அண்மையில் முன்னணி சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல மீது நடத்தப்பட்ட கழிவு எண்ணெய்த் தாக்குதலுடன் தமக்கு தொடர்பில்லை என ஈ.பி.டி.பி. அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் ஈ.பி.டி.பிகட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னணி சோசலிச கட்சி அல்லது வேறும் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய எந்தவிதமான தேவையும் தமது கட்சிக்கு கிடையாது என ஈ.பி.டிபி. சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்குதலை ஈ.பி.டி.பி நடத்தியதற்கன ஆதரங்கள் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறாயினும் இதுவரை இவ்வாறான பல தாக்குதல்கள் மக்கள் போராடும் போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் திமுத்து ஆட்டிகலமீதான தாக்குதலை மட்டும் மறுப்பதனூடாக ஏனைய தாக்குதல்களை தாமே மேற்கொண்டதாக ஈ.பி.டி.பி ஒப்புதல் வாக்குமூலம cஅழங்குகிறதா?
தப்பாக நினைக்கவேண்டாம்.. மகிந்தசிந்தனையை பிழிஞ்சு வடிகட்டினபோது வந்த திரவம்தான் இது, இதை நாங்கள் தமிழாக்களுக்கு மட்டும்தான் உபயோகிக்கிறோம் என்பதை உறுதிபடதெரிவிக்கிறோம்
Dr. Pakiasothy Saravanamuthu is right. It is Alternative Policy in the North and East. I am still wondering how to respond to incidents like this outside our Traditional Homeland. It is not good always to hang up on President Mahinda Rajapakse. The press have to analyse and report these things well.