Provincial Council. He later came to have a dispute with the Provincial Council and EPRLF. The LTTE knew about this conflict and took advantage of it by assassinating him and having the blame pinned on the EPRLF. Up till now only a handful of people know the truth about his death, while the majority are still brainwashed to blame the EPRLF. I know the name of the LTTE intelligence asset who gave the order for his death, but I will withhold this information for now.
The EPRLF allied itself with IPKF to isolate the LTTE and push them into the jungle. The LTTE then tried to make a deal with the Sri Lankan government of President Premadasa. Soon afterwards, the EPRLF found out about the alliance between the Sri Lankan government and the LTTE, so they formed the Tamil National Army (TNA), recruiting people by force to protect the North East Provincial Council under the encouragement of India, because India was already planning its withdrawal.
After the IPKF withdrew, the EPRLF-controlled TNA fought against the LTTE and the Sri Lankan Army in the Eastern Province. The rest of them withdrew to India.
This chaos in the Northeast cannot be blamed exclusively on Pathmanabha. Clearly, all factions are involved including the LTTE and other militant groups, the Sri Lankan government and India.
After that, the EPRLF apologized in public for the casualties of the armed struggle. It is the only party in Sri Lankan history to ever make a public apology for past mistakes involving war casualties. This shows that the party is led by people of conscience.
Pathmanabha did not view the Indo-Lankan Accord as a permanent solution. This is just one reason why he did not agree to take the appointment to become the Chief Minister of the North East Provincial Council. He did not want to be used. He thought the Indo-Lankan Accord was a good temporary stopgap measure for the Tamils but did not perceive it as a good permanent solution. For this reason and others, he turned down the appointment as Chief Minister.
Some people have criticized Pathmanabha for the events of 1988 to 1990. Let us not forget that he apologized publicly for the mistakes committed by his party. He was clearly motivated by conscience to do so. He was active in the Tamil freedom movement since his early youth. He gave his life to the cause over a 20 year period as he died in his late 30s. Compared with other leaders of the time, he is clearly the most commendable for his efforts to find a peaceful solution and for attempting at all times to take responsible action to protect the lives of the innocent.