ஜெனீவாவுக்கான ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜெயதிலகவின் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக தயான் ஜெயதிலக நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு வருடகால சேவையைப் பூர்த்தி செய்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் இவரது சேவை முடிவுக்கு வரவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான கடிதம் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நிரந்தரப் பிரதிநிதி யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.