தாய்லாந்தில் அந்த நாட்டு அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தால் தலை நகர் பாங்கொக் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளது. தலை நகருக்குச் செல்லும் வழிகளில் சந்திகளை நிரப்பியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவு செய்யப்படாத மக்கள் மன்றம் ஒன்றினால் அரசை பிரதியிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக் காரர்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் 18000 அரசபடைகளைக் களத்தில் இறக்கியுள்ளது.
தாய்லாந்துப் பிரதமர் செல்வி யுன்லக் ஷினவாத்ரா ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்ல்களைப் பேசவருமாறு அழைத்துள்ளார். முன்னதாக இராணுவத்தின் தலையீட்டால் நாட்டிலிருந்து வெளியேறிய தக்ஷனின் சகோதரியான ஷினவார்த்தா தக்ஷனது பிரதிநிதி போன்று செயற்படுவதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறுகின்றனர்.
தாய்லாந்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசைக் கொண்டு அத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதனிடையே, வன்முறையை தவிர்க்கும் வகையில் தேர்தலை ஒத்திவைக்கும்படி யிங்லக் அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து ஆளுங்கட்சியான பியூ தாய் கட்சியின் தலைவரும், இடைக்கால அரசின் உள்துறை அமைச்சருமான சருபாங் ருவாங்சுவான் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை கலைத்த 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் விதி உள்ளது. அதன்படி பார்த்தாலும், பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வன்முறைக்கு பயந்து தேர்தலை ஒத்திவைத்தால், அது எதிர்காலங்களில் நடைபெறும் தேர்தலுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகி விடும் என்று சருபாங் ருவாங்சுவான் கூறினார்.
இந்நிலையில், பியூ தாய் கட்சியின் செய்தித் தொடர்பாளர் புரோம்பாங் நோப்பாரிட், தேர்தல் ஆணையத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் பிப்ரவரி 2-ஆம் தேதி கண்டிப்பாக தேர்தலை நடத்தியாக வேண்டும் என்பதே தங்களது கட்சியின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
எல்லா வளங்களையும் கொண்ட தாய்நாடு தேசிய உற்பத்தி முழுமையாக அழிக்கப்படாத நாடு. நேரடிக் காலனிக்கு உட்படாத தாய்லாந்து மேற்கு ஏகாதிபத்தியங்களின் குறியாக மிக நீண்டகாலமாக பலவழிகளில் தாக்குதலுக்கு உட்பட்டுவருகிறது.
Being attacked by whom, their own people not any outside forces. Apparently however much they protest the present goverment will come back to power again.