இலங்கைத் தீவில் முதலாவது தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறை 1915 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல். பிரித்தானிய ஏகாதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்கிய தேசிய இன முரண்பாட்டின் பேரினவாத முகவராகச் செயற்பட்ட அனகாரிக தர்மபால எல்லா சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் எதிரான “பௌத்த தத்துவவியலை” வளர்த்தவர். முஸ்லிம்களைக் கடலில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் என்று சூழுரைத்தவர். தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களுக்கு எதிரான முதலாவது வன்முறைக்கு தமிழ்ப் பேசும் இந்துக்களும் மானசீக ஆதரவை வழங்கிய கறைபடிந்த வரலாற்று பக்கங்கள் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் நீண்ட உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ச்சியாக அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்ட பேரினவாத அரசுகள் முஸ்லீம்களுக்கும் ஏனைய தமிழ்ப்பேசும் தேசிய இனத்தவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை கூர்மைப்படுத்தின. அதனூடாக அதிகாரவர்க்கத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டன. காலனி ஆதிக்கத்தின் பின்னர் உருவான ஒவ்வொரு பாராளுமன்ற அரசியல்வாதிக்குள்ளும் ஒவ்வொரு அனகாரிக தர்மபால மறைந்திருந்ததை இன்று வரைக்கும் காணலாம்.
“இலங்கை என்பது பௌத்தர்களின் புனித நிலம், பௌத்த மதத்திற்கும் அதன் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சிங்கள தேசிய இனத்திற்கும் சேவைசெய்யும் மனப்பான்மையோடு அவர்களுக்குத் இடையூறு விளைவிக்காமல் ஏனைய தேசிய இனங்கள் இலங்கையில் வாழலாம்” என்பதே பௌத்த மேலாதிக்க வாதத்தின் அடிப்படை மனோபாவம் என்கிறார் அமரிக்க ஆய்வாளட் நீல் வோத்தா.
அனகாரிக்க தர்மபால நிலப்பிரபுத்துவத்தையும் அன்னிய மூலதனத்தையும் தக்கவைத்துக்கொள்ளும் வகையான பௌத்த மற்றும் சிங்கள மேலாதிக்கத்தை சிங்களப் பகுதிகள் எங்கும் நிறுவினார். பிரித்தானியர்களுக்கும் காலனி ஆதிக்கத்திற்கும் எதிராக முழக்கங்களை முன்வைத்து சிங்கள பெருந்தேசிய வெறியைப் பௌத்ததின் புனிதத்தோடு இணைத்து வளர்த்தார். மறுபுறத்தில் ஏகாதிபத்தியங்கள் அவரின் நடவடிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகளை வழங்கின.
இதன் மறுபுறத்தில் அனகாரிக தர்மபாலவின் தமிழ் வடிவமாக ஆறுமுக நாவலர் உருவாக்கப்பட்டார். சாதீயத்தை மறு நிர்மாணம் செய்வதிலிருந்து ஆரம்பித்த ஆறுமுக நாவலர், இந்தியப் பார்பனீயத்திற்கு நிகராக யாழ்ப்பாண வேளாள மேலாதிக்க வாதத்தை உருவாக்கினார். பிரித்தானிய காலனீயத்த்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்த நாவலரும் கூட அதே ஏகாதிபத்தியத்தின் முழுமையான ஆதரவுடனேயே தமிழ் குறுந்தேசிய வாதத்தின் நச்சு வேர்களைப் படரவிட்டார்.
யாழ்ப்ப்பாண வேளாள மேலாத்திக்க வாதத்தின் நச்சுக் கலவையைக் கொண்ட தமிழ்க் குறுந்தேசிய வாதமும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமும்
முஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையைச் சமூகத்துள் செலுத்தின. இஸ்லாமியர்களுக்கு எதிராக இவை பல சந்தர்பங்களில் கைகோர்த்துக்கொண்டன.
ஏகாதிபத்தியங்களும், பேரினவாதமும் நிலை கொள்வதற்கான ஆயுதமாக இந்த முரண்பாடு பயன்பட்டது. ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்பட்ட தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை நடத்துகின்ற எல்லைவரை சென்றன.
மறுபுறத்தில் முஸ்லீம்களைப் பயனபடுத்திக்கொண்ட பேரினவாத அரசுகள் வடகிழக்குத் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை அவர்களை கொண்டே ஆக்கிரமித்தது.
தேசிய இனங்களிடையேயான மோதல்கள், பேருந்தேசிய ஒடுக்குமுறை என்று இலங்கைத் தீவு அவலத்தின் விழிம்பிற்குள் இழுத்துவரப்பட்டது. மக்கள் மோதிக்கொள்ள அதிகாரவர்க்கம் அமைதியாகப் வாழ்ந்து, மகிழ்ந்து, திழைத்துக் கொழுத்தது.
முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடந்தேறிய பின்னர், பல நீண்ட வருடங்களின் பின்னர் முஸ்லீம்கள் தம்மீதான ஒடுக்குமுறை நேரடியாக அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். அரச படைகளின் துணையோடு அமைதியைப் போதிப்பதாக பொய்சொல்லும் பௌத்த துறவிகளின் ரவுடித்தனம் தம்புளையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
தம்புள்ளையில் பல வருடங்கள் பழமையான பள்ளிவாசலை அகற்றுமாறு திமிர்த்தனத்தோடு உத்தரவிட்டிருக்கிறது இனப்படுகொலை அரசு.
பௌத்த புனித பூமி என்பதால் ஏனைய மதங்களுக்கு இடம் கிடையாது என்கிறது இலங்கை அரசு. மகிந்த குடும்பம் ஒவ்வொரு மேடையிலும் முழக்கமிடும் “இலங்கை அனைவருக்குமான நாடு” என்பதன் உள்ளர்த்தம் ஆக்கிரமிப்பு என்பதை இன்னுமொரு தடவை நிறுவியிருக்கிறது.
தமிழ்ப் பேசும் முஸ்லீம்களும் இலங்கையில் சுயநிர்ணய உரிமைகொண்ட தேசிய இனம் என்பதை இலங்கை அரசு அவர்களுக்குச் சொல்லிகொடுத்திருக்கிறது. முஸ்லீம்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதையும் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுமே அவர்களது நண்பர்கள் என்பதை பாடப்புத்தகங்கள் இல்லாமலேயே கற்பித்திருக்கிறது.
முஸ்லீம்கள் மீதான இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து குறித்துக்காட்டத்தக்க குரல்கள் வெளிவரவில்லை.
தம்புள்ளையில் பள்ளிவாசலுக்கு பௌத்த சிங்களப் பேரினவாதிகள் மிரண்டு எழுந்ததைப் போலவே, நல்லூரின் மூலையில் பள்ளிவாசல் உருவானால் கொதித்தெழும் அதே குறுந்தேசிய மனோ நிலையிலேயே அவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை எழுதாமல் சொல்கிறார்கள்.
இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற முஸ்லீம் தேசிய இனத்திற்கும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயும் வேறுபாடுகள் உள்ளன. முரண்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அவற்றிலிருந்து ஒற்றுமையை வளர்ப்பதற்கும் புதிய சமூகம் கற்றுக்கொள்ளும். இந்த ஒற்றுமையிலிருந்தே இலங்கைப் பாசிச அரசிற்கு எதிரான போராட்டம் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும்.
There was a time that Sir Ponnambalam Ramanathan risked his life and sailed to England during the World War I to release the Sinhala leaders from Jail. Venerable Anagarika Dharmapala wrote to him fro Kolkatha to accept the Donoughmore reforms. We do have a new Si Lanka. It will take time to produce Statesman out of politicians.
ஜெனிவாவில் முஸ்லிம்நாடுகள் இலங்கைக்கு வாக்களித்துக் கையொப்பமிட்ட மை காயுமுன்னரே பள்ளிவாசல் தகர்த்தெறியப்படுகிறது.ஆலாவாய்ப் பறந்து மகிந்தவிற்கு கொடிதூக்கிய முஸ்லிம் மந்திரியின் “அல்லாவோ அக்பர்” காலில் மிதிபட்டுக்கிடக்கிறது.முஸ்லிம்கள் தமிழ்த்தேசியமா? சிங்களத்தேசியமா? முஸ்லிம் தேசியமா? எதுவும் எவருக்கும் பிடிபட்டபாடாயில்லை.வலிந்து சுமத்தப்படுகிற தேசியக்கட்டுமானச் சிலுவைகளில் அறையப்பட்டுப்போகின்றார்கள் அப்பாவிமானிடர்கள்.(அனாகரிக)அனகாரிக தர்மபாலாவோ, ஆறுமுகநாவலரோ அவரவர் மதங்களையும் அடையாளங்களையும் தூக்கியபடி ஆடியவர்கள்தான். முஸ்லிம்களை தேசிய இனமெனச்சொல்லவருகிற சபா ஆறுமுகநாவலரின் கொள்கையையே பின்பற்றி அதைச் சொல்கின்றாரா? எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ?
அரபு வழி இஸ்லாமிய,சிங்கள பேரினவாத பௌத்தர்களின் நாடகமே தகரப் பள்ளிவாசல் கதை.
தமிழினப்படுகொலையை மூடி மறைக்கவும்,இஸ்லாமியர் அற்ற இந்தியக் தூதுக் குழுவிற்கு எதிரான நடவடிக்கையின் பகுதியே இந்த நாடகம்.
சர்ச்சைக்குரிய தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சனை நேரில் போய் வந்த முஸ்லிம் மீடியா ஃபோரம் தலைவர் என்.எம்.அமீன் ஒரு கதை சொல்கிறார்.
“கடந்த ஓரிரு வாரத்தில் திடீரென்று சர்வதேச சக்திகளின் சதியாம்.”
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமிழில் அறிக்கை விடுகிறார்கள்:”…………அதேநேரம் ஒட்டுமொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பௌத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்துகொள்ளவும் கூடாது….”
இது இஸ்லாமியத் தமிழர்களை பூண்டோடு அழிக்கும் தமிழினப்படுகொலை.
http://kattankudi.info/2012/04/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2/
பிரச்சினையின் போது,தமிழில் ஓதக் கூடாது ,வேற்று மொழியில் மட்டும்,என்றும் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
அப்ரூவர் ஐயர் முதல் அனைத்துக் கைகூலிகளும் இந்த சம்பவத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஹிட்லர் காலத்தில் எழுதப்பட்ட பின்வரும் வரிகள் .
First they came for the communists,
and I didn’t speak out because I wasn’t a communist.
Then they came for the trade unionists,
and I didn’t speak out because I wasn’t a trade unionist.
Then they came for the Jews,
and I didn’t speak out because I wasn’t a Jew.
Then they came for me
and there was no one left to speak out for me.
தவறுகளுக்கு துணை போபவன் மற்றவர்களையும் அழித்து தானும் அழிவான் .
இன்றைய அரசின் கைகூலிகள் இந்த சம்பவத்தில் இருந்து கற்றுக் கொள்ளத் தவறினால் கொழும்பு வீதிகளில் அனாதைப் பிணமாக இவர்கள் நிச்சயம் விழுவார்கள்
தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாறு தூக்கிற கதைதான்.
ஹிட்லரை ஒப்பீடு செய்வதும், ஹிட்லர் காலக் கவிதைகள் சொல்வதும்,என்ன புதிய நவீனத்துமா?
யூதர்கள் எல்லோர் மனதிலும் ஆளுமையுடந்தான் இருக்கிறார்கள்.
That is really correct Santhiramoulian. 1956. General Dwight D. Eisenhower. Military Industrial complex. Democratic Senators Evan and Birch Bayh, Indiana, USA. 1964. Cross Roads of America. Dr. Bill: 812-237-2418.
இராமநாதன் “சிங்களவர்களால் தேசியத்தலைவராக” போற்றப்பட்டதின் காரணம் என்ன? தமிழ் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்பட்டார் என்பதாலா? அரபு வழி முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சிங்களவர்களுடன் கை கோர்த்துக் கொண்டவர் என்பதாலேயே,அவர் சிங்களவர்களால் மதிக்கப்பட்டார்.
ஆயினும் அகண்ட அரபுவாதம், மதம் மாற்றிய தமிழர்களை,தமது கைக் கூலிகளாக,அடிமைகளாக மாற்றிக் கொண்டு,அரபு வழித் தலைமை இன்றும் பொய்யான பிரச்சாரங்களின் மூலம்,நச்சு விதைகளைப் பரப்புகிறது.இன்றும் இதே அரபுத் தலைமை, இஸ்லாமியத் தமிழர்களை மொழி மாற்றம் செய்ய ,”உலாமாக்களை”,அகண்ட அரபு வாதத்திற்காய்,சட்ட விரோதமாக இலங்கையில் தங்க வைத்து ,
தமிழினப்படுகொலையில் தம் பங்கை செலுத்துகிறார்கள்.
இந்த வரலாற்றுப் போக்கை விளங்கிக் கொள்ளாமல்,”தமிழ் இந்துக்கள்,தமிழ் இஸ்லாமியருக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்றும்,அது உளவியல் தாக்கம் என்றும்,புது வரலாறு ‘அளத்தல்’,அறிவற்றதே.
சபா நாவலன்! கண்ட இடத்தில் கொண்டை முடியக் கூடாது.
It is obvious that World War Three is on. All know against whom? Albert Einstein can rest in peace. He said that the Fourth World War will only be fought with sticks and stones.