Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தருமபுரி மக்களின்மீது காவல்துறையினரின்வன்முறைத் தாக்குதல் – வெடிகுண்டு, துப்பாக்கி பயிற்சி என பொய்வழக்கு

இனியொரு... by இனியொரு...
07/04/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

தருமபுரி – பாதிக்கப்பட்ட நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி மக்களின்மீது காவல்துறையினரின்வன்முறைத் தாக்குதல் – வெடிகுண்டு, துப்பாக்கி பயிற்சி என பொய்வழக்கு

ilavarasans_relativesகடந்த 27.06.2014 அன்று தருமபுரி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிராமப் பொறுப்பாளர் துரை உள்ளிட்ட 7பேரை விசாரணை என்கிற பெயரில் தருமபுரி காவல்துறை கைதுசெய்துள்ளது. துரை மற்றும் ஊர் தலைவர் சக்திவேல் தலைமையில் இளைஞர்கள் மூன்று முறை ஆயுதப்பயிற்சி எடுத்ததாகவும் 2012 அன்று கிராமங்களை எரித்த பா.ம.க. மதியழகன் என்பவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு Indian arms act, explosive substance act, ஐ.பி.சி. 153ஏ, 120பி, (criminal conspiracy, promoting enmity) பிரிவின் அடிப்படையில் துரை உள்ளிட்டு 28 பேர்மீது 28.06.2014 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு. சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறது. இரவு நேரங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் படைகள் நத்தம் கிராமத்தைச் சுற்றி ரோந்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து 28.06.2014 அன்று விடியற்காலை காவல்துறையினர் திருப்பதி என்கிற மாணவரைக் கைதுசெய்தது. 29.06.2014 அன்று இரவு 1.00 மணிக்கு மீண்டும் 5 பேரை பெங்களுரில் கைதுசெய்திருக்கிறது. நத்தம் கிராமத்தில் 20 பேர், அண்ணாநகரில் 10 பேர், கொண்டம்பட்டியில் 20 பேர் என படிக்கும் மாணவர்களை, இளைஞர்களை குறிவைத்து தேடிவருகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதில் அதிகளவு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உண்மையில் நடந்தது 04.07.2014 அன்று நத்தம் கிராம மக்கள் இளவரசன் நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடத்திட அனுமதி கேட்டனர். பின் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளநிலையில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதன் பின்னணியில் தான் காவல்துறையின் கைது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக இளவரசன் நினைவுநாளில் மைக்செட் வைக்ககூடாது என்று அதியமானையும், உடன் சங்கர், அசோக் என்பவர்களையும் வரவழைத்து 27.06.2014 அன்று மாலை தருமபுரி B1 காவல்நிலையத்தில் விசாரிக்கிறது. அவர்களைத் தேடி வந்தவர்களில் துரை உள்ளிட்ட ஆறுபேரை கைதுசெய்தது. அவர்களைக் கடுமையாக அடித்து 3.30 மணிவரை விசாரணை நடத்தியது. விடியற்காலை காவல்துறையினர் துரை என்பவரை மட்டும் அழைத்து நத்தத்திலுள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு பின் இளவரசன் கல்லறைக்கு அருகில் வந்து குழிதோண்டச் சொல்லி காவல் துறையினர் வைத்திருந்த துப்பாக்கியை கீழே போட்டு அதனை எடுத்துக் கொடுக்கச் சொல்லி புகைப்படம் பிடித்துள்ளனர். பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ளச் சொல்லி மிரட்டி கையெழுத்தும் வாங்கியுள்ளனர். பெங்களுரில் கைதுசெய்யப்பட்ட 5பேரில் அருள் என்பவரை மட்டும் அடித்துக் காலை உடைத்துள்ளனர். அவற்றை வெளியே சொல்லக்கூடாது என்றும், கீழே விழுந்து கால் உடைந்ததாக எழுதி கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மேலும் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையும், காவல்துறை கூறும் செய்திகளும் பல முரணான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

1. துடி என்கிற இயக்கம்தான் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க அழைத்துச் சென்றதாக கூறுகிறது. கிறிஸ்துதாஸ் காந்தி வழிகாட்டலில் இயங்கும் இவ்வியக்கம் ஒரு கிறிஸ்தவத் தொண்டு நிறுவனம். மாணவர்களுக்குக் கல்வி ரீதியான உதவிகளை செய்து வருகிறது. கிராமங்கள் எரிக்கப்பட்டபோது அவ்வூர் மாணவர்களை அரக்கோணத்திற்கு அழைத்துச் சென்று கொடுத்த (Skill Development program) பயிற்சியைத்தான் ஆயுதப் பயிற்சிக்குச் சென்றதாக சோடித்துள்ளது காவல்துறை. இவ்வியக்கத்தின் தலைவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி என்பவரை காவல்நிலையத்தில் விசாரித்துக்கொண்டிருக்கிறது.

2. இன்னொன்று நத்தம் கிராமத்திற்கு செல்லும் வழியில் இளவரசன் குழிக்கு சிறிது தூரத்தில் சட்ட விரோதமாக காவல் துறையால் சி.சி.கேமரா பொறுத்தப்பட்டு அவ்வழியில் செல்லும் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதை நத்தம் கிராம மக்களும் அறிவர். இந்நிலையில் இளவரசன் குழி அருகில் துப்பாக்கி பதுக்கியிருந்தால் அது கேமராவில் பதிவாகியிருக்குமல்லவா? அதை வெளியிடவில்லையே காவல்துறை? புதைப்பது பதிவாகும் என்பது தெரிந்தே துப்பாக்கியை துரை என்பவர் பதித்து வைத்தாரா? என்கிற கேள்வி எழுகிறது.

4 காவல்துறை கண்காணிப்பில் தொடர்ந்து இருந்துவரும் நத்தம் கிராமத்திலிருந்து 2013 ஆம் ஆண்டில் மூன்று முறை பயிற்சி எடுக்கச் சென்றதாக கூறுகிறது. அப்பொழுதே காவல்துறை அவர்களை ஏன் கைது செய்யவில்லை?

5. கடந்த 30ந்தேதி நாயக்கன் கொட்டாய் பகுதியில் சில வன்னியர் சங்க உதிரி சக்திகள் தலைமையில் சாலைமறியல் செய்யப் போவதாக துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது. இளவரசன் நினைவுநாளை முன்னிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கோடு இவை ஏற்பாடு செய்யப்பட்டதாகவேத் தெரிகிறது. இளவரசன் நினைவு நிகழ்ச்சி அனுமதி கேட்டதேத் தவறு என்று அதனைத் தடுக்க கைதுசெய்யும் காவல்துறை வன்னியர் சங்க உதிரிகள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6. மேலும் வன்னியர் தரப்பிலிருந்து ஒருவர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை கூறுகிறது. அவற்றில் இளவரசன் நினைவுநாள் அன்று அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் அங்கு கூடுவார்கள். அதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என புகார் வந்துள்ளதற்கு பிறகு தான் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

மேலும் காவல்துறையின் இவ்வன்முறை செயலில் எஸ்.பி அஸ்ரத் கார்க்கின் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையும் இணைந்திருக்கிறது. இளவரசன் இறுதி அஞ்சலிக்கு ஐ.ஏ.எஸ் சிவகாமி 144 தடையை மீறி நத்தம் கிராமத்திற்குள் வந்திருந்தபோது அவரை கைதுசெய்ய பெரும் போலீஸ் பட்டாளங்களுடன் அஸ்ரத் கார்க் உள்நுழைந்தார். அப்போது மக்கள் அவரை தடுத்து முற்றுகையிட்டனர். பிறகு நவம்பர் 7 கிராமங்கள் எரிக்கப்பட்டு ஒரு வருட நினைவு கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார் எஸ்.பி. அதனை மீறி மூன்று கிராம மக்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 35க்கும் மேற்பட்ட மக்கள்மீது வழக்கு பதியப்பட்டது.

இன்று இளவரசன் நினைவு நாளுக்கு அனுமதி கேட்டு மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருந்தது. இத்தகையச் சம்பவங்களும், எஸ்.பி. யின் நடவடிக்கைக்கு மேலுள்ள அதிகாரிகளின் கடும் அழுத்தமும் காரணமாக இருக்கிறது எனத் தகவல்.

மேலும் கிராமங்கள் எரிக்கப்பட்டும், இளவரசன் இறந்தும் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தாழ்த்தப்பட்ட அம்மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள, தங்களுக்கான உரிமைகளை கேட்கவோ, ஆதிக்க சக்திகளை எதிர்க்கவோ கூட பலமின்றி இருக்கிறார்கள். இவர்கள் மீதுதான் பா.ம.க மதியழகனை கொல்வதற்கான திட்டம் தீட்டியதாக பொய் வழக்கைப் பதிவுசெய்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையின்மூலம் சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு துணை நிற்பதையே காட்டுகிறது.

இரமணி
மா.லெ மக்கள் விடுதலை
aruvi1967@gmail.com
9566087526

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அவுஸ்திரேலிய அகதிகள் UNHCR அறிக்கை – நடவடிக்கை இல்லை

அவுஸ்திரேலிய அகதிகள் UNHCR அறிக்கை - நடவடிக்கை இல்லை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...