காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நேற்று இரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தரம் சதீஸ் என்ற இந்த அரசியல் கைதி, சிறைச்சாலையில் வைத்து தலையில் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது தேகத்தின் வலது பக்கம் முழுமையாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், தாக்குதலுக்கான நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதுவரை சிசிக்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தாக்கப்பட்டது தற்செயலாகவே அடையாளம் காணப்பட்டது. இன்னும் பல கைதிகள் பேரினவாட்க அரச படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
Sri Lanka Police is following standard procedure all over the island. In the East they have recruited sufficient Tamils and Muslims for local civil administration.