தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. இந்த விபரம் மாத்தளை மாவட்டத்துக்கு வெளியே வாழும் பெரும்பாலோருக்கு தெரியாது என்றாலும் இதுதான் உண்மை. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி என்ற அடிப்படையிலும், இதொகா இந்த மதவாத அநீதி தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நாட்டில் வாழும் தமிழ் இந்து மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை அம்மன் ஆலய உடைப்பு தொடர்பாக கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு எதிர்க்கட்சி. நாம் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இந்த மதவாத அநீதி தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டோம். நமது கடமையை நாம் எப்போதும் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம். இதொகா ஆளும் அரசின் பங்காளி கட்சி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் இந்து மக்கள் ஒரு சமஅந்தஸ்துள்ள மக்கள் பிரிவினர் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு நியாயமான நிரந்தர தீர்வு அவசியம் என்பது பற்றி தமது ஆட்சி தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இதொகா தெளிவு படுத்த வேண்டும்.
Honourable Mano Ganeshan should stick to the Western Province. Otherwise he may be asking for help one day.
அவர் அவருடைய மலையக மக்களுக்காக துணிந்து பேசுவதில் என்ன தவறைக்கண்டீர் ? உமக்கு முதுகெலும்பு இல்லாம ல்விட்டால் அதற்கு அவர் என்ன செய்யமுடியும் ??