8 .05 .2012 அன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் இனம்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கையின் தகவலின் படி இச்சம்பவம் “யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கலட்டிச் சந்தியில் இருக்கும் இராணுவ காவலரனிலிருந்து 20 மீற்றர் தூரத்திலேயே இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணிந்தபடி உந்துருளியில் வந்த 4 ஆயுததாரிகளே தர்சானந்த் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தர்சானந்த் தலையிலும், கைகளிலும், உடலிலும், கால்களிலும் பலத்த காயமடைந்துள்ளார்.” என புலம்பெயர் யேர்மன் தமிழ் இளையோர்களாகிய நாம் மிகுந்த கவலையுடன் அறிகின்றோம் .
முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலையை நினைவுகொள்ளும் முகமாக யாழ் இளையோர்கள் பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்குசெய்த காரணம் அடிப்படியிலே இவர்களை அச்சுறுத்தும் பொருட்டு சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட வன்முறையை இச் சம்பவம் கோடிட்டு காட்டுகின்றது .
இவ்வாறன மாணவர்கள் மீதான வன்முறை இது முதல்தடைவை அல்ல . அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் இளையோர்கள் எக் காலத்திலும் எவ்விதமான அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டார்கள் என்பதையும் இச் சம்பவம் சிங்கள அரசுக்கு விலக்கி இருக்கும் என்பதை நாம் ஆழமாக நம்புகின்றோம் .
தர்சானந்த போல பல்லாயிரக்கணக்கான மாணவர் சமூகம் தொடர்ந்து தமது உரிமைக்காக எதிர்வரும் காலத்தில் நிச்சயமாக போராடப் போகின்றார்கள் என்பதற்கான அறிகுறியும் இவ்வாறன சம்பவங்களில் காண முடிகின்றது .
ஈழத்தமிழர்கள் மீதான ராணுவ ரீதியான போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் சில மாத இடைவெளியில் ஒரு லட்சத்துக்கும் மேலான மக்களை சிங்கள அரசு கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்து இன்றும் தனது கொலைவெறித் தாண்டவத்தை பல்வேறு தளங்களில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது . அன்றும் இன்றும் மாணவர் சமூகம் என்னில் அடங்கா துன்பங்களை அனுபவிக்கின்றது . சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட வன்முறை தமிழ் மாணவர்கள் மீதாக தொடருமானால் அன்று எப்படி மாணவர் சமூகம் அடக்குமுறையை உடைப்பதற்கு தள்ளப்பட்டார்களோ அதே வழியில் எதிர்காலத்திலும் செயற்படுவதற்கு தயங்கமாட்டார்கள் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஆழமாக நம்புவார்கள் .
இக்கட்டமான நெருக்கடிக்குள்ளும் தங்கள் உயிருக்கு அஞ்சாமல் தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படும் அனைத்து மாணவர்களுடன் நாம் இருகரம் பற்றி அணைக்கும் நேரத்திலும் அவர்களுக்கு ஏற்படும் சிங்கள் அரசின் அச்சுறுத்தலை மற்றும் வன்முறையை நாம் வாழும் யேர்மன் அரசிடம் மற்றும் அரச கட்சிகளிடம் , ஊடகத்திற்கும் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருகின்றோம் என்பதை இத்துடன் தெரிவிக்க விரும்புகின்றோம் .
யேர்மன் ஊடகங்களுக்கு அனுப்பிய பிரதியை இங்கு யேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் இணைக்கின்றோம் .
நன்றி
இனியும் இந்த அட்டூழிய இனத்துடன் சேர்ந்து வாழ முடியாதென்பதனை உலகம் புரிந்து கொள்ளட்டும். அச்சுறுத்தி அடக்கி ஆள நினைத்தால் மறுபடியும் உரிமைக்காய் சுதந்திரத்திற்காய் போராட வேண்டிய வழி வேறாக இருக்கும்.
Whole world is envy of the Sri Lankan Tamil Diaspora. What a country? You can get a passport in a hour.
Mr. Gajendrakumar Ponnambalam had paid a visit.