தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா இன்று சனிக்கிழமை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 6.4 பில்லின் அமொக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் தாய்வானுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா தவறான முடிவினை எடுத்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை இன்று குற்றம்சாட்டியுள்ளது. சீனா தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் இதுவரை அமெரிக்கா பதிலளிக்கவில்லை என சீனாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் சுசான் ஸ்டெவென்சன் தெரிவித்துள்ளார்.
யுஎச் 60எம் ரக விமானங்கள் 60 உள்ளிட்ட ஏராளமான யுத்த ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.