வானமும் பூமியும் ஒத்தாசையுடன் நடந்துகொள்ளும் விவசாயப் பிரதேசம் யாழ்ப்பாணம்! செம்மண் நிலத்தில் செடிகள் விளைந்து செழிக்கும் வளம்மிக்க நிலம்!!. ஒவ்வொரு வீடுகளிலும் தண்ணீர் ஊற்றெடுக்க மறுப்பதில்லை. எல்லா வளமும் பொருந்திய விவசாயப் பிரதேசம் யாருக்கும் உதவாத வரண்ட பூமியாகத் திட்டமிட்டு மாற்றப்படுகிறது. அந்த மண் தண்ணீருக்காக எவரிடமும் இதுவரை கையேந்தியதில்லை. கடல் சூழ்ந்த குடா நாடு முழுவதும் நன்னீருக்குப் பஞ்சமிருந்ததில்லை.
சுன்னாத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பாரிய அளவில் தொடர்ச்சியாக வெளியேற்றப்படும் கழிவு எண்ணை யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதையும் நாசப்படுத்தி வருகிறது. எண்ணைக் கழிவு மண்ணின் அடிவரை சென்று நன்னீர்க் கிணறுகளை எண்ணைத் தன்மையாக்கிவிடுகிறது. சுன்னாகம், கோப்பாய் போன்ற பிரதேசக் கிணறுகளில் ஆரம்பத்தில் காணப்பட்ட எண்ணைத்தன்மை இப்போது தெல்லிப்பளை வரை படர்ந்துள்ளது.
யாழ். தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் சனிக்கிழமை (13.12.14) தெரிவித்தார்.
குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
அதனை அடுத்து இன்று சனிக்கிழமை (13) சுகாதார பரிசோதகர் சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டபோது எண்ணைக் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுன்னாகத்தில் இயங்கும் அனல் மின் நிலையத்தை நொதேர்ன் பவர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் எம்.ரி.டி வோக்கேஸ் என்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். எம்.ரி.டி வோக்கஸ் என்பது எம்.ரி.டி கப்பிடல் என்ற மலேசிய நிறுவனத்தின் இலங்கைக் கிளையாகும்.
இக்கிளையின் இயக்குனர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பிரித்தானிய ஆளும் கட்சியின் மிக முக்கிய உறுப்பினரும், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமான நிர்ஜ் தேவா என்ற இலங்கையர் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்.
இவ்வளவு ஏகாதிபத்தியப் பலமும் பின்னணியும் பொருந்திய எம்.ரி.டி வோக்கஸ் யாழ்ப்பாணத்தை அழிக்கும் திட்டத்தின் பின்னால் பிரித்தானிய அரசின் நலன்களும் இலங்கை அரசின் நலன்களும் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தை அழித்து யாருக்கும் உதவாத பிரதேசமாக்கி வெறும் இராணுவக் குடியிருப்புக்களுக்கான வரண்ட பூமியாக மாற்றும் திட்டத்தின் ஒருபகுதியே குடிநீரை நச்சாக்குன் திட்டம்.
குடிநீர் நச்சாவது மட்டுமன்றி, விவசாய நிலங்கள் விளைச்சலற்றுப் போகும் அபாயம் காணப்படுகிறது.
மின்னுற்பத்தைக் கழிவுகளை அகற்ற பாதுகாப்பான முறைகள் இருந்தும் அவற்றைக் கருத்தில்வ் கொள்ளாது திட்டமிட்ட அழிவுகளை ஏற்படுத்தவே வர்த்தகப் பயங்கரவாதிகளுடன் ஏகாதிபத்தியங்கள் இணைந்து செயற்படுகின்றன. இதன் பின்புலத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கமும் காணப்படுகிறது.
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ipp power என்ற முறையில் பெற்றோலியக் கழிவு எண்ணைகளின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. சிறிய அளவிலான மின்னுற்பத்திக்கே பொருத்தமான இந்த முறையினூடாக உற்பத்தி செய்யப்படும் யாழ் குடா நாட்டின் மின்னுற்பத்தி பெரும் தொகையான கழிவுகளை விட்டுச் செல்கிறது. இக் கழிவுகளை உரிய முறையில் வெளியேற்ற பெரும் தொகைப் பணம் செலவாகும் என்பதால், உற்பத்தியில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ், மக்கள் பயன்படுத்தும் நிலப்பகுதிகளில் அவற்றை வெளியேற்றுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பான யாழ் குடா நாட்டுப் பகுதியில் மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்திய வரலாறு கிடையாது.
மறுபுறத்தில் தண்ணீர் நச்சாவைதக் காரணாக முன்வைத்து குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
புத்தரின் காலத்தில் ரோகிணி நதியின் நீருக்காக நடைபெற்ற யுத்தத்தை எதிர்த்து அவர் மக்களை அணிதிரட்டினார். பௌத்த மதத்தின் பேரால் உயிர்கள், உடமைகள், பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நாடு இலங்கை! இப்போது தண்ணீரும் அழிக்கப்படுகிறது!!.
இலங்கையில் வாக்குப் பொறுக்குவதற்காகக் காத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக் கூச்சமுமின்றி இந்த அழிவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நோதர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் வழகுத் தாக்கல் செய்யப்பட்டு ஆமை வேகத்தில் நகர்கிறது. வழக்குத் தாக்குதல் செய்தவரக்ளைக்கூடப் புலிகள் என்று பேரினவாதிகள் குறை கூறுகின்றனர்.
யாழ்ப்பாணத்தை நாசப்படுத்தும் இந்த நிறுவனத்தின் முக்கிய தலை பிரித்தானியாவில் வாழும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். இலங்கையில் மொரட்டுவ பிரதேசத்திலிருந்து பிரித்தானியாவில் குடியேறிய இவர் இலங்கை அரசியலில் நேரடித் தொடர்பு கொண்டவர். இலங்கை பிரித்தானியா போன்ற நாடுகளில் லொபி அரசியல் நடத்தும் தேவா இந்த நிறுவனத்தின் இயக்குனர் என்பதை முன்வைத்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இனியொரு உட்பட புலம்பெயர் தமிழர்கள் முன்வந்துள்ளனர்.
இதற்கான ஒத்துழைப்பு புலம்பெயர் ஊடகங்களிடமும், தேசியம் பேசும் அரசியல் பிழைப்புவாதிகளிடமும் கேட்கப்பட்டது. தமது எஜமானர்களான ஏகாதிபத்திய அரசியல் பினாமிகள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
இந்த அழிவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் லண்டன் கிளையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பறை – விடுதலைக்கான குரல் என்ற குழுவினர் இனியொருவிற்குத் தெரிவித்தனர்.
நிர்ஜ் தேவாவிற்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகளில் ஒன்று. இதற்காகவும் ஆர்ப்பாட்டத்திற்கும் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் பங்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தொடர்புடைய பதிவுகள்:
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தலையீடு:வெளிவராத உண்மைகள்
யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்படும் மக்கள் : பண வெறியும் பாசிசமும்
நிராஜ் தேவா பிரித்தானிய சிங்களப் பிரமுகர் என்றே கருத வேண்டும்.
யாழ் மண்ணின் புகழ் பாடும் பொழுது சுன்னாகத்தை மையமாகக் கொண்ட பிரதேசத்தில் சாதிப்பிரிவினைகள் கோயில், கிணறு என பிரிந்து தலைதூக்கியாடிய பயங்கர வரலாறும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அப்பிரிவினைகளின் இன்றைய நிலை எவ்வாறானதென தெரியாத அளவிற்கு அன்னிய ராணுவ அடக்குமுறையும் நேரடி உயர்மட்ட பிரித்தானிய அரச ஏமாற்று வித்தைகள் என சுன்னாகப் பிரதேச மக்களின் ஒருமைப்பாடு சீர்குலைக்கப்பட்டிருப்பதும் கவனத்தில் எடுக்கப்பட்டு புலத்தில் உள்ள சுதந்திரங்கள் பாவிக்கப் படவேண்டும். (அண்மையில் டேவிட் கமரூன் ஆடிய ஏமாற்று நாடகத்தின் ஒரு முக்கிய கட்டம் சுன்னாகப் பிரதேசத்தில் அமைந்த அகதி முகாம்களின் கொட்டகை ஒன்றில் நுழையும் அளவுக்கு தலைதூக்கியது)
இந்த நீர் மாசடைவு விடயத்தில் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு ஏற்கனவே சம்பந்தப் பட்டிருப்பதும் ஒரு முக்கியமான விடயம். கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரியா பகுதியில் ஹேலீஸ் நிறுவனத்தின் நிலக்கீழ் நீர் மாசடைவு சம்பந்தமாகவும் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு தெரிந்திராது இருந்தது போல் இன்னும் அது சம்பந்தப்பட்ட ராணுவ அடக்குமுறை தேர்தலில் பிரச்சாரத்தில் தவிர்க்கப்படுகிறது .
எதிரணி ஜனாதிபதி வேட்பாளான் மைத்திரிபால சிறிசேன 2010-இலிருந்பாது ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சன். அண்மையில் கட்சி தாவிய திஸ்ஸ அத்தநாயக்க புதிய சுகாதார அமைச்சன்.
யாழ் குடாநாட்டில் நிலக்கீழ் நீர்த்தேக்கத்தை விட வேறு வழியில்லை என்றாலும் இன்றைய ஸ்ரீலங்கா அரசியற் சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறை கூறுவது தவறாகத் தோன்றுகிறது.
புலம் பெயர் தமிழரின் ஆர்ப்பாட்ட உக்கிரமும் மற்றும் நிதானமாக வேறுவழிகளிலால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் ராஜபக்ச ஆட்சி மாற்றத்திற்கான எதிரணி அரசியல் தலைமைகளினது உண்மை நிலைப்பாடுகளை தெளிவாக்கும். தற்போதைய எதிரணி அரசியல் நிலைப்பாடு என்னவென்றால் – புலம் பெயர் தமிழர் அனைவரும் தப்பிப் பிழைக்கும் அழிக்கப்படவேண்டிய பயங்கரவாதிகள் என்பது மட்டுமே.
// வழக்குத் தாக்குதல் செய்தவரக்ளைக்கூடப் புலிகள் என்று பேரினவாதிகள் குறை கூறுகின்றனர்
இது கட்டாயம் பயங்கரவாதிகள் என்றே குற்றஞ் சுமத்தப் பட்டிருக்கும்