தம்புள்ளை சம்பவத்தை அடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பின்னால் வெளிச்சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை விவகாரத்தை ஒட்டி எழுந்த உணர்வுகள் இன்னும் அடங்கிப் போகவில்லை. நாம் பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியும். எனவே இதனையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.
இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பின்னால் வெளிச்சக்திகள் இருக்கின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடர இடமளிக்க முடியாது.
நாட்டில் துரித அபிவிருத்தி ஏற்படும் வேளையில் துரிதமாக இனங்கள் மத்தியில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பாலமாக தொழிற்பட்டு அரசியல் தீர்வுக்கான அடுத்த கட்ட நகர்வில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.
நாட்டில் யுத்தம் முடிவடைந்தாலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் காணப்பட வேண்டியுள்து. இதனை சர்வதேசமும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
எனவே இந்த அரசியல் தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அர்த்தமுள்ள சமாதானத்தை தோற்றுவிக்க முடியும். அரசாங்கம் நாமும் பரஸ்பரம் நம்ப வேண்டும். இதன் மூலம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்டையில் செயற்பட முடியும்.
இரு தரப்பும் அவநம்பிக்கைள் மத்தியில் செயலாற்ற முடியாது. இந்த நம்பிக்கையைத் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றது. எனவே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றேன் என குறிப்பிட்டார்.
இந்த அரசியல் வாதி தனது இனத்தை விற்று உண்டி வளர்த்துக் கொண்டிருப்பவர். பதவிகளுக்காக தனதும் தனது இனத்தினதும் சுய கெளரவத்தை அடகுவைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அடுத்த தேர்தலிலாவது இவர்களைப் போன்றவர்களுக்கு இவர் சார்ந்த சமூகம் பாடம் கற்பிக்கும்.
நல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
Janab Rauf Hakeem is there as Minister of Justice to clear all those guys who are still detained though the war ended three years ago. He is also a lawyer by profession by the founder leader of the Sri Lanka Muslim Congress. He is trying to prop up his base in the Eastern Province using his current cabinet position. He is from Kandy. Prisoners of the war is a national level problem. This mosque burning is a provincial level problem.