கடந்த சில மாதங்களாக தய்லாந்து பிரதமர் அபிசிட் விஜ்ஜேஜியோ வுக்கு எதிராக செஞ்சட்டைக் கலகம் நடத்து வருகிறது.
முன்னாள் இராணுவத் அதிகாரி கத்தியா சவாஸ்திபோல் தலைமையில் தலைநகர் பாங்காங்கில் நடந்து வரும் இக்கிளர்ச்சி தயாலாந்து முழுக்க பரவி வரும் நிலையில் கிளர்ச்சி இயக்கத்தில் தலைவர் உள்ளிட்ட ஏராளமான கிளர்ச்சிக்காரர்களை தயாலாந்து இராணுகம் சுட்டுக் கொன்று விட்டதாகத் தெரிகிறது. “30 நாள் காலக்கெடுவிற்கு நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற கிளர்சியாளர்களின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அரசுக்கு எதிராக பாங்காங்கில் பகிரங்க ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட போது சைலன்ஸ் துப்பாக்கி மூலமாக சுட்டு வீழத்தப்பட்டார் கத்தியா சவாஸ்திபோல் உயிருக்குப் போராடிய அவர் இன்று மரணமடைய நாடு முழுக்க எழுந்த கலவரத்திலும் கிளர்ச்சி முகாம்களில் போலீஸ் நுழைந்து சுட்டதிலும் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.செஞ்சட்டை கிளர்ச்சியாளர்கள் தலை நகர் பாங்காக்கின் மையப்பகுதியை கைப்பற்றியிருந்தனர் அவர்களிடமிருந்து அவ்விடத்தை மீட்பதற்கான போராட்டம் ஒரு பக்கம் என்றால் செஞ்சட்டைக் காரர்களுக்கு ஆதரவாக நாடு முழுக்க மக்கள் கிளர்ந்து வருகிறார்கள் . நகப்புற ஏழைகள் இக்கிளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மக்களின் அவல வாழ்வும் அவர்களை புரட்சியை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்தச் செஞ்சட்டை கிளர்சியாளர்களை இடது அறிவு ஜீவிகளும், முற்போக்காளர்களும் ஆதரிக்கும் அதே வேளையில் இப்போது கிளர்ச்சி இயக்கத்தை முற்றிலுமாக ஒழித்து பாங்காக்கை முழுமையாக மீட்கும் இராணுவ நடவடிக்கையை தாய்லாந்து அரசு முடுக்கி விட்டுள்ளது. இப்போது தாய்லாந்து முழுக்க மக்கள் வன்முறை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.