புகழ் பெற்ற தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா மாநில பாஜக அரசால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றவழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கடைசி ஆண்டான 2013- ல் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தார். அந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாற்றி பாஜக பெரிய போராட்டங்களை நடத்தியது. அப்போது தெஹல்கா தருண் தேஜ்பாலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டையும் கிளப்பியது. அவர் தன் கீழ் பணிபுரியும் பெண்ணை பாலியல் வன்முறை செய்தார். ஒரு லிஃப்டில் செல்லும் போது அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியது.
தருண் தேஜ்பால் முற்போக்கான ஊடகவியலாளர் இந்துத்துவத்திற்கு எதிராக அவரைப் போல காத்திரமாக பணி செய்த வேறு பத்திரிகையாளர்களே இல்லை எனலாம். தெஹல்கா இதழ் பாஜக தொடர்பாகவும் குஜராத் படுகொலைகள் தொடர்பாகவும் பல்வேறு ஆவனங்களை சாட்சியங்கள் , ஸ்டிங் ஆபரேஷன் மூலமும் வெளிக் கொண்டு வந்ததால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் நீண்ட காலமாகவே பாஜகவினர் அவரை குறி வைத்திருந்தனர். 2013-ஆம் ஆண்டு கோவாவில் ஆட்சி செய்த பாஜக அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தருண் தேஜ்பால் லிஃப்டில் நான் அந்த பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் பற்றிய விடியோவை பார்க்க வேண்டும் என்று கேட்ட போதும் போலீஸ் அந்த விடியோக்களை வழங்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளுகும் மேலாக நடந்த வழக்கில் இப்போது ஆதாரம் எதுவும் இல்லை. அவர் மீதான எந்த குற்றசாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கால் தெகல்ஹா இதழ் பெரும் சரிவைச் சந்தித்தது. அவரது தனிப்பட்ட வாழக்கை சிதைந்து போனது. இப்போது விடுதலையாகியிருக்கும் தருண் தேஜ்பால் “எங்களுடைய உடைந்த வாழ்க்கையை சரி செய்ய முயற்சிக்கிறோம், எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம்.கடந்த ஏழரை வருடங்களாக இந்த குற்றச்சாட்டுகளால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொண்டு வந்தோம்.” என்று தன் விடுதலை தொடர்பாக தெரிவித்திருக்கிறார்.