தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்க நடவடிக்கை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ தொலைநகல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் இனக்கொலையாளியுடன் இணைந்து பாசிசத்தயும் இனக்கொலையையும் போர்க்குற்றத்தையும் வெறுப்புணர்வையும் தனது அரசியலாக்கிக்கொண்ட வை,கோ இப்போது தலிபான்களைப் பிடித்துள்ளார். தமிழ் நாட்டில் மிருகங்கள்போல நடத்தப்படும் தமிழ் அகதிகளை மனிதர்கள் போல சுதந்திரமாக உலாவ ஆவன செய்ய பாசிஸ்ட் மோடியுடன் கூட்டுத்திட்டம் ஒன்றை வை.கோ வகுக்கலாமே.
வை.கோ ,மோடிக்கு அனுப்பிய கடிதத்தின் விபரம்:, “தமிழகத்தைச் சேர்ந்தவரான கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்காஸ்தானத்தில் ஹிராட் நகரத்துக்கு அருகில் ஜூன் 2 ஆம் தேதி தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்ற செய்தி கடும் அதிர்ச்சியைத் தருகிறது.
பாதிரியார் அலெக்சிஸ் வாழ்நாள் முழுவதும் மனிதாபிமான சேவையை பழங்குடி மக்களுக்கு செய்து வந்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் மிகுந்த சேவை புரிந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானத்தில் தன் உயிருக்கு ஆபத்து நேருவதையும் பொருட்படுத்தாமல் பழங்குடி மக்களுக்கு குறிப்பாக, ஏழை மாணவர்களுக்கு பள்ளிப் பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வந்துள்ளார்.
அவரது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரிடலாம் என அஞ்சுகிறேன். எனவே ஆப்கானிஸ்தான் அரசு மூலமாக தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்களை மீட்டுத்தர வேண்டும் என இந்தியப் பிரதமரை அன்புடன் வேண்டுகிறேன்” என வைகோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துவிட்டு, பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும் வைகோ தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இனக்கொலையாளியுடன் இணைந்து பாசிசத்தயும் இனக்கொலையையும் போர்க்குற்றத்தையும் வெறுப்புணர்வையும் தனது அரசியலாக்கிக்கொண்ட வை,கோ இப்போது தலிபான்களைப் பிடித்துள்ளார்-Mr VAIKO Is anyone listening you?you always wrte letter like JJ.OR otherwise cring over DEADBODY,that is all your work.Please go to US and relax till next election.
Better stay with ‘Skype’ Uruthirakumar… & do skype conference…